ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
15•12•2016,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(168) மனிதனே புனிதன் —
சூரியன் நோக்கு வித்தை.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உணர்வுடன் கூடிய ஆத்மஒளி தியானத்தில் பற்பல ஆன்மிக உண்மைகளை அறிந்து கொண்டிடும் வாய்ப்பு சற்குரு நாதரின் அருளாசியினால் நமது சுவாமிக்குக் கிடைத்தது அபூர்வம் தான்! அதனை எண்ணி நன்றி கூறிவிட்டு வேகமாக நடை போடத் துவங்கினார் சுவாமி. அன்று வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாகவே இருந்தது. பாம்பாட்டி சுனை வந்ததுமே பாட்டிலில் ஊற்றுநீர் சேகரிக்கத்திரு.காளியப்பன் சென்றதும், சுவாமி மரங்களைப் பார்த்தபடி சுற்றி வந்தபடியே இருந்தார். சற்று சரிவான இடத்தில் இருந்த பெரிய மரத்தின் வேர்மீது கைப்பையின் பிடி தெரிந்தது. மரத்தில் சிறிய அளவில் வட்டமாக அடையாளம் இருந்தது.
அவற்றில் ஜெபத்தால் உயிரூட்டப்பட்ட அபூர்வமான மூலிகைகள் இருந்தது. இன்றளவும் அவைகள் நமது சுவாமிக்கு பொக்கிஷங்கள் தான். மற்றவர்களாக இருந்தால் இவைகளில் அதிக அக்கரை காட்ட மாட்டார்கள். தனது குருநாதர் ஐவர்மலையில் ஜெபம் செய்து தந்த ஒரு சாதாரணமான கருங்கல், அதனையும் குருநாதர் நினைவாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறார். தாகம்தீர நீர் அருந்தி சற்று நேர ஓய்வுக்குப் பிறகு பயணம் வெள்ளை விநாயகர் கோயிலில் வந்துதான் நின்றது. இடையில் வழுக்குப்பாறையில் வெயில் சூடு தகித்தாலும் அங்கு நிற்காமல் விநாயகர் கோயிலில் சோடா குடித்து விட்டு மெல்லப்படி இறங்கினர். மலையின் அடிவாரத்தில் சந்நியாசிகளுக்கு தங்களால் இயன்ற அன்னதானக் காணிக்கைகள் தந்து அவர்களின் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர்.
சிவன் கோயில் வந்து மண்டபத்தில் திரு.காளியப்பன் அவர்கள் அலுப்பினால் உறங்கிப் போனார்.கையில் வளைந்த கம்புடன் சற்குருநாதர் வந்து நமது சுவாமியிடம், “ஆதாளியம்மன் குகைக்கு நீ ஆழியார் வரும்போது உனக்கு சூரியன் நோக்கு வித்தை பாடத்தைச் சொல்லுகிறேன். ஒருநாள் பிந்தி வந்து விட்டாய். ஆகட்டும், ஆகட்டும் நான் புறப்பட்டு பழனி சென்று சுவாமி நடராஜனைப் பார்க்கப் போகிறேன. மனம் உருகி என்னை அழைக்கின்றான். நான் வருகிறேன். வீட்டில் உனக்கு அதிக தொல்லைகள் தந்தால் முஹையித்தீன் நாயகத்திடம் நீ தியானம் செய்து கொள். கூப்பிட்ட குரலுக்கு உனக்குப் பாதுகாப்பைத் தருவார். ஆகட்டும் டீ சாப்பிட இரண்டு ரூபாய் கொடு” எனப் பெற்றுக் கொண்டு மரங்கள் அடர்ந்த இடத்தை நோக்கி மெல்லச் சென்றார். வீடு திரும்பும் வரையிலும் இந்தப் பயணத்தில் நமது சுவாமி பேசியது சொற்ப வார்த்தைகள்தான். வீடு வந்து சேர்ந்ததும் குடும்பத்தினரிடம் பூகம்பம் வெடிக்கச் காத்திருந்தது.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.