இளமையில் கல்லான உருவம்!

249

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

21•04•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(295) மனிதனே புனிதன் —
இளமையில் கல்லான உருவம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆஸ்ரமத்துப் பசு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று திரும்பி வருவது, ஓர் வாலிபன் என்பது கண்டு, அவரை அழைத்து அவர் யார் என்பதை விசாரித்து, உண்மையைத தெரிந்துக கொண்டார். தனது வயோதிகச் சீடர் போகர் தான் இப்படி இளம் பிள்ளையாக மாறி விட்டார் என்பது அறிந்து சந்தோஷம் கொண்டார். அதனால் தானும் இதே போல் அழகிய வாலிபனாக மாற வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். அது பற்றிய விபரங்களைத் தனக்குக் கூறவேண்டும் என்று கூறினார்.
“குருவே, உணவைச் சமைக்கும் போது கிளறிவிட, அடுப்பில் எரிந்து கொண்டிருக்கும் விறகுக் குச்சிகளைக் கொண்டு உணவைக் கிளறினேன். கிளறி விடும் போது அந்த உணவு கருப்பு நிறமாக மாறி விட்டது. தங்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்று எண்ணினேன். அதனால் நானே எல்லா உணவையும் உண்டு விட்டேன். வேறு உணவை தங்களுக்குத் தயார் செய்து வைத்து விட்டு, பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றேன். எனது உடலில் புதுமையான மாற்றம் ஏற்பட்டு இளம் காளையாக, வாலிபனாக மாறி விட்டேன், குருவே” என்று பதில் கூறினார். காளாங்கி நாதருக்கும் தனது சீடர் போக நாதரைப் போன்றே வாலிபனாக மாறிவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். “இது வரையில் அந்த மூலிகை தனக்கு அகப்படவில்லை. ஆனால் போகருக்குக் கிட்டியுள்ளது. இனித் தனக்கு அந்த ஒளஷதம் கிடைக்க ஒரே வழிதான் உள்ளது ” எனச் சிந்தித்து அதனைப் போகரிடம் சொன்னார். காளாங்கி நாதர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தான் உண்ட உணவில் சிறிதளவு வெளியேறி வருமாறு ஒக்காளம் செய்து வாந்தி எடுத்தார். கரிய நிறத்தில் உணவு வெளி வந்தது. அதனை ஜெபம் செய்து உண்டு காலாங்கி நாதர் சித்தர் மீண்டும் வாலிப உடலைப் பெற்று என்றென்றும் சிரஞ்சீவி யாக வாழ்ந்து தனது உடலுடன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

என்றும் வாலிபப் பிள்ளைகளாக கஞ்சமலையில் தவம் புரிந்து அநேக சக்திகளைப் பெற்று விட்டனர், குருவும், சீடனும்! பிறகு போகநாதர் திருச் செங்கோட்டில் பல காலம் தவம் புரிந்து ‘ஞானக்கனி ரகசியத்தை’ கணபதி சித்தருடன் சேர்ந்து ஆராய்ந்து அறிந்து கொண்டார். அத்துடன் போகநாதர் தனது அருமைச் சீடரான புலிப்பாணி சித்தரிடம் ‘தெண்டாயுதபாணி’ உபதேசம் பெற்று தனது இழந்த சக்திகளைத் திரும்பப் பெற்றார். நவபாஷாண முருகரைப் பழனி மலையின் உச்சியில் ஸ்தாபிதம் செய்தார். அதனை பூஜிக்கும் பரம்பரை உரிமையைப் புலிப்பாணி சித்தருக்கே வழங்கி விட்டார். போக நாதரின் குருவாகிய காளாங்கிநாதர் சித்தர் தனது உடலைக் கஞ்சமலையில் இரும்புக்கல் தாதுப் பாறையாகச் செய்து கொண்டார். இன்றும் அவருடைய உடல் இளம் பிள்ளையாகச் சித்தர்குடிக் கோயிலுக்குள் விளங்கி வருகிறது. உடல்நலக் குறைவு வியாதிகள் மற்றும் மருள் சம்பந்தப்பட்ட தோல் தொல்லை உள்ளவர்கள், காள்ங்கிநாதர் ஆலயத்தின் பின்புறமுள்ள உப்பு நீர்க் குளத்தில நீராடினால் குணம் பெறுகின்றார்கள். யோக சாதனையில் சிறந்த திரு. பாஸ்கரன் குருக்கள் அக்கால கட்டத்தில் நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி தவம் புரியும் சித்தர்கள் வாழும் இடங்களுக்குச் தானும் உடன் செல்வார். அவரது அந்த ஆர்வம் இன்னும் குறைவு படாமல் அப்படியே இருப்பது கண் கூடு.

இனித் திரு.பாஸ்கரன் அவர்கள், மதுரை திரு. மேகநாதன் அவர்களிடம் நமது சுவாமி அவர்களைப்பற்றி நினைவு கூர்தல் தொடங்குகிறது “அன்று பெளர்ணமி தினம். தவத்திரு.ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்கள் சேலம் அருகேயுள்ள கஞ்ச மலைக்குச் சென்று வரலாமா? என்று கேட்க நானும், எனது நண்பர்களுடன் ஆர்வமுடன் புறப்பட்டுச் சென்றோம். அங்கு காந்தப் பாறைகள் மூன்று இருக்கிறதாம்! அதில் அமர்ந்து தவம் செய்ய உடலில் உள்ள நரம்புகள் அனைத்தும் துடித்துக் சக்திகள் உடலில் ஏற்படுவதை அனுபவத்தில் உணரலாம் என்று சொல்வதைக் கேட்டு் ஆச்சரியம் உற்றோம். அது எவ்வளவு பெரிய உண்மை என்பதை அறிந்து பரவசமும் உற்றோம். மலையின் அடிவாரத்தில் அங்குள்ள காலாங்கி நாதர் ஆலயத்தில் சித்தேஸ்வரரை வழிபாடு செய்தோம். பிறகு குரு மகா மந்திரம் ஜெபத்தோடு மலை ஏறிச் சென்று கொண்டி ருந்தோம். ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்கள் எங்களுக்கு ஆன்மிகம் சம்பந்தப்பட்ட அரிய பாடங்க ளையும், தெய்வங்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தார்கள். திடீரென ஓரிடத்தில் நமது சுவாமி நின்று விட்டார். பல பாதைகள் பிரியும் அந்த இடத்தில், சரியான பாதை எது? என்று சிறிது குழப்பம். வெயில் சூடாக வீசும் காலம். அருகே இரண்டு, மூன்று பெரிய பாறைகள் தந்த நிழலில் சுவாமி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள சற்று அமர்ந்திருந்தார். அப்போது…

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button