ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
29•12•2016,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(182) மனிதனே புனிதன் —
ஞானகுருவின் தியானம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஞானகுரு தவத்திரு. வேணுகோபால சுவாமி அவர்களின் உபதேசத்தில் அடிக்கடி “ஆத்மசுத்தி” பற்றிக் கூறுவார். நாம் நம்முடைய எந்தக் காரியங்கள் நிறைவேற வேண்டும் என்று எண்ணினாலும், அதற்கு முதலில் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். தியானம் செய்து வருபவர்கள் தினமும் ஆத்மசுத்தி கட்டாயமாகச் செய்து கொள்வது நன்மை தரும் என்று கூறுவார். ஒன்றை அடைவதற்கு ஏக்கமான உணர்வுகள் அவசியம் என்பார். “மகரிஷிகளின் அருள் ஒளியைக் நான் பெற அருள்வாய் ஈஸ்வரா” என்று எண்ணியபடி ஏக்கமுடன் கண்களைத் திறந்து, ஒருநிமிடம் சிந்திக்க வேண்டும். பிறகு கண்களை மூடி, “மகரிஷிகளின் அருள் ஒளியைக் என்னுடைய ஜீவாத்மா பெற அருள் வாய் ஈஸ்வரா” என்று அதே ஏக்கமுடன் தனது உடல் முழுவதும் பதியும்படி எண்ணி, ஒருநிமிடம் நேரம் தியானம் செய்தால் ஆத்மா, சுத்தி பெற்று விடும்!
இப்படியாக ஆத்மசுத்தி செய்து கொண்டு, நமக்கு எந்தக் காரியம் நடைபெற வேண்டுமோ அந்தக் காரியம் நல்லபடியாக நடைபெறும் என்ற எண்ணத்தின் ஏக்கமுடன் தியானம் செய்தோமானால், அக்காரியம் நிறைவேறி விடும். இது தியானம் என்றால் என்னவென்று தெரியாத பாமர மக்களுக்கும் புரியும்படியாக எடுத்துக் கூறுவதும்; அதனைச் செவிமடுப்பவர்கள் நன்மைகள் பெறவேண்டும் என்று, ஞானகுரு தவத்திரு.வேணுகோபால சுவாமி அவர்கள் தவம் செய்து வந்ததும் கண்கூடு. இதனால் மக்களுக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது. அவர்மீது ஏக்கமுடன் கூடிய பாசம் ஏற்பட்டு விட்டதும் என்னமோ உண்மைதான்!
பிறர் நம்மை சங்கடப்படுத்தும் போதும், நாம் நோயாளிகளைச் சந்திக்கும்போதும், அவர் நலம் விசாரிக்கும் போதும் “ஆத்ம சுத்தி” செய்து கொண்டு, நல்ல குணமுடைய உணர்வுகளை எடுத்து நலம் பெறப் பிரார்த்தனை செய்வதும், இனி பேசுபவை அனைத்தும் நல்லவைகளாகப் பேச வேண்டும் என்று ஏக்கமுடன் எண்ணி ஒருநிமிடம் தியானிக்க வேண்டும். அவர் மக்களுக்குத் தேவையான விஷயங்களைப் பக்குவமாகக் கூறி வந்தார். அது மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
“நமது வாழ்க்கையில் நம்மையறியாது, நமது புலனறிவால் ஈர்க்கப்பட்டு, நாம் சுவாசித்த, தீய, கோபம், குரோதம், அவசரம் ஆத்திரம், சங்கடமான குணங்களின் உணர்வலைகளை மாய்க்க வேண்டும். அவைகளை மாய்க்க வேண்டுமானால், பரவெளியில் பரவிப்படர்ந்திருக்கும் ஆற்றல் மிக்க ஒலி ஒளித் தன்மையான உணர்வலைகளை ஈர்த்து “ஆத்ம சுத்தி” செய்து கொள்ள வேண்டும்.” சற்குருநாதர் ஸ்ரீ ஈஸ்வரபட் அவர்கள் தமது இரண்டாவது சீடரான தவத்திரு. வேணுகோபால சுவாமி அவர்களுக்கு உபதேசமாக அருளிய இதனைக் கொண்டு அநேக நன்மைகளைப் பெற முடியும். மக்கள் இதனைப் பெற்று வாழ்வாங்கு வாழவேண்டும் என்ற ஆசையினால்தான், ஊர்ஊராகச் சென்று உபதேசம் செய்து நல்வழிப்படுத்தும் காரியங்களைச் செய்து வந்தார் .
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.