குரு பத்தினிககு சோதனை!

215

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

21•02•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(236) மனிதனே புனிதன் —
குரு பத்தினிககு சோதனை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தவக்கனலாய், ஞானச்சுடராய் விளங்கிய தவத்திருமதி. பொன்னம்மாள் பாட்டி அவர்கள் தமது பேரன் தவத்திரு.ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்களுடன், ஆழியாற்றுப் பாலம் கடந்து ஸ்ரீ பிரசண்ட விநாயகர் கோவில் செல்லும் பாதையில், வயல் வரப்பின மீது சாவகாசமாக அமர்ந்து கொண்டு இப்புண்ணியக் கதையை, தனது முன்னோர்களிடம் கேட்டறிந்த ஆதி குரு நாதன் வரலாறு கூறிக்கொண்டு இருந்தார். இதனைக் கூறிய பிறகு தங்களுடைய குருநாதர் ஸ்ரீ ஈஸ்வரரைச் சந்தித்து ஓர் கோரிக்கையைக் கேட்க இருக்கிறார்கள். இனி ஸ்ரீ ஞான கணபதியின் ஆசீர்வாதம் பெற்ற சம்பவங்களையும் இனி காணலாம்.

“ஸ்ரீ ஞான கணபதி ஆதி குரு நாதனின் ஏக்கத்தைத் தீர்க்க விரும்பினார். மாயையினால் ஆதி குரு நாதன் அன்னையை மனதினால் சிருஷ்டித்து அவர் வீட்டிற்கு குருபத்தினியிடம் அனுப்பி வைத்தார். அத்துடன் பிரபஞ்ச ரகசியங்களைப் போதிக்க அந்த மாயா அன்னைக்கு உத்திரவு பிறப்பித்தார். அதனை அறியாத ஆதி குரு நாதனிடம் அகிலமே போற்றி வணங்கும் தெய்வீக வித்தையினைக் கற்பித்து இதனை சமயம் வரும்போது உலக நன்மைக்காகப் பயன்படுத்திக்கொள்ளக் கூறினார். நன்றி கூறிய ஆதி குரு நாதனுக்கு அருளாசிகள் புரிந்து மறைந்தார். இப்போது அவருக்குத் தான் ஸ்ரீ ஞான கணபதியிடம் பெற்ற அருளை எண்ணி மகிழ்ச்சி ஏற்பட்டது. அதேசமயம் அவர் வீட்டில் அனேக விஷயங்கள் நடக்கத் துவங்கி விட்டன. வினை விதைத்தவள் வினை அறுக்கப் போகிறாள் என்பது உண்மையானது.”

“ஆதி குரு நாதனின் மனைவி பைரவி தனது இல்லத்தில் நிம்மதியாக உண்டு உறங்கிக் கொண்டிருந்தாள். பண்டு நாட்டில் தான் தன் உறவினர்களை விட்டுப் பிரிந்து வந்த ஏக்கத்தைத் தவிர வேறு எந்தக் குறையும் கிடையாது. வீட்டில் மாமியிருந்தால் அவர்களுக்கும் சேர்த்து பணிகள் புரிய வேண்டும். அந்த இடையூகளையும் அகற்றி விட்டோம். பணிகளைச் செய்ய ஆட்களையும் அமர்த்தி யாயிற்று. இனி இல்லத்தில் நானே ராஜா, நானே மந்திரி என எண்ணிய பைரவியின் மனதில், இப்போது ஏதோ குறைகள் தென்படத் துவங்கியது. அடடா, மாமி மட்டும் இருந்தால் எனது ராஜ வாழ்வைப் பெருமைப் ‘பட்டுக் கொள்ள ஒரு வாய்ப்பாகவாவது இருந்திருக்கும். இப்போது தான் யாரை அதிகாரம் செய்வது? எனத் துயருற்றாள்.
இங்கு நாம் முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும். தனது பிறப்பு, வளர்ப்பு எப்படி? எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நமது எண்ணம் மட்டும் பரிசுத்தமாக இருந்து விட்டால் நிச்சயம் நம்முடைய வாழ்வை இறையருள் துணையிருந்து காப்பாற்றும். நம்மைப் பக்கத்து துணையருந்து நல்வழியில் நடத்தும் என்பதே உண்மை. இல்லையேல் வாழ்வில் நிம்மதியை இழந்து தவிக்கும், சூழலில் அகப்பட்டுத் துயருரும் செயலே நடைபெறும்.”

“அது அகால நேரம். சூறாவளி போல் காற்று வீசி, இரவின் நிசப்தத்தில் சில்வண்டுகளின் ரீங்கார ஓசையை அடக்கியபடி, பலத்த இரைச்சல் போட்டுக் கொண்டிருந்தது. வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த அக்கினிப் பூக்கள் பூக்கும் பெரிய மரத்தின் கிளை ஒன்று, காற்றின் வேகத்தினால் முறிந்து விழுந்த சப்தம், தடால் எனக் கேட்டு திடுக்கிட்டு, உறக்கம் நீங்கி கண விழிப்படைந்தாள் ஆதி குரு நாதனின் மனைவி. தனது மாமி வீட்டை விட்டுச் சென்ற தினத்திலிருந்து தினமும் இரவு நேரத்தில் காட்டு விலங்கு ஒன்று ஊளையிடும் சப்தம் தொலைவில் கேட்கும். அதனால் தனது பணிப் பெண்ணை தனது உறங்கும் அறையிலேயே துணையாகத் தங்கிக் கொள்ளச் செய்திருந்தாள். ஆடிக்காற்று பலமாக வீசிக் கொண்டும், பாதையில் இருக்கின்ற மண்ணை அள்ளிச் சுழற்றி எறிந்து ஊ.. ஊ வென சப்தமிட்ட வண்ணமாகவும் இருந்தது. அன்று பெளர்ணமி திதியானதால் இரவின் இந்தச் சூழல் மனதில் அச்சம் என்பது மனதில் மறைந்தே இருக்கிறது என்பதை அவ்விரண்டு பெண்கள் முகத்தில் பளிச்செனக் காட்டியது. எழுந்து சென்று பலகணி வழியாக வெளியே பார்வையைச் செலுத்திய இருவரும் பயத்தில் அலறினர்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button