துன்பத்துள் துன்பமாய் துன்பம் அனுபவித்தல்.

209

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

15•05•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(319) மனிதனே புனிதன் —
துன்பத்துள் துன்பமாய் துன்பம் அனுபவித்தல்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“தனது சக மனிதனுக்கு ஒருவன் ஏதாவது பிழையைச் செய்தான் என்றால், அது செய்தவனுக்கே துன்பமாக வந்து அமையும். திருந்தாத ஒருவனிடம் நாம் ஏன் வெறுப்புக் கொள்ள வேண்டும்? ஆண்டவன் மனிதர்களிடம் எத்தனையோ நல்ல குணங்கள் தந்து வாழ வைத்துக்கொண்டு இருக்கிறார். கடவுளுக்கு நம்மீது எத்தனை அன்பு இருக்க வேண்டும்? அவர் தீயவர்களிடம் கூட எவ்வளவு கருணை செய்கிறார்? அவர்களும் செல்வத்தையும், உடலில் வலிமையும், புகழையும் பெற்று உலகில் வாழவில்லையா? நீயோ தெய்வீக அருளாடி! நல்லோர், தீயோர் என்ற பாகுபாடு பார்க்கலாமா? தெய்வ குணமாகிய தயவு உன்னிடம் அல்லவா நிறைந்திருக்க வேண்டும்? உன்னை அவதூறு பேசினாலும், உன்மீது பகை கொண்டு தூஷனைகள் புரிந்து விட்டாலும் தான் என்ன? அருளாடியாகிய நீ அவர்களது உள்ளத்தை ஊடுருவிப் பார்க்க வேண்டாமா? தம்பனவசியன் எத்தகையவன் என்பது உனக்கே தெரியுமல்லவா? அத்தகைய வன் என்ன பேசினால்தான் உனக்கு என்ன? தீ யோர், கீழோர் உன்னைப் பற்றி என்ன நினைத்தால் தான் என்ன? அறிவைக் கொண்டு சிந்தனை செய்து பார்! ”

“அதற்காக வருத்தப் பட வேண்டிய காரணங்கள் எதுவுமே இல்லை என்பது உனக்குப் புலனாகும். தெய்வீக வழியில் சென்று விட்ட நீ அவர்களை வெறுக்கவோ, அல்லது சபிக்கவோ என்ன உரிமை இருக்கிறது? இயல்பாகவே ஊர் மக்கள் அனைவரும் அருளாடி க்கு உறவினர், நண்பர் போன்ற வர்களே! தவிர உண்மையில் அருளாடிக்கு மற்றும் ஒரு சிந்தனை வேண்டும்! மற்றவர் கள் செய்திடும் ஒவ்வொரு பிழைகளுக்கும், மருத்துவம் தரும் ஒளஷதம் போல், நல்ல தெய்வீக குணங்க ளை நீ கொண்டிருக்க வேண்டும். உன்னை வைதவர்களுக்கு, வெறுப்பவர்களுக்கு உன்னிடம் உள்ள அன்பு என்னும் மருந்தைக் கொடுப்பாய்! குற்றம் செய்கின்ற அனைவரும் தீயவர்கள் கிடையாது. அவர்கள் நல்ல பாதையில் இருந்து வழி தப்பிப் போனவர்களே! அப்படிப்பட்டவர் களுக்கு நீ வழி காட்டியாய் இருப்பதை விடுத்து, வீணாகக் கோபம் கொள்ளல் தகுமா? அப்படியே உன்னை மற்றவர்கள் வரும் கேட்டை எண்ணி ஏசினால்தான் என்ன? அதனால் உனது இயல்பான குணங்கள் எல்லாம் மாறிப் போய் விட்டதா? மாற வில்லை அல்லவா? அப்படி யெற்றால் உனக்கு உண்டான கோபமும், தீமையும் உனது உள்ளத்தில் தான் உண்டாயிற்று என்பதை மறந்து விடாதே. ஸ்ரீ ஈஸ்வர நீதியைப் புறக்கணிப்பு செய்து விடாதே! மன்னிக்கும் மனம் இல்லாமல் கொடுத்த சாபமானது உன்னையும் பாதிக்கச் செய்யும்போது நீயும் உண்மையை அறிவாய் ” என்று சற்குரு நாதர் கூறியதும் அவர் மாதங்களில் வீழ்ந்து தேம்பி அழுதாள் அருளாடி திருமதி. காளியம்மாள்.

இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிக்கச் சென்றவன் போல, கேரளாவில் மாட்டு வியாபாரத்தில் இருக்கும் பணத்துடன் கடுமையாக வட்டி வசூலிலும் ஈடுபட்டுக் சேர்த்த பணம் கைவிட்டுப் போனதைப் போதை தெளிந்த பிறகு, காலில் கட்டுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் போது தான் சுத்தமாக அறிந்து கொண்டான். தக்க உதவியுடன் வீடு சேர்ந்த பிறகு பணம் போனதால் வந்த வீண் கோபமும், வருத்தமுமே வாழ்வு ஆனதால் அடங்காத ஆத்திரத்துடன் கருவிக்கொண்டு இருந்தான். குணமானவுடன் அருளாடியைப் பழி வாங்க வேண்டும். எல்லாம் அவளால் வந்த தொல்லைதான் என எண்ணினான். இப்போது காலில் புது விதமான வலி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சுரீரென இடைவிடாது வந்து கொண்டே இருந்தது. நாள்பட நாள்பட அதிலிருந்து சீழ்வடியும் கொப்புளம் ஆனது. அருளாடி திருமதி. காளியம்மாள் மனம் நொந்து விட்ட சாபம் சென்று பற்றிக் கொண்டு விட்டது. நமது சுவாமி அவர்கள் தவத்திரு.SSM ஐயா அவர்களுடன் ஆறு ஆண்டுகள் ஒன்றாக இருந்து தவம் செய்து விட்டு கிராம வீட்டிற்குத் திரும்பிய போதும் தம்பனவசியன் குணமாகாமல் படுத்தபடுக்கையாகக் கிடந்தான். அவன் செய்த அடாவடித் தனங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்களின் குருநாதர் அவர்களுக்கு ஜென்மாந்திரப் பகைவனாகத் திகழ்ந்த தீய மாந்திரீக சக்தி படைத்தவனின் நேரடி வாரிசுதான் கிராமத்தில்
நமது சுவாமியை வஞ்சம் தீர்ப்பதற்காகப் முன்கூட்டியே பிறந்து காத்துக் கொண்டிருந் தான். அவன் குடியிருந்த வீட்டிற்குப் பின்புறம் இருந்த கூரை வீட்டுடன் இருந்த இடத்தைக் கைப்பற்றினர் கொள்வதற்காக, அந்த வீட்டைக் நெருப்பிட்டுக் கொளுத்தி மிகவும் குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டான். ஊருக்குள் அடிதடி ரகளைகளில் அவன் குடும்பத்தினர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. ஊரே பயந்து நடுநடுங்கிக் கொண்டு இருந்தது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button