கோகுலின் சந்தோஷத்தில் சுவாமி!

272

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

08•03•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(251) மனிதனே புனிதன் —
கோகுலின் சந்தோஷத்தில் சுவாமி!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
குழந்தைகள் கோகுல கிருஷ்ணா, சந்திர மெளலீஸ்வரர் இருவரையும் திருமதி.மீனாம்பாள் நாச்சியார் அவர்கள், தான் தியானத்தில் அமரும் நேரங்களில், கூடவே அமரவைத்து ஓர் நல்ல பழக்கத்தை உண்டாக்கினார். வெளியே எத்தனை குறும்புகளைச் செய்தாலும், பூஜை அறைக்குள் அமர்ந்து ஜெபம் செய்யும் பொழுது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், விருப்பமுடன் குழந்தைகள் இருப்பார்கள். பூஜை அறையின் உள்சென்று கதவம் அடைத்துவிட்டு அமர்ந்து இருத்தல் என்பது, அவர்களுக்கு இஷ்டமான, இயல்பான விஷயம் ஆகிவிட்டது. இப்படியாகக் குழந்தைகளுக்கு ஸ்ரீ ஈஸ்வர பட் ஆண்டவரின் தொடர்பு மெல்ல மெல்லப் புலனாகியது. குழந்தை கோகுல் இப்போது ஏகப்பட்ட மனநிறைவில் இருந்தார். அவருடன் ஸ்ரீ ஈஸ்வர பட் சற்குருநாதர் அற்புதமான தொடர்பு கொண்டுவிட்டார். இந்த சமயத்தில் கோகுல் பேசத் துவங்கி இருந்தது மீனாம்பாள் நாச்சியார் அவர்களைப் பரவசம் படுத்தி இருந்தது.மணிமணியாக பேசுவதுடன் சற்குருநாதர் தரும் ஞானப்பாடல்களை அருமையாகச் பாடவும் செய்தார். சுவாமியின் குடும்பத்தினர் பாடும் ஞானப் பாடல்கள் அநேகம் சுற்றிலும் குடியிருந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளையும் வசீகரித்து விட்டதால் அநேகம் குழந்தைகள் மணியின்மணி ஞானப் பாடல்களைப் பாடத் துவங்கியிருந்தார்கள்.

சுவாமி அவர்களின் மூன்றாவது தங்கையைக் கோவை வெள்ளலூரில் குடியிருக்கும், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஆண்கள் இருவரில், மூத்த பையனுக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். அவர்கள் கிராம பிறந்த வீட்டிற்கு வரும் போது குழந்தைகள் இருவரும் மஹா மந்திரம் ஜெபம் கற்றுக் கொண்டு, தியானம் செய்து வந்ததில், தெய்வீகத் தொடர்பைப் பெற்று விட்டனர். அதில் இரண்டாவது குழந்தைக்கு அமானுஷ்யத் தொடர்புகள் கிடைக்கப் பெற்றது. குழந்தைகள் சுவாமி அவர்களுடன் சேர்ந்து தியானம் செய்து வந்தனர். சுவாமி தியானத்தில் அமர்ந்து இருக்கும் போது ஒருநாள், குழந்தைகளுடன் சற்குருநாதர் பேசிக் கொண்டிருந்தார். மறுநாள் குழந்தைகள் தங்கள் சொந்தத் தயாரிப்பில் பல வகையான சப்தம் உண்டு பண்ணும் பொருட்களை பூஜை அறைக்கு எடுத்து வந்தனர். அத்துடன் வாழை இலை போட்டு அவரவர்களுக்குப் பிடித்தமான தின்பண்டங்கள், பெற்றோரிடம் கூறி வாங்கி வந்து, படையல் இட்டனர். மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம், பச்சிலைகள் எல்லாம் வைத்து ஞானப்பாடல்களைப் பாடிக் கொண்டும், சந்தோஷப்பட்டுக் கொண்டும் இருந்தனர். இன்னிசை கச்சேரி போலவே அது நமது சுவாமிக்கு இருந்தது. அப்படியே பரவசம் அடைந்து பிறகு எல்லா உணர்வுகளும் கடந்து ஏதோ லயத்தில் ஆழ்ந்து போனார்.

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தாரோ தெரியாது. உணர்வு திரும்பிக் கண் விழித்தபோது வீட்டின் பின்வாசல் பகுதியில் இருந்து குழந்தைகள் சந்தோஷ ஆரவாரம் காதுகளில் வந்து விழுந்தது. பூஜை அதையே அலங்கோலமாக இருந்தது. தனது உடலில் இருந்து நறுமணம் வருகிறதே என்று கவனத்தில் கொள்ளச் சற்றே அதிர்ச்சியும், கோபமும் உற்றார். தலை, உடம்பு எங்கும் மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, பச்சிலைகள் என அபிஷேக, அர்ச்சனைகள் செய்திருந்தனர். திண்பண்டங்கள் அனைத்தும் வாறி இறைக்கப்பட்டிருந்தன. என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து அமர்ந்திருந்தார். ஒவ்வொரு குழந்தைகளாகப் பூஜை அறைக்குள் வந்து, ஆசனமிட்டு, சின்முத்திரை வைத்து, ஓவியங்களில் வரைந்துள்ள சித்தர்கள் போல் அமர்ந்து, மேலும் சுவாமியை மிரட்சியடையச் செய்து விட்டனர். வெகுநேரம் தியானத்தில் இருந்த குழந்தைகள் தங்கள் இசைக் கருவிகளை இசைத்து சற்குருநாதர் மீது பாடல்களைப் பாடினர். பிறகு வெளியே செல்லும் போது தங்கள் இசைக் கருவியால் நமது சுவாமி தலை, உடம்பு என செளகர்யத்திற்குத் திருச்சாத்து சாத்தினர். “எதையும் இயல்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். கோபமே கொடிய சந்துரு. மனதைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. பகவானுடன் சேர்ந்து உணவு உண்ணும் பழக்கத்தைக் கற்றுக் கொள். குல தெய்வத்தை மறந்துவிடாதே.” மேற்கண்ட பொன்மொழிகளைச் சொல்லியபடியே அடித்து விட்டுச் சென்றனர். சுவாமிக்கு தலை எங்கும் வலித்தது. உடல் எங்கும் வீங்கி வலியில் கண் கலங்கினார்.” எதையும் தாங்கும் மனவலிமை வேண்டும்” என்று கோரசாகக் கத்தியபடியே எல்லாக் குழந்தைகளும் ஓடிப் போயினர்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button