ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
காணும் பொங்கல் வாழ்த்துக்கள்!
16•01•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(200) மனிதனே புனிதன் —
காது எங்கே போச்சு?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கேரளா கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த பலசரக்குக் கடை வியாபாரிகள், வியாழக்கிழமை பொள்ளாச்சி சந்தைக்குக் கொள்முதல் செய்ய வருவார்கள். பெரிய மாட்டு வண்டிகளில் மூடைகள் ஏற்றிய பாரவண்டிகள், வரிசை வரிசையாக சலங்கை சப்தத்துடன் வருவது அழகாக இருக்கும். உண்மையில் கொல்லங்கோட்டில் தயாராகும் மாட்டு வண்டிகள் பிரசித்தமானவை. நமது சுவாமியின் வீட்டிலும், கொல்லங்கோடு அழகிய பெரிய மாட்டு வண்டி இருந்தது. கொல்லங்கோடு பனங்காவு பகுதியைச் சேர்ந்த மாட்டு வண்டிகள் பொள்ளாச்சி சந்தையில் பாரம்ஏற்றி, மீன் கரை ரோட்டின் இருபுறமும், திரு.A.P.M.சாமி அவர்கள் கடையின் முன்பாக நின்றிருந்தன. ‘கடிபுடி’ என்று பேசியபடி வண்டிக்காரர்கள் திரு.கோவிந்து அவர்களிடம் கேட்பார்கள். மிக்சர் பொட்டலம் ஒன்றும், சாயா(தேநீர்) ஒன்றும் கொடுத்து ஒரு ரூபாய் பெற்றுக் கொள்வார். வயிற்றுச் சின்னவன் தகறாறு செய்த போது, பார வண்டிக்காரர்கள் ‘சாயா’ சாப்பிடும் நேரம்.
ஆறடி உயரமும், நல்ல ஆகிருதியும், பெரிய வயிறும், சிவந்த நிறமும், பெரிய கண்களும் உடைய வயிற்றுச் சின்னவன், திரு. ஜப்பார் ராவுத்தர் மீது பாய்ந்து கட்டிப்பிடித்துக் குழந்தையைத் தூக்குவது போல் தனது பெரிய வயிற்றின் மீது வைத்துக் கொண்டார். இரு கரங்களும் திரு.ஜப்பார் பாய் இடுப்பைச் சுற்றி பலமாகப் பிடித்தபடி நெருக்க அவர் வலி தாளாது கத்திக் கதறினார். உடனே தனது வாயைத் திறந்து பெரும் பற்களால், கதறி அழுகின்ற திரு. ஜப்பார் ராவுத்தர் வலது காதைப் பற்றிக் கொண்டு கடிக்க ஆரம்பித்தார். பற்கள் பதியப் பதிய ரத்தம் காதில் இருந்து பெருக்கெடுத்து ஓடியது. ரத்தப் பெருக்கைப் பார்த்து தேநீர் அருந்தவந்த கூட்டம் சிதறி ஓடியது. திரு.ஜப்பார் ராவுத்தர் பாய் மயக்கமடைந்து விட்டார்.
கடித்து எடுக்கப்பட்ட காது வயிற்றுச் சின்னவன் வாயில் இருந்து ரத்தம் ஒழுகும் பற்களின் இடையே இருந்தது. கைகளை விரித்து அரக்கன் போல் நின்றிருந்தார். அவரின் காலடியில் திரு.ஜப்பார் ராவுத்தர் பாய் மயங்கிக் கிடந்தார். வாயில் இருந்து காதைத் “தூ ” எனத் துப்பினார். தரையில் விழுந்த காது துள்ளித் துடித்தபடி கிடந்தது. கடைக்கு வெளியே கிடக்கும் குப்பைகளை அள்ளிக் கொண்டு போய், பஞ்சாயத்து குப்பைக்கு கிடங்கில் கொட்டி விட்டு அமர்ந்து கொண்டிருந்த, திருச்சியைச் சேர்ந்த பித்தி கருப்பாயம்மா மடியில் பசியுடன் படுத்திருந்த நாய் வெள்ளையன் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது. காது தரையில் விழுந்து துடிப்பதைக் கண்டு ஓடி சென்று கவ்விக் கொண்டு தனது கொடூரப்பசியைச் சிறிது தணித்துக் கொண்டது. செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊர் ஒன்று திரண்டு கூடியது. திரு. ஜப்பார் பாய் அவசரமாக வேட்டைக்காரன் புதூர் மருத்துவ மனைக்குக் கொண்டு போகப்பட்டார். பிறகு குணமடைந்து ஊர் திரும்பினார். பைத்தியக்காரர்கள் செயல் என்றெண்ணி திரு.ஜப்பார் ராவுத்தர் குடும்பத்தினர், வயிற்றுச் சின்னவனை மன்னித்து விட்டனர். ஹஜரத் சான்ஷா ஒலியுல்லா தர்காவில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு தினமும் சிகிச்சை பெற்று வந்த வயிற்றுச் சின்னவன் நாளடைவில் குணம் பெற்றுக் குடும்பத்தினரால் பாதுகாக்கப் பட்டார். தனது இன்னுயிர் பிரியும் வரைக்கும் “நாகு சுவாமி” என்று அழைத்தபடி வந்து அன்புடன் பேசிவிட்டுச் சென்று கொண்டு இருப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்.
மன்னிக்கும் மனம் வேண்டும் மானிடர்க்கு!
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.