நடு யாமத்தில் விபரீதம்!

149

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

27•01•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(211) மனிதனே புனிதன் —
நடு யாமத்தில் விபரீதம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒருவன் குற்றம் செய்திட எண்ணி அதனைச் செயலுக்கும் கொண்டு வரும் பொழுது, செய்வது குற்றம் என்று தைரியமாக எடுத்துக் கூறுபவர்கள் இருந்தால் அவர்களுக்கு நன்றியைக் காணிக்கை ஆக்குதல் வேண்டும். உலகில் தனது வாழ்வில் உண்மையை, சத்தியத்தை நாடும் மனிதனுக்கு எப்போதும் இன்னல்கள் உண்டாக மாட்டாது. இறைவனின், இயற்கையின் சத்திய தர்மங்களாகிய பாதங்களை, பாதங்கள் எனப்படும் சுவாசத்தை, சுவாசத்தில் ஓடிக் கொண்டிருக்கின்ற உண்மைகளைப் புறக்கணிக்கின்றவர்கள், தெய்வீக ஞானத்தில் இருந்து விலகி அஞ்ஞானத்திற்குச் சென்று விடுகின்றார்கள். அஞ்ஞானத்தில் வாழ்பவர்கள் தங்களைத் தாங்களே மோசம் செய்து கொள்வார்கள். தெய்வீகத் தன்மைகளை மறந்து தங்களையே கேடுறுத்தித் தீய சக்திகளின் வசமாகிப் பின் அழிவுப் பாதையில் சென்று விடுகின்றார்கள். பிறகு அவர்களுக்கு இயற்கை மீட்சியை வழங்குவதில்லை.

மனிதர்கள் எப்போதும் தங்களது லாபத்தைக் கருத்தில் கொண்டுதான் உண்மைக்கு மாறாகத் தனது இஷ்டம் போல் வாழ்கின்றார்கள். கடமைகளைச் செய்வதாகக் காட்டிக் கொள்கின்றார்கள். கோபகுணங்களைப் பிறர்மீது ஏவுகின்றார்கள். மற்றவர்கள் வாழ்வின் உரிமையை அனுபவிக்க விடாமல் கேடுறுத்துகின்றார்கள். இப்படி நடந்து கொள்பவர்கள் அது அவர்களது உரிமையாக எண்ணுகின்றார்கள். இவர்கள் மீது நாம் கோபம் கொள்வதற்கு நமக்கு எந்த உரிமையையும் பிரபஞ்ச இயற்கை சக்தி நமக்கு வழங்கியிருக்க வில்லை. அவர்கள் மீது கோபம் கொள்ளாமல், பொறுமையுடன் அவர்கள் செய்கின்ற குற்றங்கள் அனைத்தும், நமக்கு வேண்டுமானால் பிழையாகத் தென்படலாம்! அப்படியே இருந்தாலும் நாம் கோபம் கொள்ளாமல், பொறுமையாகக் குற்றம் புரிகின்றவனின் பிழைகளைச் சுட்டிக்காட்டி, அறிவின் பாதையில் சென்று அறிவுரைகளைகள் சொல்வதில் தான் மனிதனின் ஆற்றல் சக்தியாகிய தெய்வீகம் விழிப்படைந்து, உலகின் இயல்பாகிய உண்மைகளை நிலை நிறுத்தும். இதனை நிச்சயமாக உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும்.

சுப்பிரமணியன்கள் இருவரும் விடுமுறை அன்று குடும்பங்களுடன் திரைப்படம் பார்க்கத் திட்டமிட்டனர். விடுமுறை தினம் சுப்பிரமணி மனைவி குழந்தைகளுடன் அவசர நிமித்தம் வெளியூர் செல்லும் சூழல் வந்தது. பிரம்மச்சாரி சுப்பிரமணியம் மற்ற நண்பர்களுடன் பொழுதைப் போக்கிவிட்டு, நடக்கப்போகும் விபரீதத்தை அறியாதவராக, இரவு நடுஜாமத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button