பரம், ஜீவப் பொருள் விளக்கம்!

252

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

06•04•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(280) மனிதனே புனிதன் —
பரம், ஜீவப் பொருள் விளக்கம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அதிர்ஷ்டம் என்பது அவரவர்கள் கொண்ட அதீதமான எண்ணம் காரணமாக, அதே சிந்தனையை வலுக்கூட்டும் செயலினால் அது எதிர்பாராதவிதமாக நடந்து விடும் போது, அதிர்ஷ்ட்டசாலி எனக் கூறுகிறார்கள். அப்படித்தான் திரு.உசேன் அவர்களுக்கு சற்குருநாதரின் அருளாசி கிடைத்தது. அவரைப் பார்த்தவுடன் தூண்டிலைத் தூக்கி எறிந்து விட்டு ஆற்றில் குதித்து நீந்தி அப்புறம் சென்று அவருக்குச் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். திரு.உசேனுக்கு சற்குரு நாதர் அவர்களைப் பார்த்த பிறகு கண்ணீர் அருவியாகப் பெருகி வழிந்தது. ஒரு வார்த்தை பேசவில்லை. அருள் மழையில் பக்தன் நிம்மதியை அடைந்து கொண்டிருந்தார். ஆற்றின் வெள்ளம் குறைவாக இருந்ததால் நமது சுவாமி ஆற்றைக்கடந்து வந்து தனது தெய்வத்தின் முன்பு அமைதியாக அமர்ந்து விட்டார். நமது நாகராஜன் சுவாமியைப் பார்க்காமல் குருநாதர் தவத்தில் அமர்ந்து விட்டார். திரு.உசேன் அவர்கள் மெல்லப் புறப்பட்டு திரும்பி ஏக்கமாகப் பார்த்தபடியே சென்று விட்டார். இருள் சூழத் துவங்கியது. மெல்லக் கண் விழித்த ஸ்ரீ ஈஸ்வரரின் கண்களில் இருந்து, அருள் ஒளி வெள்ளமெனப் பாய்ந்தது. மெல்ல அவரை ஏறிட்டுப் பார்த்த நமது சுவாமியினால் குரு நாதரின் கண்களின் ஒளியைக் தாளமுடியாமல் பூமியின் மீது பார்வையைச் செலுத்தினார்.

மெல்லிய அசரீரியான குரலில் ஸ்ரீ ஈஸ்வரர் பேசத்துவங்கினார். “மகனே, நாகராஜா நீ தியானம் செய்வதை உடனே நிறுத்தி விடு.” நமது சுவாமிக்கு அவர் சொல்வது புரியாததால் அவரை தைரியமாக ஏறெடுத்துப் பார்த்தார்.
“நாகராஜா தியான போதை உன்னை மயக்கித்தான் வைத்துள்ளது. மிக வீரியமாகத் தியானம் செய்து வந்த சித்தர் பெரு மக்கள், தங்கள் உடலைக் காப்பதற்காக, மூலிகைகளில் இருந்து ஒளஷதங்கள் உண்டுபண்ணி, உண்டு, காயம்’ கல்பமாக வாழ்ந்தது உண்மை. உலகில் உள்ள அனைவருமே அறிவாளிகள் தான். அறிவாளி களில் இரண்டு விதம் உண்டு. அறிந்த அறிவாளிகள், அறியாத அறிவாளிகள் என்பவர்கள் இருக்கின்றார்கள். நீ எந்த அறிவாளி என்பது உனக்கே இப்போது புரியும். உனக்குத் தருகின்ற பாடங்களை நன்கு கவனமாகக் கற்றுக் கொண்டு குருவை மிஞ்சும் சீடனாக வேண்டும் “என்று கூறிவிட்டு நாகராஜன் சுவாமி முகத்தையே உற்றுக் கவனித்தார்.
“தயை கொண்ட தேசிகரே, என்னை மன்னித்து அருள வேண்டும். எனக்குத் தாயும், தந்தையுமான சற்குருவே, அடியேன் கூறுவதைச் சற்று செவிமடுக்க வேண்டும். நான் தங்களின் பாதார விந்தங்களில் என்றென்றும் உண்மை மிகுந்த சீடப் பிள்ளையாகவே பணிந்து வாழ்ந்து வரத் திருக்கண் சாத்தியருள வேண்டுகிறேன் ” என்று கூறி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

” மகனே நாகராஜா நீயும் ஓரு தேவஜோதி தான். காலம் வரும் போது அகிலமே உணர்ந்து கொள்ளும். இனி உனக்குப் பரமஜீவ விளக்கங்களைக் கூறுகிறேன். நான் கூறுவது ஸ்ரீ ஈஸ்வர நீதியாகும். கவனத்தில் கொள்வாய் மகனே ” என குருநாதர் ஸ்ரீ ஈஸ்வரர் அனுக்கிரஹித்தார். அதன் பிறகு “பரம்பொருளிடமிருந்து அவரவர்களின் ஈர்க்கும் ஆற்றலுக்குத் தக்கவாறும் அல்லது சமமாகவும் தன்னிடமிருந்து வளர்ப்பு சக்திகளை எப்போதும், எந்த நேரத்திலும் வழங்கிக் கொண்டே இருக்கிறது. சாதாரணமாக அறிவின் ஆற்றலிலும், உணர்ச்சிகளின் ஆற்றலிலும் வேறுபட்டு இருக்கும் ஒரு மரமானது, தனது கிளைகள், இலைகளை அது பாதுகாத்து வளர்க்கின்றது. இது எதற்காகவோ பந்தப்பட்டுள்ளது. ஆனால் பகவான் என்னும் பராபர விருட்சமோ எதற்கும் கட்டுப் படாதது. அளவில்லாத அறிவின் ஆற்றல் பெற்றது. அது சத்திய, தர்ம, நீதியை உடையது. எல்லையே இல்லாத சுதந்திரம் கொண்டது. அந்த தேவ மரத்தின் இலைகளாக உலக மக்கள் அனைவரும் இருக்கின்றார்கள். பராபரமே எல்லா உயிர் களையும் உண்டு பண்ணி ஆயுளைத் தருகிறது. கருணை, அன்பு, அழகு, ஆற்றல், முயற்சி, செயல், பொருள், செளபாக்கியம்,
மீண்டும் இறைவனைச் சென்றடையும் பிரார்த்தனை, வழிபாடு இவைகளைச் சமமாக வழங்கி வாழவைக்கிறது. கால நேர சமயத்திற்குத் தக்கபடி இறையருள் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button