ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
05•01•2017,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(189) மனிதனே புனிதன் —
அமானுஷ்ய அறிவுரை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கும் நாளை ஆகாரம், படையல்கள் நமது பிள்ளைகள் படைப்பார்களா? என்ற வினா எழுகிறது. அண்ட பகிரண்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் சகல ஜீவன்களுக்கும் ” பசி ” உண்டு, அதற்குத் தகுந்தாற்போல் ஆகார நியதிகளும் உண்டு. உடலைச் துறந்த ஆத்மாக்களுக்கும் பசி என்ற உணர்வு உண்டு. பூமிக்கு வந்த தெய்வீக சக்திகள் இறைவனது அருளாசியைத் தாங்கியபடி வந்தார்கள். வேதங்கள், இதிகாசங்கள், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகள், பிரார்த்தனைகள், வழிபாடுகள் , ஜெனன மரண ரகசியங்கள், இறந்தபின் மனிதனின் நிலை?, பசியும் பசிக்கு உணவும், தெய்வீக ஆராதனை, படையல்கள் எல்லாம் அந்தந்த காலகட்டத்திற்கு ஒப்ப ஆசான்கள் என்று தங்களை வெளிக்காட்டிக் கொண்டவர்களால் அனைத்தும் வழங்கப்பட்டது. அறிவின் பசிக்கும் நற்செய்திகளாம் உணவும் தரப்பட்டுப் பெறப்பட்டது. எத்தனை உண்மைகளை அறிந்து கொண்டிருந்தாலும், சமயத்தில் தமது மடமையை வெளிப்படுத்திக் கொள்கிறான் மனிதன்! காரணம் அதுதான் அவன் வாழ்க்கையின் உண்மைநிலை! அவன் கற்றுக்கொண்ட மனோநிலையும் அவ்வளவுதான்.”
“உப்பு பொம்மை சமுத்திரத்தின் ஆழத்தை அறியக் கடலுக்குள் செல்கிறது” என்ற உபநிஷத் வாக்கியத்தை அறிந்தும், அறியாதவர்கள் போல் வாழ்பவர்கள். சொத்துக் கிடைக்கும் என்பதற்காகத் பெறாதவர்களைக் கூடப் பெற்றவர்களாக ஏற்றுக் கொண்டு, இறந்தபின் மொட்டை போட்டுக் கொள்ளியிட்டுக் கடைசியில் சொத்துக் கிடைக்க வில்லை என்பதற்காக பித்ரு வழிபாட்டைக்கூடத் தூக்கி எறிந்து விட்டவர்கள் பேராசைப் பிடிக்குள் வாழ்பவர்களே! எப்படியாவது தனக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக தெய்வீக இறைவழிபாட்டைத் துறந்து , மாந்திரீகப் பிடிக்குள் சென்று மீளவழி அற்றவர்கள் என்பதாகப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.”
“இறந்து பட்ட ஆத்மாக்களின் பசிப்பிணி போக்கும் நைவேத்தியம் தந்தால், நமது தேவைகளை நிறைவேற்றும் சக்தி வாய்ந்தவர்களாகிய அவர்களுக்கும்( பித்ருக்கள்), இறைவனுக்கும் உணவு படைத்துப் பிரார்த்தனை செய்து வருவதால் அநேக நன்மைகள் நடைபெறும். பணம், காசு, சொத்துக்கள் என்ன? சகலமும் சித்தியாகும். இறைசக்தியை வழிபட்டு வாருங்கள். செல்வந்தர்களாக மாற்றும் நேர் வழி அதுவே. செல்வம் என்பது பொருட்செல்வம் மட்டுமே உங்கள் கவனத்தில் வருகிறது! அறிவுச் செல்வம் வேண்டாமா? பித்ருக்கள், குல தெய்வம், இவையெல்லாம் ஆகாரத்தினால் செயல்படுவார்கள். கொடுத்த பணம் உங்களுக்குக் கிடைக்க பணம் பெற்றவனது குலதெய்வத்தையும் சாப்பிட அழையுங்கள். அதனால் பணம் திரும்பக் கிடைக்கும். இனி சிவசண்முகம் உனது பாதையில் மற்றவர்களுக்காக உனது சக்தியை இழந்து விடாதே. நீ பரிபக்குவமாக வளர வேண்டியவர்.உன்னை நம்பு. உன்னுள் உறையும் இறைவனை நம்பு. ஆசீர்வாதம்.” வந்தவர்கள் வாழ்வின் நல்லறம் பகர்ந்தார்கள். அறிவை ஏற்காத உறவின்முறை மனம் தகர்ந்து போனார்கள்.
ஞானகுரு அவர்கள் மீண்டும் பொள்ளாச்சி வந்தபோது திரு.V.சிவசண்முகம் அவர்களுக்கு, “இம்மாதிரியான காரியங்களை மறந்தும் செய்து விடாதீர்கள்” எனக் கூறினார். அவருள் ஆன்ம விழிப்பு ஏற்பட்டு விட்டது போல் உண்மையை உணர்ந்தார். அன்றிலிருந்து இன்று வரை சத்திய தர்மப் பாதங்களாகிய சுவாசகலைகளில் ஜெபதப பிரார்த்தனை வழிகளைக் கைக்கொண்டு குரு கடாட்சத்தையும் பெற்று உயர்வு பெற்றார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.