தனக்குத்தானே துரோகம்!

216

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

24•01•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(208) மனிதனே புனிதன் —
தனக்குத்தானே துரோகம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உலகமும், உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும், அனைத்துப் பொருட்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தியே இறையருள் சக்தியினால் இணைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதனை மனிதன் உணர்வதில்லை. தனது இஷ்டம் போல் எண்ணத்திற்கு ஒப்ப வாழ்வதில்தான் இன்பம் என்று எண்ணுகிறான். இயற்கையின் கட்டமைப்பில் அதற்கு உட்பட்டே எல்லாம் இயங்குவது மாதிரியே தான் மனித இயக்கமும் திகழ வேண்டும். அதுதான் இயற்கையின் இயல்பும், வாழ்வும்.

ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?
1.மனிதன் தன்னை இந்த உலகத்தில் இருந்து வேறுபடுத்திக் கொள்வது, 2. உலகில் உள்ள அனைத்து உயிர்களுடனும் உள்ள தொடர்பை மறந்திருப்பது, 3. தனக்கு நேரிடும் இன்னல்களைக் கண்டு கலங்குவது, 4.மற்றவர்களைத் தூற்றுவது, 5. கோபத்தினால் மற்றவர்களுக்கும் தீமை விளைவிப்பது, 6.வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களினால் தனது மனதை வருத்திக் கொள்வது, 7.பொய் கலந்து தந்திரமாகப் பேசுவது, 8.கபடமான எண்ணங்களுடன் இருப்பது, 9. மற்றவர்களை மோசம் செய்வது, 10.குறிக்கோள் அற்ற வாழ்க்கை வாழ்வது, 11.உபயோகமற்ற செயல்கள் செய்வது, 12. எவ்விதப் பயனும் தராத சிந்தனைகளுடன் உலவுவது, 13.உலக இயல்பின் தெய்வீக தர்மத்தை மறப்பது, 14. மனித வாழ்வினுக்கு வழிகாட்டியாக விளங்கும் ஞானத்தைப் புறக்கணிப்பது, 15. ஆத்மாவைத் தூய்மையாக வைத்துப் பாதுகாக்காமல் இருப்பது.
இவைகளெல்லாம் மனிதன் தனக்குத்தானே செய்து கொள்ளக்கூடிய துரோகம் என்று ஆன்றோர் பெருமக்களால், சதாசர்வ காலமும் போதனைப்படுத்தப்பட்டது.

இருந்தாலும் மனிதர்கள் தங்களின்: எண்ணத்திற்கொப்பவே வாழ்ந்து, தங்களது சுபாவம் போன்றே நடந்தும் கொள்வார்கள்.

நமக்கு ஒரு துன்பம் வந்து விட்டால் உடனேயே அதனை (துன்பத்தை) எண்ணுவதை விட்டு விட வேண்டும். அந்த நினைப்பையே உதறித்தள்ளி விட்டு ஜெபம் செய்ய வேண்டும். அதனால் நமக்குத் துன்பங்களை வழங்கிய நினைவுகள் மெல்ல அகலக் காண்பீர்கள். பிறகு துன்பம் தந்த நிகழ்வுகளின் காரணம் புலப்படத் துவங்கும். அறிவின் செயல்பாட்டில் தீர்வுகளும் நிச்சயம் கிடைக்கப் பெறும்.

அப்படித்தான் திரு.கோவிந்து அண்ணா அவர்களுக்கும் கிடைத்தது. அந்தத் தீர்வு இனிமேல் பனங்காவிலேயே, குடும்பத்துடன் தங்கி விடுவது என்பதுதான். சுவாமி அவர்கள் அதனை வரவேற்றார். திரு.கோவிந்து அண்ணா அவர்கள் எடுத்த முடிவைத் திரு.A.P.M.சாமி குடும்பத்தினர் வரவேற்றார்கள். இனி யக்ஷனின் எண்ணம் ஈடேறி விட்டதால் திரு.கோவிந்து அண்ணா உயிர் தற்காலிகமாக தப்பிப் பிழைத்தது. ஆனால் இப்போது திரு.கோவிந்து அண்ணா உடலுக்குள் சென்று தங்கிக் கொண்டு யக்ஷன், சகல சுகங்களையும் அவன் அனுபவித்து வந்தான். திரு.கோவிந்து அண்ணா உடல் மெல்ல மெல்லத் தனது வலுவை இழக்கத் துவங்கியது. திருமதி.தேவானை ஓர் அழகு மிகுந்த ஆண் குழந்தை ஒன்றினுக்குத் தாயானாள். யக்ஷனின் வம்சம் உருவாகி விட்டது. திரு.கோவிந்து அண்ணா உடலின் சக்திகளை உறிஞ்சி விட்ட யக்ஷன் அதனை சக்கையாகப் பிழிந்து விட்டான். நடக்க யாராவது துணை வேண்டும் என்ற நிலையில் உள்ள மனிதனை மெதுவாக ஓரங்கட்டப் துவங்கி விட்டனர். திரு.கோவிந்து அண்ணா அவர்கள் தனக்குச் சிறுவயது முதல் ஆதரவு தந்து வளர்த்து ஆளாக்கிய குடும்பத்தினரை எண்ணி ஏங்கி அழுது கொண்டிருந்தார். ஒரு தடவை சென்று பார்த்து விட்டு வந்தால், மனது அமைதியடையும் என்று நினைந்து, தனது கருத்தை அவர்களிடம் வெளியிட்டார். யக்ஷனும் கேட்டு விட்டு, எல்லோரும் திரும்பி பனங்காவு வந்து விட வேண்டும் என்று திருமதி.தேவானை மூலமாகத் செய்தியை வெளியிட்டான். இப்போது யக்ஷன் அவளது உடலுக்குள் இருந்து பேசினான். பாட்டி, குழந்தை, கணவன், மனைவி, அவள் உடலுக்குள் யக்ஷனுமாக ஐவரும் புறப்பட்டுச் சென்றனர். திரு.கோவிந்து நிலை கண்டு அதிர்ச்சி அடைந்த திரு.கிருஷ்ணன் குட்டி, தன்னால் ஏதும் செய்ய இயலாமல் கண்ணீருடன் விடை கொடுத்தார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button