ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
02•02•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(217) மனிதனே புனிதன் —
நேர்மையுடன் திருந்து நீ!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுப்பிரமணியனுக்குள் இருந்து மாந்திரீகன் மந்திரங்கள் ஜெபித்தபடி இருக்க, அவன் சொல்லியபடி நாயனாவும், கிராம பூஜாரியும் யாக பூஜைகளைச் செய்தனர். ஒருமணிநேரம் பூஜை செய்தபிறகு, “இனி எல்லாம் நிறைவடைந்தது. எனது ஆன்மா நிரந்தரத் துயிலில் இருக்கப் போகிறது! என்னால் இனி யாருக்கும் எவ்வித இடையூறுகளும் இல்லை. எனக்கும் யாராலும் துன்பமில்லை.இந்த விடுதலை நிலைக்கட்டும்” என்றபடி கண்ணீர் சிந்தினான். பிறகு அவன் கூறியபடி ஒரு பீங்கான் குடுவையை நாயனா திறந்து முன்னால் வைத்தார். அப்போது கிராம பூஜாரி, “எனக்கு நல்ல வாக்குத் தாருங்கள் ” என்றபடி நெடுஞ்சான் கிடையாகத் தரையில் வீழ்ந்தார். கையை உயர்த்தி ஆசி கூறியதும் எந்த விதச்சலனமும் இல்லை.அந்த அமைதி இருவருக்கும் அச்சத்தைத் தந்தது.
பிறகு சுப்பிரமணிக்குள் இருந்து மகா மாந்திரீகன் பேசினான். “நாயனா என்னிடம் ஏதோ கேட்கவே பிரியப்படுகிறீர்கள். அதற்கு விடையை நானே கூறிவிடுகிறேன்” என்றபடி மெளனமாக தியானத்தில் ஆழ்ந்து போனான். உடனே நாயனாவும் தியானத்தில் உட்கார்ந்து விட்டார். மேலும் மேலும் நிசப்தமும், தனிமையும், இன்பமும், பிறகு எதுவும் அவருக்கு நினைவில் இல்லை. நாயனா எத்தனை நேரம் அமர்ந்திருந்தாரோ அவருக்கே தெரியாது. கண்விழித்த போது வீடு நிறைய இருந்த செங்கற்கள் காணப்படவில்லை! பீங்கான் ஜாடியின் வாய்மூடிக் கட்டப்பட்டு இருக்க, பூஜாரி கண்கள் கலங்க அமர்ந்திருந்தார். “நாயனா வணக்கம் ” என்று கும்பிட்டபடி சுப்பிரமணியன் சிரித்தபடி அமர்ந்திருந்தான். அவன் உடல் மெலிந்து போய்ப் பரிதாபமாக இருந்தான். ” என்ன நடந்தது?” என்ற நாயனாவின் கேள்விக்கு சுப்பிரமணியனே பதிலும் கூறினான்.
” நாயனா மாந்திரீகர் நல்லது எனக்குச் செய்தது ஆச்சரியமாக இருக்கிறது. எனது உடலை விட்டு நீங்கிய உடனே ஜாடிக்குள் சலனம் உண்டானது. நான் பீங்கான் குடுவையின் வாயை மூடியினால் அமைத்துத் துணியினால் இறுக்க கட்டி விட்டேன். எனது இயல்பு நிலை எனக்குத் திரும்பி விட்டது. என்னுள் இருந்தபோது வைகைத் தாயின் மடியில் துயிலப் போகிறேன் என்றார். அவருள் ஒரு நேர்மை இருந்தது. இந்த ஜாடியினுள் அடங்கியபடி இருப்பதும் எனக்காகத்தான்! தவறுதலாக எனக்குத் தீங்கிழைத்து விட்டதாக வருத்தம் தெரிவித்துக் கொண்டார். இன்று அமாவாசை தினம். தன்னை யாருக்கும் தெரியாமல் பூமிக்குள் புதைத்து விடவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அத்துடன் நாயனா தியானம் உணர்வுடன் கூடி இருக்க வேண்டும் என்றார் ” என்றான். ஜாடி அடங்கிய கைப்பையை பூஜாரி நடுங்கியபடி எடுத்துக் கொண்டார். நாயனா பின்தொடர இருவரும் மெல்ல நடந்து செல்லத் துவங்கினர். கைப்பை கனக்கத்துவங்கியது!
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.