அமானுஷ்யத்துடன் சச்சரவு!

226

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

11•03•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(254) மனிதனே புனிதன் —-
அமானுஷ்யத்துடன் சச்சரவு!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமி அவர்களின் கிராம வீட்டிற்கு விளையாட வரும் சிறு குழந்தைகளின் எண்ணிக்கை குறையத் துவங்கியது.காரணம் தம்பனவசியனின் குடும்பத்தினர் கோபமுற்று, தெய்வீக சக்திகள் வளரக் கூடாது என்ற எண்ணத்தில், குழந்தைகளை அதட்டி, மிரட்டி, விரட்டிக் கொண்டிருந்தனர். அதனால் குழந்தைகள் பயத்தால் வராமல் நின்று விட்டனர். இப்போது சுவாமி குழந்தைகள் இருவரும், வெள்ளலூர் குழந்தைகள் மட்டுமே தியானத்திற்கும், பாடல்கள் பாடுவதற்கும் வந்தனர். நமது சுவாமி அவர்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயம், எல்லாக் குழந்தைகளும் இருந்ததால், அவருக்கு மரியாதைகள் செய்து வந்தனர். அவர்கள் அனைவரும் கூட்டாக வெளித் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொள்வது சுவாமிக்கு நன்றாகக் கேட்டது. அவர்களின் பேச்சு மிக்க ஆச்சரியம் தருவதாக இருந்தது! அதுவும் நமது சுவாமி அவர்களைப் பற்றியதாக இருந்தது. “இவரை நாம் பாதுகாக்க வேண்டும். தீய சக்திகள் வீட்டின் மீது வட்டமிடுகின்றன. இவர் தனது சக்தியைத் தத்தம் செய்து விடாமல் பார்த்துக் கொள்வது நமது கடமை. ஆகாயத்தில் சுற்றிக் கொண்டிருப்பதை, வெள்ளலூர்காரர் கவனிப்பது என்றும் மற்றவற்றை நாம் கண்காணிகாக வேண்டும் ” இதுதான் அந்தப் பேச்சின் சாரம்! சுவாமிக்கு இது புரியவில்லை.

மெளலியிடம் கேட்டபோது அவர் தலையை ஆட்டிக் கூறமாட்டேன் என்பது போல் சைகையில் பதில் சொன்னார். கோகுல் மாத்திரம், “அப்பா இது சற்குருநாதரின் ஏற்பாடு” என்று பதிலிருத்தார். “பராபரமே இது என்னவென்று புலப்பட வில்லையே? யாரிடத்தில் இருந்து, யாரைப் பாதுகாக்க, இப்படிப் பேசிக் கொள்கிறார்கள்?” என்று யோசித்துப் பார்த்தும் சுவாமி அவர்களுக்குப் புலனாக வில்லை. ஆனால் இந்த மூன்று குழந்தைகளும் எங்கே விளையாடிக் கொண்ருந்தாலும், நமது சுவாமி தியானத்தில் அமரும் நேரங்களில் உடனே வந்து விடுவார்கள். சுவாமிக்கு இப்போதெல்லாம் ஏகாந்த தியானத்தில் இருக்க வாய்ப்பு உண்டாகவில்லை. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு சுவாமி தியானத்தில் அமரும் போது, குழந்தைகள் யாராவது ஒருத்தர் உடனிருப்பது என்றும், மற்ற இருவர் தியானம் அறைக்கு வெளியே இருந்தபடியே, சுவாமியின் பாதுகாப்பை உறுதி செய்வதென்றும், முறைக் காவல் ஏற்படுத்திக் கொண்டனர். சுவாமிக்கு இது உள்ளூர சிறிது யோசனையை ஏற்படுத்திக் கொண்டே இருந்ததால், ஒழுங்காக தியானத்தில் இருக்க இயலவில்லை. தனது சுதந்திரம் பறிபோய் விடுமோ? என்று எண்ணத் துவங்கினார்.

ஆனால் நமது சுவாமியின் கருத்து இந்த வகையில் தவறு என்று அவரே ஒப்புக் கொள்ளும் வண்ணம் சில சம்பவங்கள் நடை பெற்றன. நாகராஜன் சுவாமிக்கு அப்போதுதான் தன்னைச் சுற்றிலும் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதைப் பற்றி அறிய அவை உதவின. ஒருநாள் வியாழக்கிழமை இரவு சுமார் எட்டு மணியிருக்கும். சுவாமி தனது தியான அறைக்குள் கோகுலுடன் அமர்ந்திருந்தார். வெள்ளலூர் தங்கையின் குழந்தை ஆகாயத்தைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தார். மெளலி மூடிய தியான அறையின் கதவின் வெளியே அமர்ந்து அத்தை மகன் பேசுவதை் கவனித்தபடி காவலிருந்தார். வெள்ளலூர் குழந்தை ஆகாயத்தைப் பார்த்துப் பேசியபடியே, யாருடனோ போராடியபடி, வழக்கும், சண்டையுமிட்டுக் கொண்டிருந்தார். சுவாமி தியானத்தில் ஈடுபடாமல் இருந்ததால், கோகுல், “அப்பா, நீங்கள் தியானம் செய்யா விட்டாலும், விளக்கின் சுடரைக் கண்களை இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருக்கும்படி சற்குரு நாதர் ஆண்டவர் கூறுகிறார் ” என்றார். ” அவர் கூறுவது எனக்குக் கேட்க வேண்டும் “என்று நமது சுவாமி மெதுவாகக் கூறினார். அதற்கு கோகுல், “அப்பா உங்கள் மனதை ஏன் துன்பத்திற்கு ஆளாக்க எண்ணுகிறீர்கள்? உங்களைப் பாதுகாக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளது! வீணான கருத்தினால் தியான சக்தியைக் குறைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டாம். உங்களைப் பற்றி உங்களுக்கு இப்போது தெரியாது. பிறகு அதற்கு நல்ல சந்தர்ப்பத்தைக் குருநாதர் ஏற்படுத்துவார்கள். இப்போது நீங்கள் உங்களது தியானக் கடமைகளில் இருந்து விலகாமல் இருக்க வேண்டும்” என்றார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button