ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
12•02•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(227) மனிதனே புனிதன் —
குரு பத்தினியின் உள்ளம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
” அப்பா, உன்னிடத்தில் உள்ள அபூர்வ நற்குணங்களே இதனைக் கூறவைப்பதாக முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் இப்போது சொல்ல விரும்பும் செய்தி மிகவும் முக்கியமானது.
உலகில் மக்களின் செவிவழிக்கு
வந்துள்ளவை அனைத்தும் அவர்களால் ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன! பதிவு செய்யப்படாதவைகள் அநேகம் உள்ளன! அதில் ஒன்று ஆதி குரு நாதன் பற்றிய வாழ்வின் உண்மையான நிகழ்வு.”
“கேள் மகனே, ஆதிகுருநாதன் என்பவர் தனது இல்லத் துணைவியுடனும், தனது தாயாருடனும் பாரத தேசத்தில் வாசம் செய்ய வந்தவர். இவர்களது பூர்வீகம் பற்றி எவ்வித ஆதாரங்களும் கிடையாது. ஆனால் இந்த பூமியில் வாழ்ந்திருந்த மக்களில் தாங்களும் ஒருவர் என்றும் அவர்கள் கருத்துக் கூறினார்கள் இல்லை! ஆதி குரு நாதன் குடும்பம் உலக மக்களுக்கு அறிவின் பாடபோதனைகளைக் கொண்டு வந்தவர்கள். அவர்களின் போதனைகள் விசாலமானதாக உள்ள மனம் போலவும், கூர்மையுடன் கூடிய புத்தியைப் போன்றும், அறிவினைப் போன்று ஆழமுடையதாகவும் இருந்தது.”
“அப்பா, இப்புவியின் சுற்றுச் சூழல் ஆதிகுருநாதனின் தாயாருக்குக் காலப்போக்கில், உடல் நிலைக்கு ஒத்துக்கொள்ள இயலாத சூழல் ஏற்பட்டது. எனவே அவர்கள் மகனிடமே மருத்துவ சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்து கொண்டு தனது வாழ்நாளை இறை ஜெபத்தில் கழித்தார்கள். ஆதி குரு நாதனின் மனைவிக்கோ இப்புவியில் பாரதத்தில் வாழ வந்தது பிடித்தமானதாக இல்லை. சமயம் வாய்க்கும் போதெல்லாம் தமது பூர்வீக பண்டு நாட்டிற்குச் செல்ல நாட்டம் உள்ளதாக, தனது உள்ளக்கிடங்கையை வெளிப்படுத்திடவும் தவர வில்லை. ஆதி குரு நாதனிடம் இப்போது அறிவுள்ள மாணாக்கர்கள் பாடங்கள் கற்று வந்தனர். அவரவர்களுக்கு கிரஹிக்கும் ஆற்றலைப் பொறுத்தே பலவிதமான கலைகளைப் பயின்று வந்தார்கள்.”
“மகனே, அநேகர் ஆயுள் நீட்டிப்பும், மூலிகை ரகசியங்கள், ஒளஷாதிகள் பற்றியும், வசீகர சக்தி மற்றும் மாந்திரீக தாந்திரீகங்கள் பற்றியும், ரசவாதங்கள் பற்றியும், முப்பூ குரு, மறைப்பு வித்தைகளையும் அறிந்து கொள்ளத் துடித்தார்கள். ஆதி குரு நாதனிடம் ஆசி பெற்று, இறைவனின் நோக்கத்தை அறிந்து, அதன்படி நடப்பவர்கள் எண்ணிங்கையில் குறைந்த நபர்களே இருந்தனர். ஆனால் எந்த வித்தைகளைக் கற்றுக் கொண்டாலும் அதில் ‘குரு சாப நிவிர்த்தி ‘ என்பது முக்கியமானதாகும். அதன் பொருள் மறைக்கப்பட்டிருந்தது. விவசாயம் செய்யும் பல வழி முறைகள், வஸ்திரங்கள் உற்பத்தி முறைகள், யோகவித்தைகள், அஸ்திரப்பிரயோகங்கள், விஞ்ஞான முன்னேற்றத்தினால் வரும் பயன்கள் எனப் பல படிகள், பாட போதனைகளாக இவ்வுலக மக்கள் அறிந்து கொண்டார்கள்.”
“ஆதி குரு நாதன் இவ்வுலகினுக்கு வரும் போது, அறிவின் பாடபோதனைகளைப் போதிக்க அவருடன் இணைந்து வந்தவர்கள் மிகவும் அதிகமாக இருந்தனர். அவரவர்கள் கொணர்ந்த பாடங்கள் இங்கு தோன்றி வாழ்ந்த மக்களுக்கு மிகவும் அவசியமாக இருந்தது. அவைகளை உடனே புரிந்து கொள்ள இயலாவிட்டாலும், காலப்போக்கில் அறிவின் விருத்தியில் நல்ல மாறுதல்களை, முன்னேற்றத்தைத் தந்து, புவி வாழ் மக்களிடையே புதிய சமுதாய மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தியது.”
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.