ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
05•02•2017,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(220) மனிதனே புனிதன் —
பயண அனுபவங்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பொள்ளாச்சி தியானக்குழுவினர் தியானம் செய்வதற்கு முன்பு ஆன்மிகம் பாடலை ஒருவர் வசனநடையில் பாட, அதனை அப்படியே எல்லோரும் வசனநடையில் திருப்பிச் சொல்வார்கள். பிறகு தவயோகினி திருமதி. சுந்தரம்மாள் அவர்கள் தியானம் பற்றிய புத்தகத்தில் இருந்து ஒரு பாடம் படிப்பார் எல்லோரும் அமைதியாகக் கண்களை மூடிக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அப்படியே தியானத்திலும் இருப்பார்கள். அன்று தியானம் முடிந்த பிறகு பன், முருக்கு பலகாரங்களைப் பிரமாதமாக எல்லோருக்கும் தருவார்கள். சில சமயங்களில் கல்கண்டு மற்றும் இனிப்புப் பதார்த்தங்கள் வரும். அன்று ஞானகுரு தவத்திரு. வேணுகோபால சுவாமி ஆன்மிக சுற்றுப்பயணம் பற்றிய செய்தி தலைமையகத்தில் இருந்து வந்திருந்ததை படித்துக் காட்டினார்கள். அதில் அன்னூர், புன்செய்புளியம்பட்டி, சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் தியானக் கூட்டம் நடப்பதைப் பற்றிய குறிப்புக்கள், தேதி, நேரம் போடப் பட்டிருந்தது. நமது ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்கள் அதில் கலந்து கொள்ள விருப்பப்பட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
அன்னூரில் கூட்டம் நிறைவு பெற்ற சமயம் அங்கு அன்னூர் சினிமா தியேட்டர் உரிமையாளர் ரெட்டியாரைச் சந்தித்தார். அவர் தவத்திரு. வேணுகோபால சுவாமி மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். பொள்ளாச்சி சுவாமி நாகராஜ் பற்றி ஞானகுரு அவர்கள் கூறியிருந்ததால் அன்புடன் உபசரிப்பு பலமாக இருந்தது. மறுநாள் புன்செய் புளியம்பட்டியில் தியாகி திரு.சென்னியப்பன் நட்பு கிடைக்கப் பெற்றது. அவர் தீவிர மகாத்மா காந்தி பக்தர். விடுமுறை தினமாதலால் பள்ளிக்கூடத்தில் தியானக் கூட்டம் நடைபெற்றது. அங்கு ஞானகுரு அவர்கள் ஆன்மிக அன்பர்களுக்குப் புதிய செய்தியைக் கூறினார். கருங்குஷ்ட்டம் வந்து உடலில் மிகுந்த பாதிப்பு அடைந்த ஒருவர் தியானம் செய்து குணமடைந்த விபரத்தை எடுத்துக் கூறினார்.
சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமத்தில், தியான அன்பர்கள் மாலை நேரத்தில் தினமும் கூட்டுப் பிரார்த்தனை செய்வது வழக்கம். அவ்வூரில் குஷ்டரோகத்தால் பீடிக்கப்பட்ட ஒருவரை தினமும் பிரார்த்தனை நேரத்திற்கு அழைத்துக் தங்களுடன் அமரச் செய்து தியானம் செய்துள்ளார்கள். நோயாளியும் ஜெபத்தில் இருப்பது எப்படி? என்பதைப்பற்றி அவருக்கு அன்புடன் எடுத்துக் கூறியதோடு, “குணம் பெற்று விடுவீர்கள” என்ற தைரியத்தையும் கொடுத்து இருக்கிறார்கள்.
தியான நிறைவில் கற்பூரம் கொழுத்தி அதனைக் கும்பிட்டு நோயினால் பாதிக்கப்பட்டவர் முகத்தில் காட்டி வந்துள்ளார்கள். படிப்படியாக நோயின் தாக்கம் குறைந்து பூரண நலம் பெற்றிருக்கிறார். அனைவரும் அன்புடன் தவத்திரு. வேணுகோபால சுவாமிக்கு நன்றி கூறினார்கள். அன்றே புறப்பட்டு சத்தியமங்கலம் சென்று அன்றைய மாலைப் பொழுதில் ஒரு விவசாயக் குடும்பத்தில், அவர்கள் வீட்டில் தங்கிக் கொண்டனர். அந்த வீட்டில் ஓர் அமானுஷ்ய சக்தி குடியிருந்தது.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.