ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
07•02•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(222) மனிதனே புனிதன் —
பணம் எடுத்த காரணம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இல்லற தர்மத்தில் வாழ்பவர்கள் தெய்வீக பக்தியுடன் வாழ்ந்தால் மட்டும் போதாது. அறவழியில் தானதர்மங்கள் செய்பவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அறவழிச் செயல்கள் குடும்பத்தில் விருத்தியடைந்து வரவேண்டும். ஏழை எளிய மக்களுக்கும், உண்மைத் துறவியர்களுக்கும், பிச்சை எடுத்துண்ணும் அனாதைகளுக்கும் உதவிகள் செய்து வரவேண்டும். புண்ணிய ஆத்மாக்கள் என்றும் உதவி செய்பவராகவும், அன்னதான தர்மகாரியங்கள் செய்பவர்களாகவும் அவர்கள் இவ்வுலகில் திகழ்ந்து வாழ்வாங்கு வாழ்ந்து, பேரின்ப முக்தி நிலையை அடைவார்கள்.
அன்னார் அறத்தின் மீதும் இறைசக்தியின் மீது நம்பிக்கை கொண்டு அவ்வழியில் செல்வார்கள். — ஸ்ரீ ஈஸ்வர நீதி.
விவசாயியின் குடும்பத்தின முன்னோர்கள் ஜெபதவ வாழ்க்கையில் ஈடுபட்டு அபாரமான சக்தியைப் பெற்று வாழ்ந்திருந்திருக்கின்றார்கள். சித்துநிலை கூடக் கைவரப் பெற்று அதில் வெற்றியையும் அடைந்தவர்கள். ஆனால் அவர்களுக்கு தருமசிந்தனை இருந்தாலும் கூட அதனைச் செய்திடும் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறாதவர்கள். எனவே அவர்கள் அடைய வேண்டிய புண்ணியத்தை அடையாமல் சாதாரண சித்துக்கள் கைவரப் பெற்றவர்கள். அதாவது “பொருள் மறைப்பு சக்தி “யைப் பெற்றுத்திகழ்ந்தவர்கள். ஓரளவு சிறிய பொருட்களை இடம்விட்டு இடம், பிறரறியாமல் கொண்டு செல்லும் ஜாலவித்தையது. அவர்களது ஆன்மசக்தியானது இதனால் குறைவுபடும் என்று தெரிந்திருந்தும் அவர்கள், தங்களது குடும்பத்தின் சந்ததியினர் வசதி பெற்றிருந்தும் தானதரும சிந்தனை அற்ற அவர்களுக்குப் புத்தியைப் புகட்ட எண்ணிச் செயற்பட்டு விட்டார்கள். அதனால் பொருள் மறைப்பு வித்தையைப் பயன்படுத்தி பிரசாதங்களைக் தந்து சந்தோஷப்படுத்தி உள்ளனர்.
சந்ததியினர் புண்ணியம் பெறவேண்டும் என்று வீட்டில் இருந்து பணத்தை எடுத்துச் சென்று அனாதைகளுக்கும், பசியோடு இருப்பவர்களுக்கும், ஏதாவது உபாயத்தைப் பயன்படுத்திக் தருமம் செய்து இருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம்? என்று சந்தேகம் எழுவது இயற்கை! ஆனால் உண்மையில் அப்படித்தான் நடை பெற்றிருக்கிறது. அங்கு கூட்டுதியானங்கள் நடை பெற்றிருந்தால் இது சமன்செய்யப்படவும், குருவின் சகாயத்தினால் விமோச்சனங்கள் பிறக்கவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் அவ்வூர் மக்களின் பயம் காரணமாக அப்படி தியானம் நடைபெற வில்லை. எது எப்படியோ ஒரு சுபம் உண்டாவதற்குப் பல நல்ல விஷயங்களும், சில எதிர்பாராத நிகழ்வுகளும் மனிதனை சரியாகச் சிந்திக்கத் காரணமாக அமைகின்றன. அங்கு கூட்டுதியானம் நிறைவில் கைத்தரி நெசவுத் தொழில் செய்து வருபவர் நமது சுவாமி மீது அக்கரை உள்ளவர்போல் பேசினார். “என்ன இருந்தாலும் நீங்கள் ஆவிநடமாடும் இடத்தில் இன்று இரவு தங்கி விடாதீர்கள். இங்கு வந்து விடுங்கள்” என அன்புடன் கூறினார். தவத்திரு ஸ்ரீ வேணுகோபால சுவாமியும் அங்குதான் இரவு தங்கிக் கொள்ள வந்தார். அவருக்குப் புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது. அதனை யாரும் பெரிதாக எண்ணவும் இல்லை. அவர் எங்களின் குரு நாதரிடமிருந்து அபூர்வமான அமானுஷ்ய சக்திகள் பற்றி அறிந்து கொண்டிருந்தார். பிறகு படுக்கையில் படுத்தபடியே, தனக்குத்தானே ஆகாயத்தைபு பார்த்து பேசிக்கொண்டிருந்தார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.