ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
04•01•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(188) மனிதனே புனிதன் —
சக்தி பெறும் சக்திகள்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திரு.V.சிவசண்முகம் அவர்கள் தமது பதினாறாவது வயதில் அமானுஷ்ய சக்திகளுடன் தொடர்பு கொண்டறியும் ஆற்றலைத் தமது தியானத்தில் பெற்றிருந்தார். அதனைக் கேள்விப்பட்டு மகாலிங்கபுரப்பாட்டி தவயோகினி திருமதி.M.சந்தரம்மாள் அவரைச் சோதித்து அறிய எண்ணினார்கள். அதன்படி முன்னோர் திதிப் படையல் நடைபெறும் வீட்டிற்கு திரு.V.சிவசண்முகம் அவர்கள் வரவழைக்கப் பட்டார். தவயோகினி மறக்காமல் அங்கு சென்று, என்ன நடைபெறுகிறது? என்பதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்.
இறந்து போயிருக்கும் முன்னோர்களுக்குப் பிடிதுதமான உணவு வகைகள், பலகாரங்கள், கனிகள் வஸ்த்திரங்கள் எனப் படைக்கப் பட்டது. திருவிளக்குகள் ஏற்றி வைத்து முறையாக அவர்கள் வழக்கப்படி பூஜைகள் நடை பெற்றது. பிறகு “பித்ருக்களைச் சாப்பிட அழைத்தார்கள்”. பிறகு சற்று தூரத்தில் அமர்ந்து அனைவரும் தியானத்தில் ஆழ்ந்து விட்டனர். ஆசையுடன் இறந்து விட்ட குடும்பத்து ஆத்மாக்கள் புலனாகத் துவங்கி விட்டனர். அவர்களுடன் திரு.V.சிவசண்முகம் அவர்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டே இருந்தார். ” உங்களுக்குப் படையலில் திருப்தியா?” அமானுஷ்யங்கள்,” தங்களுக்குத் திருப்தி இல்லை” என்றதும், “ஏன்?” என்ற வினா கேட்கப்பட்டது. “எங்களுக்குப் படைக்கப்பட்ட உணவில், கீரை படைக்கப்படவில்லை” என்றனர். திரு.V.சிவசண்முகம் வீட்டினரிடம் தெரிவித்தார். கீரையை சமைத்தும் படைக்க மறந்து விட்டிருந்தனர்.கீரை உடனே படைக்கப்பட்டது.
தவயோகினி, திருமதி. M.சுந்தரம்மாள் அவர்களுக்குச் சிறிது நம்பிக்கை வந்து விட்டது.படையலிட்ட குடும்பத்தினர், “இப்போது திருப்தியா?” என்றதும், “எங்களுக்குப் பூரண திருப்தி ” என்ற பதில் வந்தது. உடனே, “உங்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறோம். பதில் கூற வேண்டும் ” என்றதற்கு “ஆகட்டும், கேளுங்கள்” என்றனர். அமானுஷ்யம் ஆனவரின் மனைவி, “வட்டிக்கு விட்ட பணம், யாரிடமெல்லாம் இருக்கிறது? கொடுத்த பணம் திரும்ப வந்து சேரவேண்டும். கிடைக்குமா? ” என்கிற வினா எழுப்பினர். “ஆஹா அருமையான கேள்வி” என்று நினைத்த எல்லோரும் நிமிர்ந்து அமர்ந்து கொண்டனர். சிறிது நேரம் மெளனத்திற்குப் பிறகு அமானுஷ்யங்கள் பதில் கூறினர். பதிலைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
கேட்டது எதுவும் கிடைத்து விட்டால் சந்தோஷமும், அத்துடன் திருப்தியின்மையும் மனதில் ஏற்பட்டு விடுகிறது. அது மனித சுபாவத்தின் அதிதீவிர ஆசையைக் காட்டுகிறது. சிலருக்கு, “ஆமானுஷ்ய சக்தி என்பது இவ்வளவுதானா? சினிமாவுக்காவது சென்றிருக்கலாம், பொழுது போக்கில் மனம் மகிழ்ந்திருக்கும். இவ்வளவு செலவு செய்து படையல் வேறு” என வைது விட்டுத் திருப்தியுடன் சாப்பிட்டு விட்டே சென்றனர். அப்படி என்னதான் பதில் கிடைத்தது?
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.