என்ன வேண்டும் கேள்!

172

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

06•02•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(221) மனிதனே புனிதன் —
என்ன வேண்டும் கேள்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பெரிய திண்ணை வைத்துக் கட்டப்பட்ட வீடு. அங்குள்ள கயிற்றுக் கட்டிலில் தவத்திரு. வேணுகோபால சுவாமி அவர்கள் உட்கார்ந்து கொண்டு, வழக்கப்படி எந்த வேலை செய்தாலும் சூரியனை எண்ணி ஆத்மசுத்தி செய்து விட்டு செய்தால் காரியம் ஜெயமாகும் என்றும் விவசாயப் பயிர்கள் செழித்து வளரும் என்று அங்கு வந்திருந்த பக்தர்களிடம் கூறினார். தவத்திரு. வேணுகோபால சுவாமி அவர்கள் நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமியை அழைத்து, ” இந்த வீட்டினுள் ஏதோ ஒன்று நடைபெறுகிறது. நான் சில பக்தர்களைச் சந்தித்து விட்டு வருகிறேன். நீங்கள் இவர்களுடன் பேசிக் கொண்டிருங்கள் “என்று கூறிவிட்டு, வீட்டின் வெளியே மெல்ல ஜெபத்துடன் வந்தார்., அவரை அழைத்துச் செல்ல நிறைய அன்பர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் ஞானகுரு சென்ற பிறகு நமது சுவாமியை வீட்டின் உரிமையாளர் தனது பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார்.. பூஜை அறையில் பெரிய திண்டுக்கல் இரும்புப் பெட்டியும், அதனைசச் சுற்றிலும் அநேக சுவாமி படங்கள், சுவற்றில் ஆணியடித்து மாட்டப்பட்டு இருந்தன.

நீளமான நாற்காலி மீது வெள்ளிங்கிரி மலை விபூதிப் பிரசாதம் வைக்கப்பட்டிருந்தது. பூஜை அறையின் முன்பு தரையில் அமர்ந்து கொண்டார்கள். விவசாயம் செய்து வரும் வீட்டின் உரிமையாளர் தங்களுக்கு நேரிடும் அனுபவங்களை மனம்விட்டு ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்களிடம் கூறினார். “அவ்வூரில் நெசவுத் தொழில் அதிகமாக உள்ளது. நாங்கள் விவசாயத் தொழில் செய்து வருகின்றோம். எங்கள் மூதாதையர்கள் முதல் எங்கள் குடும்பம் வரை அதிகமாக பக்தி செலுத்தி வந்த பரம்பரை. நமது ஸ்ரீ வேணுகோபால சுவாமி அவர்கள் இந்த ஊருக்கு என்று வந்தாரோ அன்று முதல் இந்த கிராமத்தில் தியானம் என்ற பேச்சு வந்துள்ளது. இப்போது நாங்களும் அவர் கூறியபடியே வாழ்ந்து வருகிறோம்.”

” ஸ்ரீ வேணுகோபால சுவாமி அவர்கள் இங்கு வருவதற்கு முன்பிருந்தே, எங்கள் குடும்பத்தில் அமானுஷ்ய சக்திகள் செயலபடத் துவங்கி விட்டது. எங்களது விவசாய பூமியில் தான் ஆரம்பமானது. அங்குள்ள தோட்டத்து வீட்டில் நாங்கள் தங்கியிருந்த போது அங்கு செலவுக்கென வைத்திருந்த பணம் காணாமல் போனது. அங்கு நானும் எனது மனைவியும் தவிர வேறு யாரும் இல்லை. எங்களை அறியாமல் பணம் போவதற்கு வேறு எந்த முகாந்திரமும் கிடையாது. இப்படி இரண்டு மூன்று தடவைகள் நடை பெற்றதால், அங்கிருந்து நாங்கள் ஊருக்குள் இருந்த இந்த வீட்டிற்குக் குடி வந்து விட்டோம்” எனத் தொடர்ந்து தகவல்கள் தந்து கொண்டிருந்தார்.”

” கிராமத்து வீட்டிற்கு வந்த பிறகு தினமும் இங்கேயிருந்தே விவசாயப் பணிகளைச் செய்து வந்தோம். விவசாய அறுவடை முடிந்த பிறகு மொத்தப் பணத்தையும் திண்டுக்கல் இரும்புப் பெட்டியில் வைத்துப் பத்திரப்படுத்தி விட்டோம். ஒரு மாதகாலத்திற்குப் பிறகு நாங்கள் முக்கியக் குடும்ப செலவு நிமித்தமாகப் பெட்டியைத் திறந்து பார்த்தால் குறிப்பிட்ட அளவு பணம் காணாமல் போயிருந்தது. எங்களுக்கு ஒன்றும் புரியாத நிலையில் மனதில் அச்சம் ஏற்பட்டது. இது பற்றி ஸ்ரீ வேணுகோபால சுவாமி அவர்களைச் சந்தித்து விளக்கம் கேட்டோம். அவரும் எங்கள் வீட்டிற்கு வந்து தியானம் செய்து ஆசீர்வாதம் தந்தார். இங்கு கூட்டு தியானத்தில் சில காட்சிகள் கிடைத்தன. அதன்படி எங்கள் முன்னோர்கள் ஆவிகள் வந்து பணத்தை எடுத்துக் கொண்டு போவதாகச் கூறுகிறார்கள். எங்களுக்கு மனது மிகவும் வருத்தம் உற்றது.”

 

“ஆனால் அன்று எல்லோருடைய முன்பாக வெள்ளிங்கிரி விபூதிமலைப் பிரசாதம் வந்து பூஜை அறையில் தானாக வந்து விட எல்லோருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. அன்றிலிருந்து ஸ்ரீ வேணுகோபால சுவாமியைத் தவிர யாரும் எங்கள் வீட்டிற்கு வருவதில்லை. ஏதோ ஆவிகள் பிடித்து இருக்கும் வீடு என்று எங்களை ஏளனம் செய்கிறார்கள்.
மற்றோரு முறை ஞானகுரு அவர்கள் வந்த போது அவருக்கு திருப்பதி லட்டு கொண்டு வந்து அமானுஷ்யங்கள் கொடுக்க அவரும் பெற்றுக் கொண்டார். எப்போது இந்த ஊருக்குள் ஞானகுரு வந்தாலும் எங்கள் இல்லத்தில் தான் தங்குவார். இன்று ஊருக்குள் கூட்டு தியானம் நடை பெறுகிறது. ஆனால் எங்களை யாரும் கூப்பிடவில்லை. இன்று இரவு உங்களுக்குப் பிரசாதமாக ஏதாவது கேட்டால் தெய்வங்கள் கொடுப்பது உங்களுக்குத் தெரியும்” என்று கூறிவிட்டுச் சொம்பு ஒன்றை நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்களிடம் தந்து பூஜை அறையில் வைக்கச் சொல்லவும் சுவாமி உள்ளே சென்றார். பாத்திரத்தை வைத்து தனது குருநாதர் ஸ்ரீ ஈஸ்வரரை எண்ணி ஜெபம் செய்து விட்டு வெளியே வந்தார். பிறகு ஊருக்குள் கூட்டு தியானம் செய்யும் இடம் செல்ல வேண்டும் என்று நமது சுவாமி கேட்டுக் கொண்டதும் அவர் அங்கே அழைத்துப் போனார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button