தீமைகளை விலக்க!

172

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

19•01•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(203) மனிதனே புனிதன் —
தீமைகளை விலக்க!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மனநிம்மதி வேண்டும், நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற்று வாழ வேண்டும். செய்யும் தொழிலில் வருமானம் கிடைக்க வேண்டும், தீமைகள் விலக வேண்டும் அதற்கு எங்களுக்குத் தெய்வீக முறையில் வழிகாட்ட வேண்டும்.
பரிகாரம்:
கிணற்று நீரில் கலசம் அமைத்து,
மஞ்சள் பிள்ளையார், குங்குமப்பூ பிள்ளையார் பிடித்து வைத்து பச்சை அறுகு, வெள்ளை அறுகு வைத்து, 48 நாட்டளுக்கு உள்ள சுத்தியுடன், தீபம் ஏற்றி வழிபட வேண்டும். தினசரி குளிக்கும் நீரில் வில்வம், அறுகு, தர்பை இவை மூன்றையுமோ அல்லது எவை கிடைக்கின்றதோ அதனை இட்டுக் குளித்து வர வேண்டும். 48 நாட்களுக்குப் பிறகு பிள்ளையார் மற்றும் அறுகு முதலானவைகளைக் கலச நீரினுள் இட்டு வீட்டில் உள்ள பூச்செடிகள் அல்லது ஏதாவது நீர்நிலைகளில் ஊற்றி விட வேண்டும்.

இந்த வழிபாடு நடை பெறும் காலத்தில் அமாவாசை வரும் போது, அதற்கு முதல் நாள் அதிகாலை 05•45 மணிக்குக் கடைசித் தேய்பிறை வானில் தோன்றி மேலே வரும். அப்போது வாழை இலை அல்லது பித்தளைத் தாம்பாளத்தின் மீது வலது கால் பாதத்திற்கு பத்து வெற்றியையும், இடது கால் பாதத்திற்கு பதினோரு வெற்றிலையும் வைக்க வேண்டும். அதன்மீது நின்று தேய்பிறையைக் கண்ணால் பார்த்தபடி, “ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்” என்று 108 தடவை, நாவு உதடுகள் அசையாமல் ஜெபிக்க வேண்டும். பிறகு எலுமிச்சை பழம், ஏதாவது காசு ஒன்று இவைகள் இரண்டையும் தலையைத் சுற்றி
(இடது புறமாகச்சுற்றவும்) வெற்றிலை மீது வைத்து, வாழை இலையுடன் எடுத்து ஒரு காகிதப் பையினுள் வைத்து, முச்சந்தியில் அல்லது நாற்சந்தியில் ஓர் ஓரமாக வைத்து விட்டு வந்து விடவும். இப்பரிகாரம் சிறந்த பலன்களைத் தந்து விடும்.

(பரிகாரம் பற்றிய பாடங்கள் அனைத்தும் தவத்திரு. நாகராஜன் சுவாமி அவர்களிடம் ஓம் ஸ்ரீ ஈஸ்வரர் குருநாதர் குரு ஈஸ்வராலயத்தில் அருளியது. மேலும் விபரம் தேவைப்படுபவர்கள் குரு ஈஸ்வராலயம் சுவாமி அவர்களிடம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.)

உடல், மன ஆரோக்கியம் தருவதுடன், தீமை சக்திகளை விலக்கி விடும். வீட்டின் நிலவாயிற்படியின் மீது தீமை சக்தி தனது ஆதிக்கத்தைச் செலுத்த முயற்சிக்கும். எனவே வாயில் நிலப்படியை மிதிக்காமல் தாண்டிச் செல்வதுதான் உத்தமமான காரியமாக இருக்கும். இந்தப் பாடம் கணபதியின் அருள் பெற வைக்கும். இதனைப் பற்றிய உண்மைகளை அறிந்திடும் வாய்ப்புக் கிடைக்காதவர்கள், மூலம் நட்சத்திரத்தில் கணபதிக்குப் பால் அபிஷேகம் செய்து வைத்து, அப் பாலை அருந்தினால் தீமைகள் அகலும். ஓங்காரப் பொருளாகிய கணபதி அதனை சாதித்துக் காட்டுவார். கேது தோஷத்தை விலக்கி வெற்றி வாய்ப்பை நமக்கு நல்குவார். பூதகணத் தலைவர் கொடூரமான ஆவிகள், தீமை புரிய வரும் யக்ஷ சக்திகளிடம் இருந்து பாதுகாப்பை நல்குவார். இனித் திரு.கோவிந்து அண்ணா அவர்களுக்கும் யக்ஷனுக்கும் நடந்த திருமண நிகழ்ச்சியைக் காணலாம். வாருங்கள்!

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button