ஈஸ்வரர் துணை வேண்டும்!

164

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

05•03•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(248) மனிதனே புனிதன் —
ஈஸ்வரர் துணை வேண்டும்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சத்குரு நாதர் ஸ்ரீ ஈஸ்வரர் சிறிது நேரம் மெளனமாக இருந்தார். பிறகு அவர், ” சூரிய தியானத்தில் பாடங்களைக் கேட்டு அதனைப் பதிவு செய்து வருகறீர்கள் அல்லவா?” என்று கேட்டார்.
“ஆம் சுவாமி பதிவு செய்து கொள்கிறேன். பாடங்கள் புரியவேண்டும் சுவாமி ” என்றார் சுவாமி நாகராஜன். பிறகு தங்கள் சற்குரு நாதரின் புன்னகை தவழும் முகத்தைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தனர். சற்குருநாதர் திருவாய் மலர்ந்து, ” மகனே நாகராஜா, நீ மரணத்தை விரும்புகிறாயா?” என்றார். உடனே நாகராஜன் சுவாமி, “பகவானே, தாங்கள் எங்களை நேசித்து போல், நாங்களும் மனிதப் பிறவியை நேசித்து வாழ்வைக் (சத்திய,தர்மம்) கடைப் பிடிக்கின்றோம். ஆனால் இறப்பு (காலம்) எங்களை விரும்புகின்றதா? என அறிய நினைக்கின்றோம் ஐயனே” என்று கேட்டார்.
” நாகராஜா மனதை வெறுமையாக்க உனது பாட்டியிடம் நீ கற்றுக் கொணாடாய். அது நல்லது தான்!
ஆனால் மனிதன் நினைத்தால் (விருப்பம்) எந்தவொரு விஷயத்தையும், மனதிற்குள் கொண்டு செல்லாமல் செய்து கொள்வது சாத்தியம! எதையும் நினைக்காமலேயே இருந்து விட முடியும். மனிதன் இடம் கொடுக்காமல் வெளியில் இருந்து எதுவும் மனதிற்குள் செல்ல எந்த வகையிலும் வழி திறக்காது! இதுவும் இயற்கை நியதி என்பதை அறிவாயா?” என்று சற்குருநாதர் வினவினார்.

அதற்கு நாகராஜன் சுவாமி பதில் உரைத்தார். “சகல ஜீவர்களையும் போஷிக்கும் தேசிகரே! மனதை வெறுமையாக்க நாம் எங்கிருந்து வந்தோமோ, அந்தப் பண்டு நாட்டில் உள்ள பராபரத்தை எண்ண வேண்டும் என்று, மஹா ஆத்மா பாட்டி அவர்கள் வழி கூறியது உண்மை. பராபரம் யார் எனத் தெரியாது, ஆனால் தங்களைத் தான் அறிந்து கொள்ள முடிந்தது எம்பிரானே!” இதற்கு சற்குரு நாதர் மெளனம் காத்தார். பிறகு சற்குரு அடுத்த வினாவைக் தொடுத்தார்.
” நான் யார் நாகராஜா?” – சற்குரு.
” உலகில் உள்ள சகலமும் ஒன்றோடு ஒன்று பிணைப்பில் இணைக்கப்பட்டிருப்பதை, அனைத்தும் கலந்திருப்பதை, தெய்வீக சம்பந்தத்துடன் கூடிய தொடர்பில் இருப்பதை உணர்த்த வந்த ஸ்ரீ ஈஸ்வரர் என்றார் நாகராஜன் சுவாமி. ” எங்கே சுருக்கமாக விளக்கம் கூறு” எனப் பணித்தார் ஸ்ரீ ஈஸ்வரர்.
நமது சுவாமி கூறுவார், “இறைவனால் படைக்கப்பட்ட எதுவுமே தனித்தனியாக இல்லை. ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கும் இயற்கை இயல்பின் ஒப்பந்தமே! சகல ஜீவன்களும், சகலப் பொருட்களும் சேர்ந்த ஓர் உயிரோட்டமுள்ள நியதியானது இப் பிரபஞ்சம். ஸ்ரீ ஈஸ்வரர் அறிவார்.”

சற்குரு நாதர்,”பேஷ் பேஷ்! மரணத்தைத் காட்டிலும் கொடுமையானது எது? சொல்!”
நாகராஜன் சுவாமி, ” பகவானே, என்னுள் இருந்து இயக்குவதும், பேசவைப்பதும் நீரே அல்லவா? அறியாமை என்னும் நோய் தான் மரணத்தைக் காட்டிலும் கொடுமையானது. அறிவு பெற்றவன் விதிக்கு அஞ்சமாட்டான். எதனையும் எதிர் கொள்ளும் வலிமையும், ஏற்றுக் கொள்ளும் பக்குவமும், செயல் கொள்ளும் தைரியமும் அவனுக்கு ஏற்பட்டிருக்கும். பிரபஞ்சத்தின் கருத்துக்கு, உலகம் உண்டான காரண அமைப்பிற்கு அவனால் இசைந்து வாழ முடியும்” என்றார்.
சத்குரு, “எதிர் கால வாழ்வை எப்படி வாழ வேண்டும் சொல்?”
நமது நாகராஜன் சுவாமி தயக்கத்துடன், ” மனிதன் அறிவு பெற்றிருந்தால், வருங் காலங்களில் கடமைகளைச் செவ்வனே செய்து வாழும் ஆற்றல் உண்டாகும். எதிர் காலக் கவலைகளை நிகழ் காலத்தில், அறிவின் திருவைப் பெற்றவன், எதற்காகவும் கலங்க மாட்டான்.”

“இன்பத்தை எப்படி அனுபவிக்க வேண்டும்? பதில் கூறு!”– ஸ்ரீ ஈஸ்வரர்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button