பெரிய வீட்டுப் பிள்ளைகள்!

260

Get real time updates directly on you device, subscribe now.

02•01•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(186) மனிதனே புனிதன் —
பெரிய வீட்டுப் பிள்ளைகள்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பொள்ளாச்சி தியான கூட்டம் தவத்திரு.வேணுகோபால சுவாமியின் வழிகாட்டுதலில் மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. தியானத்தில் கிடைக்கும் காட்சிகளுக்கு ஞான விளக்கங்களும், கனவுகள் காண்பவர்களுக்கு ஏற்படும் பயத்தைப் போக்க, அது குறித்து கனவுகள் எதனால் உண்டாகிறது? என்பது பற்றிய விளக்கங்களும், ஆன்மிக சந்தேகங்கள் பற்றிய அநேக பதில்களும் பெறப்பட்டது. மதியத்துக்குப் பிறகு பெரிய வீட்டிற்கு சுவாமி அழைத்துச் செல்லப்பட்டார். நமது நாகராஜன் சுவாமியும் உடன் சென்றார். அங்குதான் ஒரு முக்கியமான நபர் ஒருவரைத் பற்றிய அமானுஷ்ய செய்தியை அறிந்து கொண்டார்.

பெரிய வீட்டின் மாடியில் ஒரு அழகிய வாலிபன் இரண்டு கால்களும் செயல் இழந்த நிலையில் உட்கார
வைக்கப்பட்டிருந்தார். அவர் பெயர் திரு.V.ஜெகதீஷ். தெய்வீக பக்தியும், நல்ல எண்ணங்களுக்கு அவர் சொந்தக்காரராக இருந்தார். அன்புடனும், இனிமையாகவும், மரியாதையுடனும் வார்த்தையாடினார். சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அவர் ஞானகுரு அவர்களை மிகுந்த அன்புடனும், பண்புடனும் வரவேற்றார். அவர் குணம் பெற வேண்டும் என்று சிறிது நேரம் அனைவரும் தியானம் செய்தார்கள். நமது நாகராஜன் சுவாமி மெளனமாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அக்குடும்பம் சாபத்திற்கு ஆளாகியிருப்பது தெரிய வந்தாலும், பதில் கூற சந்தர்ப்பம் நமது சுவாமி அவர்களுக்கு வாய்த்திடவில்லை. அத்துடன் அந்த வாலிபருக்கு அகாலமரணம் ஏற்படப் போகின்றது என்ற செய்தி அங்கேயே கிடைத்து விட்டது. இதனை எப்படி அவர்களிடம் தெரிவிப்பது?

அந்த வீட்டில் மூன்று ஆண் மக்களும், பெண் மகள் ஒன்றுமாக நான்கு குழந்தைகள். தீமை செய்திடும் அமானுஷ்ய சக்திகள் வீட்டினுள் நுழைந்து விட முயற்சி செய்து கொண்டிருந்தன. அதற்கு முதல் பலியாகப் போவது அவ்வாலிபனே. இதில் மூன்றாவது குழந்தைதான் V.சிவசண்முகம் தெய்வீக அம்சம் பொருந்தியவர். இரண்டாவது மகன் திரு.V.கிருஷ்ணராஜ் சிறந்த பக்திமானாகவும், அப்பாவியாகவும் விளங்கிய அவரை மாந்திரீகப் பிடியில் அகப்படச் செய்த சதிவலையில் சிக்கப் போகின்றவர். இதில் மூன்றாவதானவர் திரு.V.சிவசண்முகம் அவர்கள் ஆன்மிக ஈடுபாட்டுடன் வளர்ந்து வந்தாலும், பொள்ளாச்சி தியான சங்கத்தினருள் சிலர் அவருக்கு வேறொரு வழியைக் காட்டி விட்டனர். அது என்ன?

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button