காவல் தெய்வங்கள்!

282

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

03•04•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(277) மனிதனே புனிதன் —
காவல் தெய்வங்கள்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காவல் தெய்வங்கள் என்று நாம் சொல்லக் கேட்டிருப்போம். அவர்களின் பயன்பாடுகள் பற்றி நமக்குச் சிந்திக்க நேரம் இல்லாமல் ஆக்கிக் கொண்டோம். இந்தக் காவல் தெய்வங்கள் நமது கோரிக்கைகளை ஆண்டவன் இடத்திற்குக் கொண்டு செல்லவும், அங்கு கிடைக்கும் ஆசீர்வாதங்களை நமது இருப்பிடம் தேடிக் கொண்டு வந்து நம்மிடம் சேர்ப்பிக்கும் பணிகளை இடைவிடாது தொடர்ந்து செயல்படுத்தி வரும் ஆண்டவனின் தூதுவர்களாகும். இவர்களின் இறைப்பணி அசாத்தியமானது. அதனை நிறை வேற்றிடக் கடுமையாக உழைக்கும் ஆற்றலை இறைவனிடம் பெற்றவர்கள் ஆவர். இதனைப் பற்றி முழுமையாக அறியாதவர்கள் தான், காவல் தெய்வங்களை இகழ்ந்து பேசுவார்கள். அவர்களுக்கும் ஆகார நியதிகள் உண்டு. இறைவன் சம்பந்தபட்ட அனைத்திலுமே இவர்களின் பங்களிப்பு உண்டு. இறை சக்தியை நிந்தனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையை இறைவனது கட்டளைப்படி வழங்கக்கூடிய வல்லமை இவர்களுக்கும் உண்டு. இவர்களுக்கு வேத மந்திரங்களில் வாழ்த்தும் முறைகளும் உண்டு. வழிபாடு முறைகள் இவர்களுக்கு தாந்திரீக வழிகளில் பின் நாளில் சுய காரியத்திற்காக மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அவ்வளவே!

நமது நாகராஜன் சுவாமிக்குத் தியானப் பாடங்கள் பழம் பாடல் களாகவே கிடைக்கப் பெற்றதால் அதனைப் புரிந்து படிக்கும் பணி அவருக்குள் இருந்தும், இன்னும் வெளிப்படாமல் இருக்கவே சுவாமி திணறித்தான் போனார். புதிய தமிழ் அகராதிகளிலும் கூட சில விளக்கங்கள் தரப்பட வில்லை. அதனால் பாடம் படிப்பதை விட, தியானத்தில் அமர்ந்து இருப்பது எளிதாக இருந்தது. சில பாடங்கள் பழம் பாடல் வரிகளாகவும் சுலபமாக வும் இருந்தது. அநேக பாடங்களுக்கு அர்த்தம் இருந்தும் விளங்குவதாக வில்லை. அந்த சமயத்தில் எந்த வார்த்தை விளக்கமாகவில்லையோ அந்த வார்த்தையையே மந்திரப் பொருளாக ஆக்கிக் கொண்டு அதனையே ஜெபம் செய்யத் துவங்கி விட்டார். மனதில் அந்தப் பாடல் வரி மட்டுமே இருக்கும்படி விடாத ஜெபமானது. பிறகு தியானம் செய்வதற்கு அமர்ந்தாலும் அதே வரிகள் மனதில் ஓடத் துவங்கியது. மனம் அந்த வார்த்தைக்கு அர்த்தத்தை சுலபமாக அறிந்து கொள்ளத் துவங்கி விட்டது. இந்த ஆராய்ச்சி கொஞ்ச நாட்களுக்கு நடைபெற்றது. பிறகு சற்குரு நாதர் அதனை வரவேற்க வில்லை. இதில் சக்தி விரையம் அதிகப்பட வாய்ப்புகள் அதிகம் இருந்ததால் குருநாதர் அவர்கள் நமது சுவாமியைக் கண்டித்தார். “இரண்டு காவல் தெய்வங்களை உனக்கு நியமிக்கின்றேன் ஒழுங்காகப் படித்து வா” என்றார். மறு தினத்தில் இருந்து சுவாமி பாடங்கள் படிக்கச் சென்றால், சுவாமியின் இரு பக்கங்களிலும் கோகுலும், சந்திரமெளலியும் அமர்ந்து கொண்டு தியானம் செய்யத் துவங்கினார்கள். இதனை சுவாமியினால் ஏற்கவும், மறுக்கவும் இயலாமல் போனது.

புரிந்து கொள்ள முடியாத பாடங்களை இரவு பத்து மணிக்கு மேல், குழந்தைகள் உறங்கிய பிறகு தியானத்தில் இருந்து அதன் விளக்கங்களை எழுதிக்கொள்ள ஆரம்பித்தார். அப்போது ஒரு சம்பவம் நடை பெற்றது. இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் ரேடியோவில் கேட்பதைப் போன்ற சப்தங்கள் வரத்துவங்கின. அதில் சப்தம் மட்டும் தெளிவாக இருந்து ள்ளது. ஆனால் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது புரியாமல் இருந்தது. சிலர் உரையாடுகிறார்கள் என்று தெரிந்து கொண்டாலும் தனக்குள் ஏன் கேட்கிறது? என்பது விளக்க மாகாமல் மீண்டும் தியானத்தில் அமர்ந்து கொண்டார். இரவு முழுவதும் உறங்காமல் இருந்தாலும் எந்த விதத்திலும் களைப்புமின்றி தமது பணிகளை காலையில் செய்ய ஆரம்பித்து விட்டார். “இரவு நேரத்தில் எதனைக் கவனிக்கின்றாய்? அந்த ஆராய்ச்சிக்கு விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமைகள் உண்டு என்பதை
அறிவாய். தூங்காமல் விழித்துக் கொண்டு பாடம் படிக்கும் காலம் உனக்கும் வரும். எட்டாக்கனிக்கு ஆசைப்படாதே. முதலில் மரத்தின் மீது ஏறிப் பழகிக் கொள். கனி கைவசமாகும் என்பதையும் மறந்து விடாதே. படிப்படியாகக் படிபடி” என்றார் குருநாதர். சுவாமி இப்போது தனது தெய்வம் சற்குரு நாதரிடம் பாடம் கற்க விருப்பமுடன் இருந்தார். குழந்தைகள் இருவரும் காவலாக இருந்து அவர்களும் பாடங்கள் படித்து வந்தனர். தொடர்ந்து பாடங்கள் நடந்து வந்ததில் ஒருநாள் கோகுல கிருஷ்ணா விடம் சற்குருநாதர் மயிலிறகும், பேனா மசியும் கொண்டுவரத் சொல்லி உத்தரவு போட்டார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button