பயணமும் முக்தியும்!

261

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

12•12•2016,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(165) மனிதனே புனிதன் —
பயணமும் முக்தியும்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மனிதனின் உயிர் ஆற்றல் சக்தியானது, அவனை விட்டு என்றும் நீங்காமல் என்றும் நிலை பெற்று இருக்க வேண்டும் என்பதற்காகவே, பராபரமாகிய இறைசக்தியைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று ஞானியர்கள் வழிகாட்டி இருக்கின்றார்கள். தனது உயிராற்றல் சக்தியைப் பெருக்கிக் கொண்டவர்கள் இறைவனுடன் கலந்து வாழ்கிற பாக்கியத்தைப் பெற்று விடுவார்கள். இயற்கையின் இயல்பைப் பெறுவதால் எல்லாப் பற்றுக்களும் நீங்கி, இறைவனது பற்றொன்றே பற்றி இருக்கும். இறைசக்தியைப் பற்றியுள்ள மனிதனின் ஆன்மா அழிவுபடாத பேரின்பப் பெருநிலையை அடைந்து விடும். தனது வழியின் பாதை புலப்படத் துவங்கும். அப்பாதையில் பயணித்து ஞானியர்கள் ஆன்ம விடுதலை பெற்று விடுகின்றனர்.

மனிதன் தனது வாழ்க்கைப் பாதையில் அவனது எண்ணங்கள் எப்படியோ? அந்த எண்ணத்தை எப்படி செயல்படுத்துகின்றானோ அவன் அப்படியே ஆகின்றான். தீய செயல்களைச் செய்கின்றவன் தீயவனாகவும், நல்ல செயல்களைப் புரிகின்றவன் நல்லவனாகவும் ஆகி விடுகின்றனர். எண்ணம் போல் வாழ்வு என்பது இதைத்தான் கூறினர். வாழ்க்கை என்பது அவனது ஆசையினால் அமைகிறது. ஆசையினால் தான் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுகின்றது. ஆசையினால் ஏற்படும் நம்பிக்கையின் வாயிலாக எடுக்கின்ற தீர்மானத்தையே மனிதன் செயல்படுத்துகின்றான். மனிதனின் செயல்கள்தான் அவனைப் பற்றிய உண்மைத் தன்மையை வெளிப்படுத்துகிறது. மனிதனின் செயல்கள் எப்படியோ அப்படியே அவன் ஆகி விடுகின்றான்.

மனிதனது வெள்ளிங்கிரி மலைப் பிரயாணமானது தரும் முடிவுகள் அவனது செயல்களைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. எந்தெந்த எண்ணங்களை எல்லாம் எண்ணிக் கொண்டு தொடங்கும் பயணமானது முடிவில் ஆண்டவர் இருக்கும் விபூதிமலையுடன் முடிவடைகிறது. ஆசையும், அதனால் எழுந்த நம்பிக்கையும், நம்பிக்கையின் முடிவு அதனை நிறைவேற்றும் செயலிலும், ஒரு இறுதி என்ற நிலையிலும் அவன் எண்ணத்தைத்தான் பிரதிபலிக்கின்றான். ஆசை யின் விளைவால் அனுபூதிநிலை கொஞ்சநேரமே நீடிக்கிறது. பிறகு மனிதன் தனது செயல்படும் ஆசையின் உலகினுக்கே திரும்பி வந்து விடுகின்றான். ஆசை யின் அடிப்படையிலான ஆன்மிக வாழ்வு அம்மனிதனை வெளிப்படுத்தி விடுகிறது. ஆசைகளைக் கட்டுக்குள் வைத்துள்ள மனிதனின் நிலையோ அல்லது இன்னும் ஒருபடி மேலே சென்று ஆசை களில் இருந்து விடுபட்டு விட்ட மனிதனின் நிலையைப் பார்ப்போமாகில், அவன் நிச்சயம் பரபிரம்ம சொரூபத்தில் ஒன்று கலந்து விடும் வழியைக் கண்டு கொள்கிறான்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button