ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
11•12•2016,
ஞாயிற்றுக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(164) மனிதனே புனிதன் —
புனித பிரம்ம தீர்த்தம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நமது சுவாமிக்குத் திரு.காளியப்பன் மீது அனுதாபம் ஏற்பட்டது. மெல்ல அவரிடம் பேசியபடியே நடந்து கொண்டிருந்தார். பாதை இப்போது கரடுமுரடாக மாறிவிட்டிருந்தது. மிகப்பெரிய பள்ளம் போல் மலையின் சரிவு எதிர்ப்பட்டது. மெதுவாக இறங்கிச் சென்றதும் அர்ஜூனன் பாசுபத அஸ்திரம் பெறத் தபஸ் செய்த மிகப்பெரிய பாறை ஒன்று, செல்லும் வழியில் இடது புறமாக இருந்தது. அங்கு தான் சிவனும் பார்வதியும் அர்ஜூனனை சோதித்துப் பாசுபத அஸ்த்திரத்தைத் தந்து ஆசீர்வதித்து இடம். “வெற்றிலை பாக்கொடு சுண்ணாம்பும் தினம்என்நா தறிப்பதென்நாளோ விண்ணாநாடுடைய சிவப்படைக்கலம் இந்நாள் பெற்றதுமவ்வாறே”. அங்கு அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டு பிரம்மதீர்த்தத்தை நோக்கிச் சென்றனர்.
சூரியன் உதயமாகிக் கொண்டிருக்க, பிரம்மதீர்த்தம் பனிக்கட்டியின் குளிர்ந்த தன்மைபோல் நீர் காட்சிதந்தது. பக்தர்கள் அந்தப் புனிதமான தீர்த்தத்தைச் சுற்றிலும் மலஜல உபாதைகளை நீக்கிக் கொள்ளப் பயன்படுத்தி இருந்தனர். புனிதநீர் மலையின் மீதிருந்து வந்து பிரம்மதீர்த்தக் குளத்தை நிறைத்து வழிந்தோடிக் கொண்டிருந்தது. சுவாமி அந்தத் தீர்த்தத்தில் நீராடி இறையருளைப் வேண்டிப் பிரார்த்தனை செய்து கொண்டார்.
பிரம்மதீர்த்தத்தில் நீராடியதால் வழிநடைப் பிரயாணத்தில் ஏற்படும் அலுப்பு உடனே நீங்கிப் புத்துணர்ச்சி உடலுக்கு ஏற்படுவது கண்கூடு. சில சமயங்களில் மலை மீது கடும்குளிர், பெருமழைக் காலங்களில் பாதுகாப்பு உடைகள் இன்றி, இறப்பு எய்தியவர்கள் அநேகம்பேர். அங்கு தேநீர் தயாரித்து பக்தர்களுக்கு விற்பனை செய்பவர்களும் உண்டு.
உயரே செல்லச் செல்ல, நமது சுவாமி அவர்களுக்கு உணர்வு கூடிக் கொண்டிருந்தது. விபூதி மலையின் முன்பு சுவாமி நின்று கொண்டு, பிரார்த்தனையில் மூழ்கியவர் கண்கள் தமது குருநாதரைத் தேடின. அவர் அங்கு காணப்படவில்லை. எனவே அமைதியாகக் பிரார்த்தனையை செய்தபடி வெள்ளிங்கிரி ஆண்டவரிடம் தனது குருநாதருக்காக வேண்டிக் கொண்டார். நமது சுவாமியினால் அதுதான் இயலும். ஓங்கார நாதம் கேட்டுக் கொண்டே இருந்தது. ஸ்ரீ ஈஸ்வரர் உணர்வு பெருகிக் கொண்டே இருந்தது.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.