ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
18•02•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(233) மனிதனே புனிதன் —
ஆதி குரு நாதனின் முதல் சாபம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
” தனது அன்னையைத் தேடிச் சென்ற ஆதி குரு நாதனின் எண்ணம், சில தேவதைகளின் சோதனைச் செயலாகக் கூட இருக்கலாம் என்று சந்தேகித்து அவர்களைச் சந்திக்க விரும்பினார். பூவுலக சேவைகள் நிமித்தம் அறிவின் வளர்ச்சிக்குத் துணை செய்ய வந்த குருமார்கள், தங்களது கோப உணர்வினால் சக்திகளை இழந்து விடக்கூடாது என்பதில் கவனமாய் இருக்க வேண்டும் என்பது ஓர் நியதி. அதற்கும் மேல் தங்களுக்கு, இடர் பாடுகளை வரும்பி யாராவது தீமைகள் செய்தால், அவர்களைக் கேட்பதற்கு உரிய உரிமையும் இருக்கிறது! தேவதா வசீகரம் என்ற உபாசனையில் தனது வாழ்வில் குறுக்கிட்ட தேவைகளைப் தன்பால் இழுக்க ஆரம்பித்து விட்டார். அவர்கள் வரும் வரை உபவாசம் இருக்க எண்ணி, பசி ஏற்படாமல் இருக்க ஒளஷதம் உட்கொண்டார். இரைப்பையில் இருந்து அதனை வெளியே எடுக்கும் வரையில் பசி நின்று விடும். உபவாசத்துடன் கூடிய உபாசனா என்று நாட்கள் செல்லச் செல்ல தவத்தின் உக்கிரம் அதிகமாகியது. தவக்கனல் கூடுதலாகத் தேவதைகளைத் தகிக்கத் துவங்கி விட்டது. அக்னியின் வெப்பம் தாளாமல், அவரது தாயாருங்குத் துன்பம் விளைவித்த தேவதைகள், துன்பம் மிக அடைந்து, உடனே நேரில் பிரசன்னம் ஆனார்கள்.”
“ஆதி குரு நாதனிடம் முதலில் தங்களைப் பொறுத்தருளும்படி தயவுடன் வேண்டிக் கொண்டார்கள். தவக்கனல் எங்களைத் தகிக்கின்றது, போதும் போதும், இனித் தாள இயலாது. தவத்தை நிறுத்தி விடுங்கள் என வேண்டிக் கொண்டார்கள். நாங்கள் தங்களுடைய தாயாரின் கடவுள் நம்பிக்கையுடன் கூடிய வைராக்கியத்தை சோதனை செய்து பார்த்தோமே தவிர நாங்கள் எவ்விதத் துன்பங்களும் தரவில்லை என்றனர். அதற்கு ஆதி குரு நாதன தனது தாயாரைத் தேடிக் கண்டு பிடித்துத் தேவதைகள் தன்னிடத்தில் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எங்களால் அது இயலாது; காரணம் அவர் விண்நாடு அடைந்து விட்டார். இதில் தங்களது மனைவிக்கும் பெரும் பங்கு உண்டு என்று கூறினர். தான் வஞ்சிக்கப் பட்டதை எண்ணி, ஆதி குரு நாதனுக்கு ரெளத்ரம் பல மடங்கு அதிகரித்தது. தனது தவ சக்தியால் முதல் சாபத்தை, மிகக் கடுமையாகத் தெய்வங்களுக்குக் கொடுத்து விட்டார்.”
“குற்றமற்ற குருநாதனை வஞ்சித்த தேவதைகளே, மற்றவர்கள் உங்களுக்குத் துரோகம் இழைத்தால், ஆதி குரு நாதனாகிய நான் அவர்களை உங்களிடமிருந்து காப்பாற்றி விடுவேன். ஆனால் குற்றமற்ற குருநாதனுக்கு யார் துரோகம் செய்தாலும், அவர்களை, அக்குரு துரோகிகளை எந்த தெய்வங்களாலும் காப்பாற்ற முடியாது என்று சபிக்கின்றேன்.”
“யக்ஞங்கள், நைவேத்தியங்கள், வழிபாடுகள் வழியே அவிஸ் பெற்று சிறப்பான சக்திகளைப் பெற்று வரும் தேவதைகளால் இக் கடுஞ்சாபத்தைக் கேட்டு ஆதி குரு நாதனின் மேல் கோபம் கொண்டார்கள். அந்த தேவதைகள் அவருக்கு எதிர் சாபம் கொடுத்து விட்டார்கள்!”
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.