கள்ளிச்செடி ஆத்தா கேள்!

185

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

07•01•2017,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(191) மனிதனே புனிதன் —
கள்ளிச்செடி ஆத்தா கேள்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மனிதர்கள் வாழ்வில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்வதுண்டு. அதனால் நன்மையோ, தீமையோ விளைவதுண்டு. சிலருக்குத் தீமைகள் ஏற்பட்டாலும் அதனைப் பெருட்படுத்தாது, வைராக்கிய சிந்தனையைக் கொண்டு தங்களை வளர்த்துக் கொள்வார்கள். சிலருக்கு இதில் அமானுஷ்ய சக்திகள் உதவிக்கு வருவதுமுண்டு. அப்படித்தான் திருமதி.முத்து அம்மாள் சக்தி பெற்ற நிகழ்ச்சியும் உருவாகியது. அவரை வழிநடத்த வந்த அமானுஷ்யத்தை நமது சுவாமி நாகராஜ் அவர்களுக்கு திருமதி.முத்து அம்மாள் நேரில் காட்டியும் இருக்கின்றார்கள்.

மயக்கம் நீங்கி எழுந்த திருமதி.முத்து அம்மாள் காதுகளில் எந்தவித சப்தங்களும் கேட்கவில்லை. தன்னைச் சுற்றிலும் குழந்தைகள் அனைவரும் அதிர்ச்சியில் அழுதுகொண்டே ஏதோ பேசுவதும், அவர்கள் வாய் அசைவது மட்டுமே பார்க்க முடிந்தது. அதன் பிறகு தனது பேச்சைக் குறைத்துக்கொண்டு, தெய்வீகப் பிரார்த்தனையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். காது கேட்கா விட்டாலும் அவரின் செயல்பாடுகளில் எந்தவித அசௌகரியங்களோ ஏற்படவில்லை.
திரு.சிங்கத்தேவர் அவர்கள் தனது மனைவிக்கு நேர்ந்த நிலைகண்டு சற்று பயந்துதான் போய்விட்டார்.

ஒழுங்காக நடந்து கொண்டு தனது குடும்பத்திற்காக உழைத்துச் சம்பாதிக்க எண்ணம் கொண்டார். செம்படவர்களுடன் சேர்ந்து மீன் பிடித்து வருவார். அதனை திருமதி.முத்துஅம்மாள் நகர்ப்புறத்திற்குச் சென்று விற்று வருவார். எப்படியோ சைகைகளால் வியாபாரம் நடை பெற்று வந்தது. திருமதி.முத்து அம்மாள் வீட்டின் வெளிப்புறம் உள்ள முள்வேலியில் ஒரு கள்ளிச்செடி இருந்தது. அச்செடியின் மீது அமானுஷ்ய உருவம் ஒன்று நிற்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது.

அது பார்க்கத் திருமதி.முத்துஅம்மாள் அவர்களின் தாயைப் போன்று இருந்திருக்கிறது. தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதன் தோற்றம் தென்படும் போது,
அதன் அருகே சென்று அமர்ந்து, தனது மனதில் உள்ள செய்திகளைத் தினமும் அதனிடம் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டார். இது குடும்பத்தினருக்கு வியப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்த கள்ளிச் செடியின் மீது தனது தெய்வீகத்தாய் இருப்பதாக எண்ணிப் பேசுவதும், அது கேட்டுக் கொள்வது மான நிகழ்ச்சி அனுதினமும் நடந்தது. மனதில் உள்ள பாரம் முதலில் இறங்குவதாக உணர்ந்த அவர் பிறகு, எந்த விஷயத்திற்கும் ஆலோசனை கேட்பதும், கேட்ட உடனே விடை கிடைப்பதாகவும், அதன்படியே நடந்து காரிய வெற்றிகள் அடைவதாகவும் 7நம்பிய திருமதி.முத்துஅம்மாள் அவர்களுக்கு, எல்லாம் நடைபெற்று நம்பிக்கையை அதிகமாக்கியது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button