ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
29•04•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(303) மனிதனே புனிதன் —
மன மொத்த நல்ல மனைவி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமி அவர்களைச் சந்தித்து விட்டு வந்த பிறகு மனம் லேசான மாதிரி லகுவாக இருந்தது. சுவாமிகளின் அற்புதம் கிராமத்தில் நிகழ்ந்ததைக் கண்டு வந்த பிறகும், பிரமிப்பு இன்னும் தீரவில்லை. மகிழ்வோடு எங்களை ஆசீர்வதித்து அனுப்பிய பிறகுதான், கூடுதல் பொறுப்பு எங்களுக்கு வந்து விட்டதாகவும் எண்ணினோம். செய்கின்ற காரியங்களில் ஒருவித சிரத்தையோடும், அக்கரை யோடும் நடந்து கொண்டோம். இதனால் எங்களுக்கு எடுத்த காரிய ஜெயம் உண்டான படியே இருந்தது. ஒருநாள் சோமனூரில் சுவாமி நடத்தும் பாடங்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். பிறகு சுவாமி என்னை அருகே அழைத்து, “பசுபதி உனக்கு என்ன ஆகவேண்டும்? ” என்று கேட்டார்கள். நான், “பசுபதி எனது அண்ணனின் மைத்துனர். என் அண்ணியின் தம்பி” என்று கூறினேன். அதற்கு அவர், “நன்றாகச் சொல்” என்றார்கள். நான் புரியாது விழித்தேன் . அப்போது அவர் புன்சிரிப்புடன், “பசுபதி உன் அண்ணனின் மைத்துனர் என்றால், ஏன் அவர் உனக்கும் மைத்துனர் ஆகக் கூடாது?” என்றார். “பாஸ்கரா, பசுபதியின் தங்கை தான் உனக்கு மனைவியாக வரப் போகிறவர். இது குருநாதரால் நிச்சயிக்கப் பட்ட முடிவு “என்று சுவாமி சொன்னதும் நான் திகைத்து நின்றேன்.
ஏனென்றால் அது சமயம் எனக்குப் பெண் பார்க்கும் படலம் நிறையவே நடந்தது. “வெளியில் உனக்குப் பெண் அமையாது.
பசுபதியின் தங்கை தான் உன் மனைவி. நிறைவான வாழ்க்கை யை நீங்கள் வாழ்வீர்கள் ” என்று கூறி ஆசி வழங்கினார். அது போலவே திரு.பசுபதியின் தங்கை, செல்வி பிரேமாவுடன் எனது திருமணம் நடந்தது. ஒத்த மனம் உள்ள மனைவி அமைய எங்கள் சுவாமி அவர்கள் ஆசி யும், சற்குரு நாதரின் கிருபையும் எங்கள் மீது இருந்தது. சுவாமி அவர்களுக்குக் கோடானகோடி நன்றி களையும், வணக்கத்தை யும் உள்ளன்புடன் கூறுகிறேன்.
வாழும் வாழ்க்கையில் எனது குடும்பத்தைக் காப்பாற்ற உழைத்த உழைப்பும், எனக்கு ஏற்பட்ட பல சோதனைகளாலும், துன்பங்களினாலும், அவமானங் களாலும், அதன் மூலம் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களால் எனது மனம் பக்குவப்படுத்தப்டும் என்றாலும், ஒரு கட்டத்தில் குடும்பத்தோடு வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வந்து விட்டது.
எண்ணம் வந்த உடனேயே, சுவாமிகள் என்னை அழைப்ப தாகத் தகவல் திரு.பசுபதி மூலம் எனக்கு வந்து விட்டது. நான் உடனே சுவாமி அவர்களைச் சந்தித்தேன். எங்கள் சந்திப்பு கோட்டாம்பட்டி மஹாலக்ஷ்மி நகரில் நடந்தது. என்னைப் பார்த்துச் சிரித்தபடியே அழைத்து அமரச் செய்து, ” திருவாளர் பாஸ்கரன் அவர்கள் குடும்பத்தோடு குறுக்கு வழியில் கைலாயம் வர எண்ணியுள்ளார்” என்று சற்குருநாதர் என்னிடம் கூறினார் “என்று சுவாமிகள் சொல்ல, நான் திடுக்கிட்டுப் போனேன். “இந்த எண்ணம் உனக்கு ஏன் வந்தது? நாம் பக்குவப்பட பல நடந்தாலும், சற்குருநாதர் பக்கத்தில் துணையிருந்து காப்பாற்றுவார் என்ற எண்ணத்தை வலுக்கூட்ட வேண்டும். இனி உனக்குக் கெடுதல் எண்ணங்கள் எப்போதும் வரக்கூடாது. நீ இங்கே வந்து விடு. நமது பரிகார ஸ்தலத்திற்கு உன்னுடைய பணி தேவைப் படுகிறது. நிம்மதியாக நீ உனது பணிகளைச் செய்து சந்தோஷமாக இரு” என்று ஆசீர்வதித்தார்கள். இன்று குரு ஈஸ்வராலயம் எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. நான் பரிகாரஸ்தலம் வருவதற்கு காரணமாயிருந்த எனது நண்பர் களுக்கும் நன்றி. ஓம் குருவே துணை!
ஒரு மனிதன் தனது உழைக்கும் பணியில் என்னதான் நேர்ந்து விட்டாலும் அல்லது உழைப்பினுக்கு எது கிடைக்கப் பெற்றாலும் அதனைக் கொண்டு குடும்பக் கடமைகளில் பகுத்தறிவோடு நடந்து கொள்ள வேண்டும். அவரவர்களுக்கு உரிய அறிவின் வளர்ச்சி கொண்டு, கடமையைச் செய்யும் காலத்தில் தருமத்தையும் நிறைவேற்ற வேண்டும். தருமம் செய்யும் பொழுது சந்தோஷமாக வும், நிம்மதியாகவும் செய்யாத வரையிலும் மனிதவாழ்வில் கஷ்டங்களும் , துயரங்களும் ஏற்படும். தான் பிறந்த பிறப்பு எதுவோ, அப்பிறவியின் தர்மம் எதுவோ அதற்குத் தக்கவாறு நடந்து கொள்வதே நிம்மதி யாகும் . நமக்கு எந்த அளவிற்குப் பொருள் கிடைத்து இருக்கின்றதோ, அதனைக் கொண்டே அதற்குத் தக்கவாறு , எது செய்ய வேண்டும், எதைச் சொல்ல வேண்டும் என்று தீர்மானிப்பதுதான் மனிதனுக்கு இயல்புக் கொடையாக இறைவன் கொடுத்த சுதந்திரம் ஆகும். கடமையைச் செய்யும் போது தடை ஏற்பட்டு விட்டதே, கடமைகளைச் செய்ய முடிய வில்லையே என்று புலம்பாதே! உன் கடமையைச் செய்து கொண்டே இரு. தடைகள் நீங்கி விடும். புதிய கர்ம நல்வினைகள் உருவாகி ஜெயம் தரும். இதுவே மனித சுதந்திரம். — ஸ்ரீ ஈஸ்வர நீதி.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.