சிங்கத்தின் உயிர் மீண்டது!

135

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

10•01•2017,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(194) மனிதனே புனிதன் —
சிங்கத்தின் உயிர் மீண்டது!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆன்மாவின் ஆற்றல் சக்தியைப் பற்றி முழுமையாக அறிய வேண்டுமானால், அது மகானுபாவர்களுக்கே இயலும். அது இறைவனின் ஆசீர்வாதமாகும். பெண்மையின் சக்திக்கு மேலும் உயர்வு ஏற்பட தனது சக்தியைத் தனது கணவனோ, சகோதரனோ அல்லது விருப்பட்ட யாருக்கு வேண்டுமானாலும் தந்து தனது ஆன்ம சக்தியை மேலும் பெருக்கிக் கொள்ள இயலும். தனது கணவனுடன் கருத்து வேறுபாடு கொண்டு வாழும் பெண்களின் ஆன்மசக்தி கணவனது சக்திக்குக் கிடைக்காது. அப்படித்தான் திருமதி.முத்து அம்மாள் சக்தியும் வீணானது.

எப்படியோ திரு.சிங்கத்தேவர் கூழக்கணக்கப்பிள்ளையின் தயவால் உயிர் திருப்பினாலும் , அடிக்கடி குடும்பத்தில் நடைபெறும் சச்சரவால், அவர் மேலும் சாபத்திற்கே ஆளாக நேர்ந்தது. உள்ளூர் ஐயப்ப பக்தர்கள் அவரைத் சபரிமலைக்கு விரதம் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்கள். காரணம் எப்படியாவது கணவன், மனைவி இருவரும் ஒற்றுமையாக, தெய்வீக சூழலில் வாழ்வார்கள் என்கிற நம்பிக்கைதான். அதுவும் அவர்களுக்குள் சமாதானத்தை ஏற்படுத்தவில்லை. மாலை அணிந்தவர் அதிகாலை நேரத்தில் குளித்து விட்டு விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இவர் அந்த நேரத்தில் வீட்டுப் பெண்கள் பனிகொட்டும் அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு, ஐயப்பசாமிக்கு சமையல் செய்து தரவேண்டும் என்று வற்புறுத்தியது, உடல்நிலை சரியில்லாமல் அந்த சமயத்தில் இருந்த அவரது மனைவியால் சகித்துக் கொள்ள இயலாமல் ஆகிவிட்டார். காது கேட்காத அவர்கள் பாடு சொல்லும் தரமன்று. கடைகளில் சாப்பிட பணவாய்ப்புக் குறைவானதால், மற்றும் எல்லா ஐயப்பசாமிகளும் அவருக்கு உதவிகள் செய்து வந்ததால் அவரைச் சமாளிக்க முடிந்தது. ஆனால்ப கோபம் வந்தால் காலைத் தூக்கி உதைப்பேன் என்று கூறும் அவரது வார்த்தை நெருப்பு அவருக்கே வினையாக முடிந்தது. குறிப்பாக காலில் வந்தே தான் வினை விடிந்தது.

அவருக்கு பாம்பு கடித்ததற்கு மருத்துவம் விடிய விடிய நடை பெற்றது. கூழைக் கணக்கப் பிள்ளை அவர்கள் ஒரு முஸ்லிம். இரக்க குணமே வடிவெடுத்து வந்தது போன்ற தெய்வீகத் தோற்றம். விஷக்கடி மருத்துவரான அவர் எப்படிப்பட்ட விஷமானாலும் நீக்கும் வல்லமையை இறைவன் அவருக்குக் கொடையாக வழங்கி இருந்ததால், கிராமமக்கள் நன்றியுடன் நடந்து கொண்டார்கள்.

திரு.சிங்கத்தேவர் தூங்கி விட்டால் மாண்டு போவார் என மருத்துவரது கணிப்பு இருந்ததால், அனைவரும் அவருடனே இருந்தனர். குறிப்பிட்ட நேரம் தலையில் சூட்டை உருவாக்கி விட்டுத் தலையில் இருந்த அக்கினிச் சட்டியை நீக்கி விட்டனர். அதிகாலையில் அவரது உயிர் உடலில் மீண்டது. பக்குவமாக நண்பர்கள் தயவால கவனிக்கப்பட்டுக் குணமடைந்தார். மட்டுமல்லாது ஐயப்பன் விரதமும் இருந்தார். கிராமத்து ஐயப்ப பக்தர்களை மண்டல பூஜைக்கு வழியனுப்ப, பொள்ளாச்சி உள்ள ஐயப்பன் கோயிலுக்கு வந்தார் திரு.சிங்கத்தேவர். வந்து விட்டுக் கிராமம் திரும்பும் போது, விபத்துக்கும் உள்ளானார்.
நாம் எதனை எண்ணுகின்றோமோ அதுவே வாழ்க்கையுமாகும்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button