கோவிந்து யக்ஷன் திருமணம்!

208

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

17•01•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(201) மனிதனே புனிதன் —
கோவிந்து யக்ஷன் திருமணம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எங்களுக்கு யார் மீதும் கோபம் கிடையாது ஓம் ஸ்ரீ ஈஸ்வரா!
அம்மா, அப்பா, மாமனார், மாமியார், மனைவி, பெற்ற பிள்ளைகள், உடன் பிறந்த சகோதர சகோதரிகள், மாமன், மச்சான், சொந்த பந்தங்கள், நண்பர்கள், யார் மீதும் எங்களுக்குக் கோபம் கிடையாது. எங்களுக்கு மன்னிக்கும் மனம் வந்து விட்டது. நன்றி இறைவா! இனி நீண்ட ஆயுள், ஆரோக்யம் பெற்று, செல்வத்தை செழிப்புடன் வாழ்வாங்கு வாழ்வோம். நன்றி ஓம் ஸ்ரீ ஈஸ்வரா!

கேரளா கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த பனங்காவு என்ற இடத்தைச் சேர்ந்த விவசாயிகள், உபரி வருமானத் தேவைக்காகப் பெரிய கட்டை மாட்டு வண்டியைப் பலசரக்குக் கடையில் வியாபாரிகளுக்கு வாடகைக்கு ஓட்டிப் பிழைத்து வந்தனர். அதில் திரு.கிருஷ்ணன் குட்டி என்பவர் காதில் கடுக்கன்களும், நெற்றியில் சந்தனக் கீற்றுமாக, நல்ல சந்தன நிறத்துடன் சற்று தடித்த உடல்வாகுடன் இருப்பவர், மாட்டு வண்டியை வியாழக்கிழமை மாலையில் கடை முன்பாக நிறுத்தி விட்டு வந்தார். வந்தவர் திரு.கோவிந்து அண்ணா அவர்களுக்கு திருமண சேதியைக் கொண்டு வந்தார். “தாய் தந்தை அற்ற பெண் தெய்வானை. பாட்டியின் பராமரிப்பில் இருக்கிறார். சொந்தமாக வீடு உள்ளது. அவர்களால் முடிந்த அளவிற்கும் கல்யாண காரியம் செய்து தருவார்கள். முக்கியமாக கோவிந்து சம்மதம் மட்டுமே தேவை. நான் பெண் வீட்டாருக்கு உறவு முறை வேண்டும். கோவிந்துக்கும் யாருமில்லை. இந்தக் கல்யாணத்துக்குப் பிறகு அவர் நல்லா இருப்பார்” என்று திரு.கிருஷ்ணன் குட்டி, திரு. கோவிந்துவிடமும், திரு. A.P.M.சாமி அவர்களிடமும் கூறினார். எல்லோருடைய சம்மதத்தின் பேரிலும் கல்யாண ஒப்பந்தம் நடை பெற்றாலும், நமது சுவாமியின் மனதில் ஏதோ ஒன்று அதனை ஏற்காமல் செய்யத் தூண்டியது. அன்று மறுநாள் தனது குருநாதர் ஓம் ஸ்ரீ ஈஸ்வரரை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. அவர் கூறிய விஷயம் நமது நாகராஜ் சுவாமியை அதிகம் சிந்திக்கச் செய்து விட்டது.

” மகனே நாகராஜா! இதில் யக்ஷன் தொடர்பு இருக்கிறது. வினைச் செயல்கள் தான் நாளடைவில் விதி யாக மாறுகிறது. வினையின் போது விதி யாக மாறாமல் தடுக்கவே ஆத்மசுத்தி பற்றி உபதேசிக்கப்படுகிறது. இந்த விதியை வெளிப்படுத்திக் தடுப்பதைவிடப் பிரார்த்தனை செய்து வந்தால் தப்பிக்க வழி பிறக்கும். அத்துடன் நல்ல வினைகளை உருவாக்கவும் முயற்சிக்க வேண்டும்” எனவும் கூறிவிட்டுச் கேரளப்பகுதில் அவரின் வருகைக்காகக் காத்திருக்கும் ஞானியர்களைச் சந்திக்கப் புறப்பட்டுப் போனார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button