சுற்றிலும் என்னதான் நடக்கிறது?

225

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

05•04•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(279) மனிதனே புனிதன் —
சுற்றிலும் என்னதான் நடக்கிறது?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஸ்ரீ தேவஜோதி விளக்கு புஷ்பங்கள் மற்றும் பச்சிலைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, ஆடாமல், அசையாமல் எரிகின்ற ஸ்ரீ தேவஜோதி விளக்கின் தீபச்சுடரில், அதன் பிராசத்தினுள் சற்குருநாதரின் தோற்றம் எப்போதும் தெரிந்து கொண்டே இருக்கும். நேருக்கு நேர் நாம் பேசி உரையாட, ஜெபம் செய்திட, பாடல்கள் பாடிட என எல்லோருக்கும் அது உத்வேகம் தருவதாக அமைந்திருந்ததால், எடுத்த காரியங்கள் வெற்றியாக அமைய அது ஏதுவானது. நாச்சியார் அவர்கள் தினமும் அறையைத் தூய்மை செய்து பிரார்ததனைக்கு ஏதுவாக அமைத்துக் கொள்வார்கள். தியான அறை பகல் பொழுதில் மிகவும் குளிர்ச்சியாகவும், இரவு காலங்களில் சூடாகவும் இருந்தது. பிரார்த்தனை செய்ய உட்சென்றால் மனம் லயமாகி விடும். கால நேரம் பார்ப்பது என்பது இல்லாமல் இருந்தது. சுவாமியின் குழந்தைகள் திரு.கோகுலகிருஷ்ணன், திரு. சந்திர மெளலீஸ்வரர் இருவரும் ஸ்ரீ தேவஜோதி விளக்கின் முன்பாக தேவபாஷைகள் அடங்கிய அக்ஷ்ர நோட்டுப் புத்தகத்தை வைக்கும் போது, திரு விளக்கைச் சுற்றிலும் இருந்த புஷ்பங்கள் அசையத் துவங்கி யதால், குழந்தைகள் இருவரும் புத்தகத்தை வைத்து விட்டு சுவாமியின் இருமருங்கிலும் வந்து அமர்ந்து கொண்டனர்.

புஷ்பக் குவியலுக்குள் இருந்து ஆகாயத்தைப் பார்த்தபடி ஒரு ஜான்அளவே உள்ள நாகம் வெளிப்பட்டு, அந்தப் புத்தகத்தின் மீது தவழ்ந்து மீண்டும் தலையைத் தூக்கி ஆகாயத்தையே பார்த்துக் கொண்டே இருந்தது. பிறகு மீண்டும் புஷ்பக் குவியலுக்குள் நுழைந்து மறைந்து கொண்டது. அதுவரையில் யாரும் அதனைப் பார்த்தது மில்லை. பிற்காலத்தில் சுவாமி பக்தர்கள், தங்களது கோரிக்கைகளை எழுதி அதனைப் பிரார்த்தனை அறைக்குள் கொண்டு செல்லும் போது அதனைப் பார்த்து இருக்கின்றார்கள். சுவாமி தரும் பாடங்களைப் படித்து வந்தாலும் நமது சுவாமி அவர்களுக்கு மனம் மற்றொரு ஏக்கத்தில் இருந்தது. அது எப்போதும் சற்குரு நாதர் ஸ்ரீ ஈஸ்வரருடன் இருக்க வேண்டும் என்பதே. இந்த எண்ணம் வலுப்பட்டு வந்ததால் ஆத்ம சக்தியின் சேகரிப்பு மிகவும் அதிகப் பட்டு விட்டது. உடல் உஷ்ணம் மிகவும் கூடியதால் தியான அறையில் பகல் பொழுதில் உண்டாகும் குளிர்ச்சியை விரும்பி தியான அறையே கதி என்று இருந்தார். தியானத்தில் அமரும் நேரம் இதனால் கூடியது. உடல் ஒத்துழைக்க மறுத்ததால் அதனை வசப் படுத்த தியான அறையிலேயே படுத்துக் கொண்டு விட்டார். படுத்தபடி ஜெபம் செய்து கொண்டு இருப்பதில் உடல் ஓய்வு பெற்றுக் கொள்வதைப் போன்று ஒர் மாயை நிகழ்வு கற்பனையாக உருவாகி விட்டது. சாமியின் பிள்ளைகள் வந்து தியானத்தில் அமர்ந்து கொள்வதற்கு அது இடையூறாக இருந்திருக்க வேண்டும்!?

அவர்கள் தங்கள் கோரிக்கை யைத் ஸ்ரீ தேவஜோதி விளக்கில் கூறிவிட்டு வெளியே அமர்ந்து கொண்டார்கள். சுவாமியின் பாடல்களைக் கேட்க வரும் கிராமக் குழந்தைகள் நமது சுவாமி படுத்துக் கிடக்கும் கோலம் கண்டு விசாரித்து விட்டுப் போனார்கள். மறுநாள் கிராமத்தில் அநேகம்பேர் நலன் விசாரிக்க வந்து கொண்டே இருந்தனர். சுவாமி அவர்களுக்கு இது பிராணத் துன்பமாகி விட்டது. அனுதாபமுடைய எண்ண அலைகளின் தாக்கத்தைத் தாங்கவும் இயலாமல், வந்தவர்களிடம் மறுத்தும் பேசவும் வழியின்றித் தவிப்பதைக் கண்டு, சுவாமி குழந்தைகள் சிரித்துக் கொண்டிருந்தனர். சுவாமி அவர்களை அருகில் அழைத்துத, “தம்மைச் சுற்றிலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது? அதன் காரணம் என்ன? நீங்கள் கூற முடியுமா?” என்று கேட்டு விட்டார். திரு.கோகுலும், திரு. மெளலியும் ஒரே குரலில் கோரசாக, “அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு ” என்று கூறிவிட்டுச் போயினர். உடல் தாங்காத அளவிற்கு தியானத்தில் மூழ்கி விட்டோமா? அது உஷ்ணாதிக்கத்தை உருவாகிடக் காரணமாய் இருந்ததில், மனம் எதில் லயித்து இருந்தது? தியானத்தில் மூழ்கும் சுகம் தனது சுவாசத்தில் ஓடுகின்ற இடை விடாத ஜெபத்திற்கு ஆதரவாக அருளிடுவீர் ஓம்ஸ்ரீ ஈஸவரா என எண்ணமிட்டார்.

அந்த சமயத்தில் நமது மொண்டி உசேனுக்குக் கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது. திருமணம் முடிந்த பிறகு திண்டுக்கல்லில் உள்ள தோல் கம்பெனியில் மேற் பார்வைப் பணியாளராகப் பணி தயாராகக் காத்துக் கொண்டு இருந்தது. நல்ல குணவதியாகத் திரு.உசேன் அவர்களுக்கு வாழ்க்கைத் துணை அமைந்தது. நமது சற்குரு நாதரிடம் ஆசிகள் பெற எண்ணினார். நமது நாஙராஜன் சுவாமி ஆழியாற்றின் மேற்குப் பகுதியில் உள்ள பெரிய நெல்லுக்குத்திப் பாறை மீது அமர்ந்து கொண்டிருந்தார். குரு நாதரால் கால்கள் குணம்பெற்ற திரு.உசேன் அதே பாறையில் நின்று கொண்டு தூண்டிலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தார். அப்போது தான் குருநாதரைப் பார்க்க வேண்டும் என்ற தனது ஆவலை வெளியிட்டார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button