ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
30•03•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(273) மனிதனே புனிதன் —
திரு.R.B எனும் அற்புத நண்பர்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஸ்ரீ செளடேஸ்வரி அம்மன் கோயில் பல வண்ணங்களில் வர்ணம் பூசப்பட்டு, ராஜ கோபுரத்துடன் மிகவும் பொலிவுடன் காணப்பட்டது. அங்கு திருவிழா கொண்டாடு வதற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அதன் எதிரே உள்ள கட்டிடத்தில் வித்தியாச மான பெயருடன் பெரிய விளம்பரப்பலகை வைக்கப்பட்டு இருந்தது. கருநீல வண்ணத்தில் தூய்மைமிக்க வெண்மைநிற நிறத்தில் அதில் எழுதப் பட்டிருந்த வாசகம் அருமையாக இருந்தது. “சத்தியத்தின் சக்தி நிலைச் சங்கம்” என்ற பெயருடன் பலகை காணப்பட்டது. சுவாமி அவர்களுக்குப் பிற்காலத்தில் பவானி நகரையும், சேலம் குமாரபாளையத்தையும் மறக்கமுடியாத அநேக சம்பவங்கள் நடை பெற்ற நகரங்களாகும். காவேரி ஆற்றின் புதுவெள்ளத்தில் இறங்கி பலநாட்களாக ஜெபம் செய்த இடங்கள் இங்குதான் இருக்கிறது. தவிர,
[ நமது சுவாமியின் பிள்ளைகள் திரு.கோகுலகிருஷ்ணனுக்கும், திரு. சந்திரமெளலீஸ்வரருக்கும் தீய சக்திகளை விரட்டவும், தங்கள் ஆன்ம சக்திகளை விருத்தி செய்யும் மந்திரப் பொருளை உபதேசம் செய்த இடமும் கூடுதுறையில் உள்ளது. வாலியின் சக்தி பற்றியும், அதனை ஜெபத்தினால் பெறும் வழி வகைகளையும் அவர்கள் அறிந்து கொண்டதும் இங்குதான். தவிர அண்டக் காளிகள் ஜெபத்தினை இருவருமே கற்றுக் கொண்டு, ஜெபம் செய்து அதில் தேர்ச்சி பெற்றதும், காவேரி அன்னை யின் மடியில் தான். இவைகளை இதன் விவரங்களை மிகவும் தெளிவாகப் படிக்கின்ற பாடங்களும் விரைவில் கிடைக்கப் பெறுவோம்.] நமது சுவாமி தனது குருநாதரைச் ஜெபம் செய்தபடி தியான சங்கத்தின் படிகளில் நின்று, அழைப்பு மணியில் ஓசையை உண்டாக்கினார். சிறிது நேரம் சென்றது. கதவினை யாரோ ஒரு பெண்மணி திறந்தார். தாம் பொள்ளாச்சியில் இருந்து வருவதாகச் சுவாமி தெரியப் படுத்தினார். சுவாமியை அமரச் செய்து விட்டு வீட்டின் உள்ளே சென்றார். வெள்ளை நிறம் உடைய முழுக்கை சட்டை அணிந்து, சிவந்த நிறமுடைய உயரமான மனிதர், தெய்வீகக் களை பொருந்திய முகமும், அன்புடன் கூடிய புன்சிரிப்பும் கொண்டு வெளிப்பட்டார்.
“வணக்கம், வாருங்கள்” என இனிமையாக வரவேற்று அமரச்செய்தார். அவர்தான் R.B. என்று அனைவராலும் அழைக்கப்படும் திரு.R.பால சுப்பிரமணியம் அவர்கள். சுவாமி அவர்கள் பெயர், ஊர், வந்த நோக்கம் எல்லாம் கேட்டு அறிந்து கொண்டார். பிறகு இங்கு தியான சங்கத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடை பெறுவதாகவும், ஸ்ரீ ஈசுவர பட்டர் தங்களை வழிநடத்திச் செல்வதாகவும், ஞானகுரு தவத்திரு.வேணுகோபால சுவாமி தலைமைச் சங்க குருவாக வழிகாட்டுவதாகவும், இப்போது அவர்கள் ஆன்மிக சுற்றுப்பயணம் சென்றுள்ள தாகவும் கூறியவர், சுவாமியின் குடும்பம் , குழந்தைகள் பற்றி அன்புடன் விசாரித்து அறிந்து கொண்டார். இல்லற வாழ்வில் இருந்து தான் சக்தி பெற வேண்டும் என்று கூறினார். அடிக்கடி தலைமை சங்கம் வந்து செல்லவேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொண்டார்.
நமது சுவாமி அவர்கள் சங்க வெளியீடாக உள்ள புத்தகங்கள் பற்றி விசாரித்தார். அவர் முதல் பாகமாக 1980 – ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சத்தியத்தின் சக்திநிலை புத்தகம் ஒன்று தந்தார். அன்று 308 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தின் விலை ரூ.31•00 மட்டுமே பெற்றுக் கொண்டார். பெரிய காலிகோ பைண்டிங், கருநீல வண்ணத்தில் அதற்குக் கண்ணாடிக்கவர் போட்டு, இவ்வளவு மலிவு விலையிலா?! சுவாமி அவர்கள் ஆச்சரியப் பட்டுப் போனார். சங்கத்தின் தலைவர் மிகப்பெரிய தொழில் அதிபர், மக்கள் பயனுற வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன், அசல் விலையில், சங்கத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, சொந்த செலவில் புத்தகம் வெளியிட்டிருந்தார். அந்த உயர்ந்த நோக்கத்தைப் பாராட்டாமல் இருக்க இயலவில்லை. புத்தகத்தைப் பிடித்தவுடன் 13 – வது பக்கம் வந்தது. “சத்தியவாக்கு” என்ற தலைப்பில் பாடம், 04•03•1979 ஆம் தேதியிடப்பட்டு இருந்தது. அதில் கண்ணில்பட்ட வரிகள், ‘தியானத்தில் இருக்கத் தனிமையான இடமும், சோலை களடர்ந்த அமைதியான இடமும்,
பிற சத்தங்கள் வராத இடமும் தான் தியானத்திற்கு ஏற்ற
இடமா?’ என்று அப்பக்கத்தின் எட்டாவது பாராவின் 31- வது வரியில் எழுதப்பட்டிருந்தது. மட்டுமல்ல திரு.R.B.யைப் பற்றியும் அதே பக்கத்தில் 03 – வது பாராவில், 12 ஆவது வரியில் உள்ள விஷயமே அவர் சற்குருநாதரின் சீடன் என்பதே!
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.