பைரவிக்கு மக்கள் சாபம்!

143

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

25•02•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(240) மனிதனே புனிதன் —
பைரவிக்கு மக்கள் சாபம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“நம்முடைய காரியத்திற்கு இன்னல்கள் விளைவிப்பவர்களைக் கண்டு முதலில் நாம், விவேகமுடன் கூடிய நமதறிவைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அப்போது தான் நமது கடமைகளைச் சரிவரச் செய்ய முடியும். அவர்களிடம் அன்பைச் செலுத்துவதால் மட்டுமே நமது அறிவைக் காக்கும் வழி புலப்படும். நம்மை இகழ்ந்து பேசுபவர்களை, நம்மிடம் பகையாக நடந்து கொள்பவர்களை, அது
பாதிக்கப் போகின்றது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை! புறச்செயல்களினால் நமது உள்ளம் பாதிப்பை அடையாமல் வைத்திருந்தால், எதனையும் பகுத்தறியும் சக்தி நமக்குள் வளரும். நமது ஆன்மா சக்தி பெறும். (ஏனென்றால்) நமக்குள்ள காலம் மிகவும் குறைவாக இருப்பதனால், நமது மனதை நாம் காப்பாற்ற வேண்டியது அவசியம். நமது மனதிற்கு நாமே அதிகாரியாக இருப்பதால் இது நமக்குச் சாத்தியமே! இயல்புக்கு மாறாக நடக்கும் போது நம்முடைய பிறப்பின் தர்மத்தை நினைவில் எண்ணி, அதன்படியே நடந்து கொள்வது நமது வாழ்வின் நெறிமுறைகளாகும். — ஸ்ரீ ஈஸ்வர நீதி உரையாகும்”

” நிறுத்துங்கள் என்ற சப்தம் இட்டபோது அனைவருடைய கவனமும் பைரவியின் மேல் திரும்பியது. வழிகாட்டி நடத்த வேண்டிய குரு பத்தினி சினம் கொள்வது எல்லோருக்கும் வியப்பை உண்டு பண்ணியது. யார் மீது இவளுக்குச் சினம்? ஆதி குரு நாதனின் கருத்தையும், சுபாவத்தையும் அறிந்து கொள்ள இயலாத மனைவியா இவள்? எப்படி இவளால் நிம்மதியாக உண்டு, உறங்க முடிகிறது? மனித மனதில் ஏற்படும் அகங்காரத்தையும், அறியாமையையும் அறிந்து கொள்ளாதவளா நமது குரு பத்தினி? என்று அனைவரும் மனதில் எண்ணினாலும், அது பற்றி வாயைத் திறக்காமல், அதிர்ச்சியில் மெளனமாகிப் போனார்கள். மனதிற்குள் அவளைச் சபித்தார்கள். ஆனால் தனது இயல்பில் வாழும் ஆதி குரு நாதனும், அவர் மாயா அன்னையும் இதனைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. பாதபூஜை தொடர்ந்து நடை பெற்றது. மனம் பொறுக்காத பைரவி அந்த இடத்தை விட்டு வேகமாக அப்புறமாக அகன்று போனாள். அடுத்து ஆதி குரு நாதனுக்கு மரியாதை செலுத்தும் நிமித்தம், அவரது சீடர்கள் அவரை இருக்கையில் அமர வைத்தனர். அறையின் கதவை அடைத்துக் கொண்ட பைரவி தனது அறையில் பலகணி அருகே நின்று கொண்டு, புறத்தே தனது பார்வையைச் செலுத்தினாள். அங்கே காட்டு நாய்கள் கூட்டம் நின்று கொண்டு அவளையே ஆக்ரோஷமாகப் பார்த்துக் கொண்டிருந்தன. அவளும் அவைகளை வெறித்துப் பார்த்தாள்.”

” விருந்துண்டு விட்டு அனைவரும் புறப்பட்டுச் சென்ற பிறகு பைரவி தனது அறையை விட்டுக் கடுகடு முகத்துடன் வெளியே வந்தாள். இன்னும் ஆதி குரு நாதனும், அவரது அன்னையும், குரு பத்தினி பைரவியும் இனி உணவு உண்ண வேண்டியது தான்! தமது சீடர்களிடம் ஆதி குரு, தனது குரு பத்தினியை உணவு எடுத்து வரப் பணித்தார். அவள் உணவு சமைத்த பாத்திரத்தை, வேறு எதனையும் யோசியாமல், அவசரப்பட்டுத் தனது கணவன் முன்னிலையில் தொம் என்று சப்தத்துடன் வைத்தாள். குரு நாதனும் அவர் மாயா அன்னையும் பாத்திரத்தைப் பார்த்து விட்டுப் பிறகு, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆதி குரு நாதன் முகத்தில் ஆதிர்ச்சியும், கவலையும் மாறி மாறித் தோன்றின. காரணம் பாத்திரம் இரண்டு அறைகளாகச் செய்யப் பட்டிருந்ததுதான். பாத்திரத்தின் ஒரு அறையில் மணமுள்ள சோறும், கறிகாய்களும் இருந்தன. மற்றொன்றில் மயில் துத்தமிட்டுக் காய்ச்சப்பட்ட குறுணைக்கஞ்சி நீலம் பாரித்துக் கொண்டிருந்தது. தனது தாயாருக்கு இலையிட்டு மணமுள்ள சோற்றைப் பரிமாறினார். ஆத்திரக்காரிக்குப் புத்தி மட்டு என்பது போல் நடந்து கொண்ட பைரவிக்குத் தனது அறைக்குள் சென்ற பிறகே, தான் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட உண்மை புரியவர நடுங்கினாள். பாத்திரத்தை எடுக்க ஓடி வந்தவளுக்குத் தனது மாமி பேசிய வார்த்தைகள் இன்னும் பயத்தை உருவாக்கி விட்டது.
‘அப்பா ஆதி குரு நாதா நமது துன்பங்கள் எல்லாம் நீங்கி விட்டதா? இப்படி மணமுள்ள உணவைப் சாப்பிட்டு எத்தனை வருடங்கள் ஆகி விட்டன? இந்தக் கஞ்சியை தினமும் குடித்து நாக்கு உணர்ச்சி அற்றுப் போய் விட்டதப்பா! இன்றைக்கு நீ செய்த அன்னதானம் என் நெஞ்சைக் குளிரச் செய்து விட்டதப்பா! இனி உனக்கு ஸ்ரீ கணபதியின் அருளால் வியாழன் கோளில் அருளாட்சி செய்து வரும் பாக்கியம் கிடைக்கப் பெறும். வியாழன் கோளை நெருங்கும் எந்த சக்தியாக இருந்தாலும், அந்த சக்தியை வியாழன் மண்டலமானது தானே ஈர்த்து எடுத்து வளரும். உனக்கும் கிடைத்திடச் செய்யும். இந்த தவத்தினுக்கு எந்தவிதமான இடையூறுகளோ, தடங்கல்களோ இன்றிப் பொறுமையாகக் காரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டி வெற்றி பெறுவது அவசியம். எனது ஆசிகள் என்றுமே உனக்கு
உண்டு மகனே’ என்று கூறினார்.”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button