பக்தர்களிடம் ஆர்வம்!

125

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

23•12•2016,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(176) மனிதனே புனிதன் —
பக்தர்களிடம் ஆர்வம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தவத்திரு.வேணுகோபால சுவாமி அவர்களைச் சந்திக்க நமது சுவாமி நாகராஜ் அவர்களுக்கு விஷேச அழைப்பு இருந்தது! நமது சுவாமி நினைத்தவுடன் புறப்பட்டுச் சென்று விட முடியாது! அனுமதி மிகவும் முக்கியமான விஷயம். பாட்டி பொன்னம்மா அவர்களுக்கு இப்போது புதிய உத்தியோகத்தை அவரே ஏற்படுத்திக் கொண்டு விட்டார். மில் அதிபருடைய மகன்கள் செய்திருந்த கலகத்தினால் சிறிது அச்சம் அவரது மனதில் உருவாகியிருந்தது. மனநிலை பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

கிராமத்தில் எந்த வீட்டில் சண்டை சச்சரவு ஏற்பட்டாலும், உடனே அங்கு சென்று அவர்களுக்குள் சமாதானத்தை ஏற்படுத்துவதும், குற்றம் இருந்தால் கண்டிப்பதும், ஆறுதல் சொல்வதும், தேவைப்பட்டால் பணம்,காசு உதவிகள் செய்வதும், பசியுடனிருக்கும் குழந்தைகளுக்கு உண்ண உணவு கொடுத்து வருவதுமான செயலினில், தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருந்தார். கிராமத்தில் உள்ள அனைவருடனும், ஜாதி, சமயப் பாகு பாடின்றிப் பழகி வந்ததில், அனைவரும் தங்களது வீட்டுப் பாட்டியாக உரிமை கொண்டாடி மகிழ்ந்து வந்தனர். இன்னும் சிலர் அவர்களை “அம்மாயி” என்று அழைக்க, நாளடைவில் அந்தப் பட்டப்பெயரே கடைசி வரையில் நின்று நிலைத்து விட்டது. அவர் இறபபெய்திய காலை கோயில் கட்டிக் கொண்டாடும் நிலைக்கே மக்கள் சென்று விட்டனர். பிறந்த பயனைப் பெற்றவர் “அம்மாயி” பொன்னம்மா நாச்சியார் தான்!

“நானென்ற அகங்காரம் இல்லறத்தின் முறைகேடு நானென்ற நிலை விடுத்தல் சிவசக்தி அறியும் முறை” — என்ற சற்குருநாதரின் வாசகப்படி வாழ்ந்து காட்டியவர் அவரே. இக்கலியில் ஏதாவது நான்கு சித்தர் பாடல்கள் அல்லது பொன்மொழிகளைத் தெரிந்து வைத்துக் கொள்வார்கள். தாங்கள் அதனைக் கடைப்பிடிக்க முயலாமல் மற்றவர்களுக்கு மட்டுமே உபதேசம் செய்கின்றவர்கள் வரிசையில் அம்மாயி திருமதி.பொன்னம்மாள் நாச்சியார் அவர்கள் இல்லை என்பது மட்டும் உறுதி. நாங்கள் இதனை நேரில் கண்டு அனுபவமும் பெற்றவர்கள். இன்னும் எத்தனையோ தெய்வப் பிறவிகள், இந்த உலகில் தங்களை வெளிப்படுத்தாமல் இறைவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ? நாமறியோம்!

தியானம் என்பது இயல்பான விஷயம் என்று கூறுவார்கள். அவர் சற்குருநாதர் ஸ்ரீ ஈஸ்வரரைப் பலமுறைகள் நேரில் சந்தித்து அருளாசிகள் பெற்ற புனிதவதி. நமது சுவாமி அவரது ஆத்மார்த்தமான சீடப் பிள்ளையானதில் அவருக்குப் பரம சந்தோஷம். அவரது தங்கை திருமதி.நல்லம்மாள் வயிற்றுப் பேத்தி மாணிக்காள் என்பவர், பழனியில் அமைவு பெற்றுள்ள ஸ்ரீ ஈஸ்வரரின் சமாது ஆலயத்தில் பூஜை கைங்கர்யங்களுக்கு, சிறு பிள்ளையாக இருக்கும்போது, பணிவிடைகள் செய்தவர். அதனால் அம்மாயி பொன்னம்மா நாச்சியார் அவர்கள் சற்குரு நாதரைப் பேரன்பு மிக்க குருவாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். இதைக் குருநாதர் பக்தியின் மிகுத்த ஆர்வம் என்று கூறுவார்.

இனி ஸ்ரீ ஈஸ்வர பட் சற்குருநாதரின் சமாது ரகசியங்கள் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. அதைப் பார்த்து விட்டு தவத்திரு. வேணுகோபால சுவாமி அவர்களின் உபதேசம் கருத்துக்கள் மற்றும் அவரின் தியானவழி முறைகள் பற்றித் தெரிந்து கொள்வோம்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button