ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
26•03.2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(269) மனிதனே புனிதன் —
பிழைப்பின்றி கிராமமே கதி.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“நமக்கு யாராவது ஒருவர் துன்பம் செய்து கொண்டு இருக்கிறார் என்றால், முதலில் அவருடைய தீய எண்ணங்களை நம்முடைய மனதினுள் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். நம்மை எதிரியாக எண்ணி, நம்முடைய மனதில் எந்த எண்ணத்தை உருவாக்க அவர் நினைக்கின்றாரோ? அந்த எண்ணத்தற்கு இம்மியளவு கூட நாம் இடம் கொடுக்கக் கூடாது. அப்போது தான் அவர் நமக்குச் செய்த தீமைகள், நம்முடைய மனதினைப் பாழ்படுத்தாமல் விலகிச் செல்லும். நன்மைகள், தீமைகள் என்ற எந்த விஷயங்களாயினும் அல்லது அதைச் செய்பவர்கள் எவராயினும், அதனைப்பற்றி மனம் கலங்காமல் ஆராய்ந்து பார்த்து உண்மையை உணர வேண்டும். அவனே ஆத்ம ஞானி.” — ஸ்ரீ ஈஸ்வர நீதி.
அப்பாவி மனிதன் தனது பூர்வீக இடத்தில் இருக்கும் பணத்தைக் கொண்டு, குடியிருக்கச் சிறிய மனை ஒன்றைக் கட்டிக் கொண்டார். தான் வாழ்ந்த காலத்தில் தன்னிடம் உதவிகள் பெற்ற உறவினர்கள் மெல்ல விலகிக் கொண்டனர். மூத்த மகளைத் தனது அக்காள் மனுக்குச் செல்வத் திருமணம் செய்து வைத்தார். உடன் பிறந்த சகோதரிகள் அவருக்கு வந்து விட்ட ஏழ்மை நிலையை எள்ளி நகையாடினர். தனது இரண்டாவது மகளை ஓர் ஆன்மிகவாதிக்கு மணம் செய்து கொடுத்திருந்தார். அவர்கள்தான் அவரது இறுதிக் காலம் வரையிலும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டனர். அருமை பெருமை வாய்ந்த மருமகள், தனது பேத்திக்கு உடுப்புகள் கொண்டு சென்று பார்க்கப் போன அந்த
அப்பாவியை, மாமனார் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் பேசி அவமானப் படுத்திய போதுதான், எதற்குமே கவலைப்படாத அவர் உள்ளம் உடைந்து போனது. தனது மகனின் குழந்தையைப் பார்க்க முடியாமல் போன அதிர்ச்சியில் அவர் உடல் நலம் குறைவு பட்டது. கடைசிக் காலத்தில் தனக்கு ஆதரவு தரும் இரண்டாவது மகளை எண்ணி அழுதார். ” நான் எல்லோருக்கும் எல்லா உதவிகளும் செய்தேனே, அவர்கள் என்னை வெறுத்து ஒதுக்கினர். மகளே நான் உனக்கோ, உனது குழந்தைகளுக்கோ எந்த உதவியும் செய்யவில்லையே. பிரதிபலனை எதிர்பாராமல் வந்து உதவி செய்யும் உன்னை நினைத்துப் பெருமைப் படுகிறேனம்மா” என்று மகளின் கைகளைப் பற்றிக் கொண்டு கதறி அழுதார்.
அவர் ஸ்ரீ கிருஷ்ணரைத் தமது குல செய்வதாகக் கொண்டவர். ஸ்ரீ கிருஷ்ணன் முன்னால் தோன்றி, ஸ்ரீ கிருஷ்ணன் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்துக் காட்டிய ஸ்ரீ முருகனை வழிபாடு தெய்வமாகக் கொண்டவர் அப்பாவி யான அந்த மனிதர். தானும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா மாடுகள் மேய்த்து வந்ததைப் போலவே பாடுபட்டு சாப்பிட விரும்புவதாகப் தனது இளைய மகளிடம் கோரிக்கை வைத்தார். உடனே இரண்டு பேரன்களும் பசுமாடுகள் வாங்கித் தந்தனர். பசுக்கள் நன்றாக விருத்தி யடைந்ததோடு, நல்ல வருவாயையும் ஏற்படுத்தித் தந்தன. தனது ஒரே மகன் அவரும் வாழ வேண்டும் என்று விரும்பினார். தான் பாடுபட்ட பணத்தில் இடமும் வாங்கி மகனுக்காக நல்ல வீடு ஒன்றைக் கட்டிக் குடி புகுந்தார். அந்த சமயத்தில் அவர் ஒரு செய்தியைக் கூறினார். தாம் மரணத்தை விரும்புவதாகவும், சந்தோஷமான மரணம் கிடைக்க எனக்காகப் பிரார்த்தனை செய்து வரவேண்டும் என்று ஆன்மிக வாதியான தனது மருமகனிடம் கேட்டுக்கொண்டார். அதன்பிறகு ஆகாரம் உண்ணுவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டு ஜெபம் செய்து வரலானார். அப்போது தான் அவர் வியாபாரம் செய்து வந்த ஊரில் வசித்து வந்த தியான நண்பர்கள் சங்கத்தைச் சேர்ந்த பிரபல திடீர் வைத்தியர், தான் ஒரு மருந்துக் கம்பெனியில் இருந்து உடல்நலம் பெற மருந்து வாங்கி விற்று வருவதாகக் கூறிக் கொண்டு வந்து சேர்ந்தார். அப்பாவி மனிதனை, ஸ்ரீ கிருஷ்ணபக்தனைப் புட்டி புட்டியாக மருந்து சாப்பிடச் செய்தார். சில மாதங்களில் அவருக்கு உடல் உருப்புக்கள் செயலிழந்து கொண்டே வந்தது. திடீர் வைத்தியர் தனது மருந்து விற்பனையிலும், பணம் பண்ணுவதிலும் குறியாக இருந்தார்.
எமன் வரவைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு தகுந்த நபர் மூலம் செய்தி அனுப்பினார். “தனது மருந்துகளைச் சாப்பிடும் நோயாளிகள் பழங்கள், பச்சைக் காய்கறிகள் மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பாடு சாப்பிட்டால் தான் பொறுப்புக் கிடையாது. முதலில் மருந்து வியாதியை அதிகப்படுத்தும். பிறகு நாளாக நாளாக மீண்டும் குணம் கிடைக்கும். வாழ்த்துக்கள். ஓம் நமச் சிவாயம்.” இதுதான் அவர் அனுப்பிய செய்தி. செய்தியை சுமந்து சென்று அவரிடம் சேர்ப்பிக்கும் முன்னரே அவர் விரும்பி இருந்த சந்தோஷ மரணம் இரவு நேரத்தில் தூங்கும் போதே வந்து விட்டது. தகவலை யாரிடம் கூறுவது? எனவே அன்பர்களும் எந்த ஒரு விஷயத்தையும் அறிவின் துணை கொண்டு ஆராய்ந்து அறிந்து செயல்படுத்தவேண்டும். அறியாமல் செய்கின்ற எந்தக் காரியங்களும் அத்துனை சிறப்பாக அமையும் எனக்கூற முடிந்திடாது.
(வரலாறு தொடர்ந்து வரும்)
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.