கோவிந்தா கோவிந்தா

234

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

போகிப்பண்டிகை வாழ்த்துக்கள்.

14•01•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(198) மனிதனே புனிதன் —
கோவிந்தா கோவிந்தா
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இரவு நேரம் அதுவும் அகால நேரத்தில் சைக்கிள் பிரயாணம் என்பது சற்று யோசிக்க வேண்டியது தான். காஜா மைதீன் சைக்கிளை ஓட்ட, முன்புறம் சுகமாக அமர்ந்தபடி இருந்த காளிமுத்துவுக்கு, உழைப்பின் களைப்பினால், கண்கள் சொருக மெல்ல மெல்லத் தூக்கம் ஆட்கொண்டது. குளிர்ந்த காற்று சுகமாக வீசியதும் நல்ல உறக்கம் உண்டானது. தூக்கத்தில் தனது குதிங்கால் முன்பக்கமாக சக்கரத்தில் சிக்கியது தனக்குப் புரிந்தபோது காலம் கடந்து விட்டது. குதிங்காலில் பெரிய காயமும், சக்கரத்தினுள் சிக்கியதால் வேகத் தடையும் ஏற்பட்டது. வலியால் காளிமுத்து கத்திக் கதறினான்.

நல்ல இறக்கத்தில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது சைக்கிள். அலறல் சப்தம் கேட்டு சைக்கிளை நிறுத்த முயன்ற காஜாமைதீன், தவறுதலாக முன் சக்கரத்துப் பிரேக்கைப் பிடித்து விட்டார். உடனே சைக்கிள் பின்புறத்தில் சக்கரம் மேலே உயர, திரு.சிங்கத்தேவரும் உயரே தூக்கி வீசப்பட்டு சைக்கிள் முன்புறமாகப் பாதையில் வந்து விழுந்தார். காலில் அவருக்குப் பலத்த அடியும், பொறுக்கமுடியாத வலியும் ஏற்பட்டது. காளிமுத்துவும், காஜாமைதீனும் தூக்கிவீசப்பட்டு இருவரும், தரையில் விழுந்து கிடந்த சைக்கிளின் மீது விழுந்து, சைக்கிளை இரண்டாக உடைத்து விட்டனர். பின்னர் உடைந்த சைக்கிளை ஆளுக்கு ஒன்றைத் தலையில் வைத்துக்கொண்டு, திரு.சிங்கத்தேவரையும் இடுப்பில் துண்டைச் சுற்றித் தேர்வடம் இழுப்பதைப் போன்று இருந்தபடி ஊர் வந்து சேர்ந்தனர்.

ஒருவாரம் வரையிலும் ஊருக்குள் தலையைக் காட்டாமல் ஓய்வாக இருந்தனர்.திரு.தேவர் அவர்கள் ஊசி போட்டுக்கொள்ள பயந்து ஏதோ பச்சிலை வைத்தியத்தில் நுழைந்து விட்டார். தான் கூறியது பலித்து விட்டதாக திருமதி.செவிட்டு முத்து அம்மாள் ஊர்முழுக்கச் சொல்லித் திரிந்தார். ஆட்டுக் கிடாவைப் பற்களினால் பற்றித் தூக்கி வீசி எறிந்த சிங்கம் இன்று வலுவிழந்து போனது. தனது மனைவி, குழந்தைகளின் அருமை, பெருமையை அவர்கள் நன்றாக கவனித்து, உபசரித்த போதுதான் தனது நிலைப்பாட்டை உணர்ந்து கொண்டார். கண்ணீர் பெருக்கினார். குழந்தைகளுக்கு சுபகாரியங்கள் நடைபெறும் வரை அவர்களின் அன்பு மழையில் நனைந்தார். பிறகு மிகவும் சந்தோஷமாக மரணத்தைத் தழுவிக் கொண்டார். கள்ளிச்செடி ஆத்தாவில் தனது ஆன்மதரிசனம் பெற்ற திருமதி முத்துஅம்மாள், தனது மகள் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். எல்லோரும் வெளியே சென்றிருந்த சமயம், மார்பு வலியும், மயக்கமும் ஏற்பட்டு விட்டது. உதவிக்கு யாரும் இல்லாத நேரம். பூட்டியிருந்த மகள் வீட்டின் வாயிற்படியில் தலை வைத்துப் படுத்தபடி அவரும் இறந்து போனார். குடும்பத்தில் ஆணும், பெண்ணும், குழந்தைகளும், பெரியவர்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்தால் அந்த வாழும் வாழ்க்கையன்றோ சிறந்தது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button