சீடன் எப்போது குருவாகிறார்?

207

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

11•05•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(315) மனிதனே புனிதன் —
சீடன் எப்போது குருவாகிறார்?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
” குரு பக்தி மிகுந்த சீடனுக்கு அவன் எதனை அடைய எண்ணு கின்றானோ, அதற்குரிய தகுதி இருக்கின்றனவா என்பதை அறியவே அவனைச் சோதனை செய்வித்து ஆட்படுத்துகிறார். கர்மப்பிணிகளில் இருந்து விடுபட, கர்மப்பிணிப்பு அற்றவராக விளங்கும் இறை சக்தியினை அறியப்படுத்தி சகல தளைகளில் இருந்தும் விடுதலை பெற உதவுகின்றார். இறை சக்தி எல்லா இடங்களிலும் வியாபித்துக் கடவுளாகவும், உலகில் வாழும் உயிராகவும் காட்சி தருகின்றார். ஆனால் உயிரின் அறிவையும், ஆற்றலை யும் வரையறுக்கப்பட்ட நிலையில் இறை சக்தியினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உயிரும், இறைசக்தியும் பிறப்ப தில்லை. எங்கும் முடிவில்லாத தாக வியாபித்திருக்கும், பரமாத்மாவாகிய இறை சக்தியே, வரையறுக்கப்பட்ட ஆற்றலுடன், அறிவுடன் உயிராத்மாவாக விளங்குகிறது.”

“அத்துடன் பிறவாத இயற்கை ஒன்றையும் இறை சக்தி படைத்துள்ளது. அதையே — 1.அனுபவிக்கின்றவன், 2.அனுபவம் 3.அனுபவிக்கப்படும் பொருள் எனப்படும் இவற்றை, இம் மூன்றையுமே எண்ணங்களாக உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. எங்கெங்கனும் வியாபித்தும், ஆதி அந்தம் அற்றதாகவும் விளங்கும், பரமாத்மாவாகிய இறை சக்தியானது, ஜீவித உடல் பெற்ற மனிதனிடம் ஜீவாத்மாவாக இருந்தாலும், மனிதன் செய்யும் கர்மாவில் யாதொரு பங்கும் பெறாததாய் இருக்கிறது. ஞானதாகம் உடைய சீடன் தேடி அலையும் பொழுது, குருநாதன் அவனுக்கு இம்மூன்றுமே இறை சக்தி என உணர்த்தி அருளுகின்றார். சீடன் இம்மூன்றினுள் இறைவன், முடிவே இல்லாதவராக, விஸ்வரூப வடிவினராக, கர்மப்பிணி அற்றவராக இருக்கி றார் என உணர்ந்து தெளிவடை கின்றான். எல்லாத்தளைகளில் இருந்தும் விடுதலை பெற சீடனுக்கு உதவுகின்றார்.”
— ஸ்ரீ ஈஸ்வர நீதி

“இந்த ஈஸ்வர நீதியை சீடனுக்கு உணர்த்துவதோடு நில்லாமல், தான் கற்ற கலவி, வித்தைகள் அனைத்தையும் போதனைப் படுத்தித் தன்னையும் விடச் சிறந்தவனாக, தனக்கும் மேல் உயர்ந்தவனாக ஆக்கினால் மட்டுமே, குரு அப்போது குருவாகிறார். குருநாதர், சற்குரு நாதர் ஆகின்றார். சீடன் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளும் குருவும், சீடன் வளர்ச்சியைத் தடுத்திட முயலும் குருவும் உலகாதய குருவாக மாறித் தனது ஸ்தானத்தை இழந்து விடுகின்றார். பிறவா இயற்கை எனப்படும் எண்ணங்களே குருவைத் தண்டித்து விடுகிறது. குரு குருவாக மாட்டார்.”
— ஸ்ரீ ஈஸ்வர நீதி

” சீடனும் குருவை மதித்து மரியாதை செய்பவனாக இருக்க வேண்டும். குருவை அவமதிக் கும் சீடன் என்றுமே உயர்வடை வதில்லை. இறையருளுக்கும், குருவருளுக்கும் பாத்திரமாவ தில்ல. குருவை நிந்தித்துக் குருதோஷம் உள்ளவனாக மாறி விடுகிறான். பாவாத்மனாக, சண்டாளனாக இயற்கை தண்டிக்கின்றது. கெடுதல் எண்ணங்கள், பேராசை, தீமை சக்திகள் வசமாகி உலகினுக்குக் கேட்டை விளைவித்து விடுகிறான். குருசாபம் பெற்று விட்டவனால் வீட்டிற்கும், ஊருக்கும் கேடுதான் விளையும். எவ்வித நன்மையும்
உண்டாகாது. சீடன் குருவாக மாட்டான். வேற்றுமை மறந்து, உள்ளம் திருந்தி, நல்லவனாகவும், இறைபக்தி உடையவனாகவும் மாறி விட்டால், இறையருள் கருணையுடன் குருதோஷப் பரிகாரம் கிடைத்து, தீமைகள் விலக்கி, வாழ்வார்கள்.”
— ஸ்ரீ ஈஸ்வர நீதி

குற்றாலம் தியான மாநாட்டில் பள்ளிச் சிறுமி கூறிய பதில், “குரு தனது சீடனை தன்னையும் விடச் சிறந்தவனாகச் செய்யும் போது குரு குருவாகின்றார்.”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button