வாழ்வில் கடைப்பிடிக்கும் உரை.

130

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

21•12•2016,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(174) மனிதனே புனிதன் —
வாழ்வில் கடைப்பிடிக்கும் உரை.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பொள்ளாச்சி செளண்டம்மன் கோயிலில் தியானக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சிறப்புடன் நடந்தது. அன்று அவர்களுக்கு அவர்களின் தியான சங்கம் தலைமையகம் பவானியில் இருந்து ஒரு சுற்றறிக்கை வந்திருந்தது. முதலில் தியானம் செய்து விட்டு, அறிக்கையைப் படிக்கும்படி குடும்பத்து ஒரே மாப்பிள்ளையாய் விளங்கும், திரு.ராமசாமி அண்ணார் அவர்களிடம் மரியாதை நிமித்தம், தவயோகினி திருமதி. சுந்தரம்மாள் அவர்கள் கேட்டுக் கொண்டார். திரு.ராமசாமி அண்ணார், “கருத்துப் பரிமாற்றம் இன்று நடத்தவிருக்கிறது. அது நிறைவு பெற்றதும் தலைமைச் சங்கத்தின் செய்தியைப் படிக்கிறேன்” என்றார்.

பவானி தலைமை சங்கத்துடன், பொள்ளாச்சியில் இவர்கள் கிளை சங்கமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். அன்று பொள்ளாச்சி திருமதி.நளினி டாக்டரின் தாயார் திருமதி. ரங்கநாயகி அம்மாள் அவர்களும் தியானத்தில் அமர்ந்திருந்தார். திருமதி.வேதவல்லி ராஜசேகரன் அவர்களின் தாயார் திருமதி.கமலம் கிருஷ்ண மூர்த்தி அம்மாள் அவர்களும், அன்றைய தியானக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். அநேக ஞான விளக்கங்களை அங்கு வந்திருந்த அனைவருக்கும், எளிமையாகப் புரியும்படி, சிறப்புடன் கூறிக்கொண்டு இருந்தார்கள். அவர் சொன்னார், இவர் சொல்லி இருக்கிறார் என்று கூறாமல் தாங்கள் என்ன உணர்ந்தார்களோ அந்த அனுபவ ஞானத்தைப் பிறருக்கும் வழங்கி, ஊக்குவித்துக் கொண்டிருந்தனர். உண்மையாகவே அது பாராட்டுதலுக்குரியது உரிய செய்கையாக இருந்தது.

இன்னொரு செய்தியும் அங்கு பகரப்பட்டது. அது அதிவிஷேசம் தான்! நமது நாகராஜன் சுவாமி அமைதியுடன் அக்கூட்டத்தில் பேசுவது கேட்கும் தூரத்தில் அமர்ந்திருந்தார். திருமதி.ரங்கநாயகி அம்மாள் தொடங்கி வைத்தார், “சித்தர்களும், முனிவர்களும் தங்களின் தவத்தால் அறிந்து அநேகம் உண்மைகளை உலகினுக்கு எழுதி வைத்துள்ளார்கள். அவைகளை நாம் கடைப்பிடிக்கின்றோமா?”
உடனே அண்ணார் திரு.ராமசாமி அவர்கள், “ஆஹா நல்ல கேள்வி! இதற்கு யார் பதில் சொல்ல விரும்புகிறீர்கள்?” என்றார்.

தவயோகினி திருமதி.சுந்தரம்மாள் அவர்கள், “நாம எல்லோரும் கடைப் பிடிக்காமலா இந்த தியான சங்கத்திலே இருக்கிறோம்?” என்றதும் அவர், “அத்தையம்மா மன்னிக்கவும். எங்கள் கேள்விக்கு பதில் இருக்கா இல்லையா? அது தெரிய வேண்டும்.” திருமதி.கமலம் அம்மாள் கன்னட பாக்ஷையில் பேசினார். திரு.ராமசாமி அண்ணார், “இதப்பாருங்க, உங்க வீட்டில் உங்க பாக்ஷையில் எதுவேனா பேசிக்கோங்க! இது பொது இடம். இங்க தமிழில் தான் பேசவேண்டும். அதுதான் சபை மரியாதை” என்றார். திருமதி. கமலம் அம்மாள், “ஞானியர்கள் எவ்வளவோ நல்ல நல்ல கருத்துக்களைக் கூறினாலும், அதற்கு விதண்டா வாதமாகத்தான் மனிதர்களின் கருத்து இருந்து வந்துள்ளது! நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுதான் கடைப்பிடிக்க முடியும். துறவிகளுக்குச் சொல்லப்பட்டதை துறவிகள் கடைப்பிடிக்கட்டும். இல்லற தர்மத்தில் வாழ்பவனுக்குச் சொல்லப்பட்டவைகளின் உண்மையைக் கண்டறிந்து, உணர்ந்துதானே நாம் செயல்பட முடியும்! ” என்றார்.

தவயோகினி திருமதி. சுந்தரம்மாள் அவர்கள் வள்ளுவத்தைப் பேசினார். “கற்கக்கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button