நானே ராஜா! நானே மந்திரி!

241

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

13•05•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(317) மனிதனே புனிதன் —
நானே ராஜா! நானே மந்திரி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உள்ளம் என்ற நாட்டில் கோபம் என்ற ராஜன் அக்கிரமங்கள் என்ற மந்திரிகள் செயலினால், பாவம் என்ற சேகரிப்புகள் அதிகரித்து விடுகின்றன. துரோக சிந்தனைகள் என்ற அதிகாரம் உண்டாகிறது. இங்கே துரோகம் என்பதன் விளக்கம், ” உலகத்தில் உள்ள மக்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளாமல், தன்னைத் தனது உள்ளத்தை வேறு படுத்திக் கொள்ளுதல் என்பது பொருளாகும். ஒரு மனிதனை வெறுத்தாலும், தகாத வார்த்தைகள் கூறினாலும், அல்லது கோபத்தினால் பிறருக்குத் தீமைகள் செய்திட எண்ணுவதும் கூட உலகத்தின் இயல்பினை விட்டு வேறுபடும் குற்றம் என்பதே இயற்கையை நேசித்த நல்ல குருமார்களின் உண்மையான தீர்ப்பாகும். ஆன்மிக தியானம் என்பது இயற்கையின் இயல்பைப் பற்றியும் அதனைப் படைத்த இறை சக்தியைப் பற்றியும் போதிப்பதற்காக உருவாக்கப் பட்ட ஓர் அமைப்பு ஆகும். அந்த அமைப்பை உருவாக்குபவர்கள், அமைப்பை வழிநடத்துபவர்கள், மற்றும் அதன் அங்கத்தினர்கள் இவர்களுக்குள், இன்பமோ, துன்பமோ இவற்றில் எதனாலோ மனதின் பாங்கு கெட்டு விட்டால்
அதுவே துரோகமாகக் கருதப் படுகிறது. அத்துடன் நில்லாமல் தியான அமைப்பைச் சீர் குலைக்கும் வண்ணம், பொய் கலந்த பேச்சும், கபடமான சூழ்ச்சியும், நம்பினோர்க்கு மோசம் செய்தலும் குற்றமாகும். ஓர் அமைப்பின் கட்டளைக்குக் கீழ்படிந்து நடக்கும் அங்கத்தினர் கள் போலவே, ஆறாம் அறிவில் பகுத்தறிவு பெற்ற அனைத்து மக்களும் எல்லா அமைப்புகளை விட மேலான அமைப்பாக விளங்கும், இறைசக்தியை வழி காட்டியாய் கொண்டு விளங்கும்,
இயற்கை அமைப்பான உலகில் தெய்வீக தர்மத்தை மீறாமல் அனுசரனையுடன் நடந்து கொள்ள வேண்டும். இதனை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எல்லா ஜீவர்களுடனும் ஐக்கியப் படாமல் தன்னை வேறு படுத்திக் கொண்டிடும் ஆத்ம துரோகிகள் ஆவர் என ஸ்ரீ ஈஸ்வர நீதி சத்திய தர்மத்தை எடுத்துரைக்கிறது

அத்துடன் தியான வழியில் மனிதன் தன் மனதைத் தூய்மை யாக வைத்துக் கொள்வது மிக அவசியம். மனிதனது சுதந்திரம் என்பதனை மீறிய செயலைச் தான் விதி என்று ஆன்றோர் பெருமக்கள் ஒப்புக் கொண்டு விட்டனர். பவானி தியானம் சங்கத்திற்கு ஞானகுருவின் பிரிவால் ஏற்பட்ட நல்லதோ அல்லது கெட்டதோ இரண்டையுமே சமமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெற்று விட்ட தியான நண்பர்கள் அனைவரும், பவானி தியான சங்கத்திற்கு எப்போதும் போல் வழக்கமாகக் சென்று வருவது என்றும், இதனைத் தவிர்த்து சிறந்த வழி உண்டு என எண்ணுபவர்கள், உண்மையாக வே அதனைப் பின் பற்றிப் போவதில் எந்த விதத் தடைகளும் இல்லை எனச் சங்கல்பம் செய்து கொண்டனர்.
உலகத்திற்கு நன்மையைத் தருவதுமான மோலான அறிவுக்கு இசைந்ததுமான உறு பொருள் கிடைத்திருக்கும் போது அதனையெல்லாம் விட்டு விட்டு புகழையும், பொருளையும் தேடும் பிறவழிகளைத் தேடுவதை துச்சமாக மதித்தனர். தியான நண்பர்கள் மனதைத் சுத்தமாகவும், சுதந்திரமாகவும் வைத்துக் கொள்வதில் உறுதி
யுடன் பின்பற்றினர். சத்தியத்தை விட்டு விட்டு மற்றவை நமக்கு மகிழ்வைத் தரப் போவதில்லை என்ற எண்ணத்தை வலுச் செய்து கொண்டனர். ஞான வாழ்வு வாழ வேண்டும் என்றே ஆசை கொண்டனர். மனமாகிய ஆஸ்ரமத்தில் அடிக்கடி மெளன விரதம் இருந்து தங்களுடைய மனவலிமையைப் பெருக்கிக் கொண்டு விட்டனர். ஆனால் தியானசங்கத்தில் ஒன்று கூடிப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த அநேக நல்ல உள்ளங்களுங்கு முதலில் அதிர்ச்சியும் பிறகு இது சரியாக வேண்டும் என்ற ஏக்கமும் உண்டானது. எதையும் ஊடுருவிப் பார்த்து இந்த விவகாரத்தில் சிறப்பு மிக்க அம்சங்களாகிய நல்ல குணங்களைக் கொண்டவர்கள், அற்பவிஷயங்ஙளைத் தள்ளி விட்டு அமைதி காத்தனர். தியான சங்கத்திற்கு ஞான குருவினால் ஏற்பட்டு விட்ட மனதின் பாதிப்பையும், மன அமைதி கெட்டு விட்ட சூழலையும், எவ்வளவு சீக்கிரம் மாற்றி அமைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மாற்றி, மறுபடியும் அமைதியை உள்ளத்தில் ஏற்படுத்திக் கொண்டவர், தவத்திரு. SSM. சுப்பிரமணியம் ஐயா அவர்கள் தான் என்றால் மிகையாகாது.

ஒரு நல்ல ஸ்தானத்திலே இருப்பவர்கள், நன்மை தரும் இயக்கத்தை நடத்துபவர்களைப் பற்றித் தனக்குத் துன்பம் செய்கிறார்கள் என்று வெளியே மக்களிடம் வதந்திகளைப் பரப்பினால் , அதனை நம்புகின்ற மக்கள் சங்கத்தின்தொடர்பை விட்டு விட்டு வதந்தியின் பின்னால் சென்று விடுவர். இதுதான் உண்மையில் நடந்தது.
மக்களிடம் சொன்ன செய்திகள் : ” சங்கத்தில் யாரும் குருவாகிய என்னை மதிப்பதில்லை. நான் சென்று வரும் இடங்களைக் கேட்கிறார்கள். என்னைத் துப்பறிகிறார்கள். எனது முன்னால் தனது கால்களை நீட்டி அமர்கிறார்கள். சங்கத் தலைவர் தானும் குருவாக விரும்புகிறார்.” இதுதான் புகார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button