காரணம், காரியம், வினை, விதி.

238

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

28•01•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(212) மனிதனே புனிதன் —
காரணம், காரியம், வினை, விதி.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“ஒரு மனிதன் அறிவாளியானால் எதனைச் செய்தாலும் அந்தக் காரியத்தைப் பற்றி முற்றிலும் அறிந்து கொண்டு செய்ய வேண்டும். அதன் பெயர் விவேகம்! எது நியாயம்? என்று அறிந்து தெளிபவன் செய்யப்படும் காரியத்தில் அதன் காரணம் பற்றியும் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் சத்தியம், நியாயம், தர்மப்படி வாழ்க்கை நல்லபடியாக நடைபெறும். எந்தெந்த நேரத்தில் செய்ய வேண்டிய முறைப்படுத்தப்பட காரியங்களில் எல்லாம் நினைப்பது நன்றாக நடை பெறும். அதை விடுத்து அகால நேரங்களில் செய்யப்படும் காரியத்தின் மாற்றங்கள், மனிதனுக்குத் துன்பத்தையே பரிசாக அளிக்கிறது! “– ஈஸ்வர நீதி.

உறங்கும் நேரத்தில் பிரமச்சாரி சுப்பிரமணியம் நகர்வலம் வந்து விட்டு, அகால நேரத்தில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். கேரளா சுப்பிரமணியம் அவர்களுக்கு தீமை செய்ய’ எண்ணி, அவரது வீட்டு வாசலில், அவரது உறவினர் ஒருவரால் ஏவப்பட்ட தீமையாளனாகிய ஒரு மாந்திரீகன், ‘ஆசைகள் நிறைவேறாது இறந்துபட்ட, அதிபயங்கர மாந்திரீகனுடைய ஆவியை’, சுப்பிரமணியம் மீது ஏவிக்கொண்டிருந்தான். அதுவும் சுப்பிரமணி என்ற பெயருடையவர் வரவுக்காக வாசலில் அது காத்திருந்தது.

ஒரு மனிதனுடைய வாழ்வில் பெருமைப்படத்தக்க விஷயம் ஒன்று காத்திருக்கிறது. அது என்ன வென்றால் உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருந்தலே!
அது இறையருள் மீது ஜெபிக்கச் செய்ய உதவும் ஜெபம் மட்டுமே! இறையருளால் அதிலிருந்து தான் சகல செபாக்கியங்களும், சகலவிதமான நற்பயன்களும் உண்டாகின்றது என்பது அதி விஷேசமான உண்மையுமாகும். இதனை விடுத்து மனிதன் எந்தவகையில் சென்றாலும், அவைகள் அனைத்தும் பயனுடையது அல்லது நிலையானது என உறுதியாகக் கூறிவிட முடியாது. அத்தனையும் முடிவில் மாயமாகி மறைந்தே விடுகிறது

தைரியமானவன், ஆற்றல் மிக்கவன், காரியம் சாதிப்பதில் வல்லவன், ஆனால் இறையருள் ஜெபம் என்ற பாதுகாப்பு அற்றவன், வாலிப பிரம்மச்சரி இதுதனை இருந்தும் நண்பர்களுக்கு ஏதாவது துன்பம் என்றால் கலங்கும் இரக்ககுணம் உடைய சுப்பிரமணி; தனது நண்பர் கேரளா சென்று இருப்பதால், வீடு பாதுகாப்புடன் இருக்கிறதா? என்ற சந்தேகம் மனதில் எழப் பார்த்து விட்டுப் போகலாமே என்ற எண்ணமுடன் கேரளா சுப்பிரமணி வீட்டு வாசலில் வந்து நின்றான். நின்றவனுக்கு அதிர்ச்சி! ‘தனது உடலுக்கு என்ன வந்து விட்டது.விறு விறு என்ற குளிர்ச்சியுடன் கூடிய நடுக்கம் உண்டாகின்றதே! உடல் கனமானது போல் இருந்து வலி தலையைப் பிளக்கின்றதே! நிற்க முடியவில்லையே! தலையைச் சுற்றுகிறதே! மயக்கமாய் வருகிறதே!’ – இப்படிப் பல ஆச்சரியத்துடன் மெல்ல அமர்ந்து அந்த வீட்டு வாசலில் ஞாபகம் இன்றி அமர்ந்து கொண்டான்.

அதிகாலையில் அவனது தாயார் தனது மகன் வீடு வந்து சேரவில்லையே என்ற ஆதங்கத்துடன் தனது வீட்டின் வெளியே வந்தவருக்கு அதிர்ச்சி. சுப்பிரமணியத்தைக் கைத்தாங்கலாகப் பிடித்தபடி பக்கத்து வீட்டுப் பையன்கள் கொண்டுவந்து விட்டுப் போயினர். பொம்மை போல் ஆடாது அசையாது இருந்த மகன் முகத்தில் மட்டும் ஆக்ரோஷப் பார்வை இருந்தது.
ஆனால் எங்கோ வெறித்தபடி யாரோ கூறுவதை முக்கியமாகக் கவனிப்பது போல் எதையோ கேட்டுக் கொண்டிருந்தார். தனது மகன் நிலையைக் கண்டு தாயார் கதறி அழுதார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button