ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
14•02•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(229) மனிதனே புனிதன் —
வானோர்கள் தந்த சோதனை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஞானச்சுடராக விளங்கிய தவத்திருமதி. பொன்னம்மாள் நாச்சியார் அவர்கள் ஸ்ரீ ஈஸ்வர நீதியையும் எடுத்துரைத்தார்.
” நாம் காணும் இப்பிரபஞ்சம் முழுவதும் ஒரே ஒரு உயிராகத் தான் இறை அருளால் படைக்கப்பட்டது. அந்த ஓர் உயிர் பல்கிப்பெருகி அநேக உயிராகத் தோற்றம் தருவதும் கருணை மிகுந்த இறை சக்தியால் தான்! இப் புதுமையான செயல் தான் ‘ஞானம்’ என்று அறிவுறுத்தப் படுகிறது. இதனை உணர்ந்து வாழ்வை வசப்படுத்துபவனுக்கு, எத்தகைய இன்னல்கள் நேர்ந்தாலும் அதனைச் சமாளித்து முன்னேறும் ஆற்றல் சக்தியைப் பிரபஞ்ச உயிராத்மா என்னும் இறை சக்தியின் மறக் கருணையால் வழங்கப்படுகிறது. மற்றும் அறிவியல் சாதனா சக்திகளும் அங்கிருந்தே தான் நமக்குக் கிடைக்கப் பெறுகிறது.”
“வாழ்க்கையில் எது நடந்தாலும், மனதிடத்துடன் அதனைத் தாங்கிக் கொள்வதற்குத் தேவையான ஆற்றலையும் அது தருகிறது. இதனால் இப்புவியில் வாழும் வாழ்க்கை எளிதாக நமக்கு அமைகிறது. சாதனா சக்திகள் தனக்குள் சாந்தத்தை ஏற்படுத்தும் என்பதைத் தனது அருமை குரு நாதர் வாயிலாக உணர்ந்து கொண்டிட முடியும். உளமார்ந்த நம்பிக்கையுடன் தனக்குக் கிடைக்கப் பெற்ற சாதனைகளைக் கொண்டு, ஆற்றலைப் பெருக்கித் தனது ஆத்மசக்தியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தவும் முடியும். இதற்கு குரு நாதனின் அருளாசிகள் கிடைத்திட்டால், பக்கத் துணையிருந்து, பாதுகாப்பாக, நல்வழியில் நடந்திட வழிவகை செய்யும்.”
மேலும் கூறினார், “ஆதி குரு நாதன் தனது கருத்தை அலட்சியம் செய்வதாக குருபத்தினி கருதினாள். அவரிடத்தில் தனது ஆதங்கத்தை, கோபத்தைக் காட்டிட இயலவில்லை. எனவே அவளது கோபம் தன் கணவனின் தாயாரின் மீது திரும்பியது. எல்லா உயிரையும் தன் உயிர் போன்று நேசிக்கும் பண்பு போய் விட்டது. நல்ல உணவு வகைகளை உட்கொண்டு படுக்கையில் கிடக்கும் மாமியைப் பழிவாங்கிட எண்ணினாள். உதவிக்கு மருமகள் வராததால் தனது பணிகளைத் தானே செய்திடும் நிலைக்கு ஆதி குரு நாதனின் தாயார் தள்ளப்பட்டார்.”
“அறிவை வழங்கிட தேசாந்திரம் சென்று விட்டு, ஆதி குரு நாதன் வீடு திரும்பும்போது அந்த சமயத்தில் மாத்திரம் மாமியைக் கவனித்து உதவிகள் செய்து வந்தாள் குரு பத்தினி. தனது மகனிடம் தனது நிலையைக் கூற இயலாமல் தவித்தார் அந்தத் தாயார். தான் ஏதாவது கூறப்போக மகனது குடும்ப வாழ்வில் பிணக்கு ஏற்படும் என்ற அச்சத்தால் பொறுமையைக் கடைப் பிடித்து வந்தார். இனி எந்த வகையிலும் எப்படிப்பட்ட துன்பங்களைத் தனது மருமகள் தனக்கு விளைவித்தாலும், இறைவன் மீது மனபாரத்தைப் போட்டு விட்டு ஜெபம் செய்து வரலானார். வானோர் இதனைக் கண்டு வியந்து ஆதி குரு நாதரின் தாயாருடைய வைராக்கியத்தைச் சோதிக்க எண்ணினர்.”
” வானவர்களாகிய தேவர்களின் விருப்பத்திற்கு ஆளாகும் மனிதனின் நிலை எப்படி இருக்க வேண்டும்?
தனது வாழ்க்கையில் தனக்கெனக் கிடைத்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும்! அத்துடன் தான் பெற்றதைத் கொண்டு திருப்தியுடன் வாழவேண்டும்!
தான் வழிபடும் குலதெய்வம் தனது உள்ளத்தில் இருந்து வழிகாட்டி வருவதில், மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும்!
இப்படிப்பட்ட மனிதனை தாங்கள் தரும் சோதனையில் வெற்றி பெற வைத்துப் புனிதனாக்கித் தங்களுடன் வானுலகத்தில் வாழ அழைத்துக் கொள்வார்கள்! மனிதன் ஏழாவது பிறவியாகிய தெய்வநிலை அடைவதும் மேற்கூறிய நேர்மறைப் பிரார்த்தனை வாழ்க்கையில் மட்டுமே!
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.