ஆகாயத்தில் சிவன் பாதம்!

177

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

08•12•2016,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(161) மனிதனே புனிதன் —
ஆகாயத்தில் சிவன் பாதம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திரு.காளியப்பன் அவர்கள் நமது சுவாமிக்குத் துணையாக வந்தது, ஒரு வகையில் நன்மையை ஏற்படுத்தியது. இவர் தம்பி தான் பெரியசாமி என்பவர். சுவாமியின் சிறு வயதில் இவர்கள் வீட்டில் தான் ஹடயோகி தங்கியிருந்தார். இவரது மாமா திரு.தங்கவேல் என்பவர் கோயம்புத்தூர் அருகே உள்ள உடையாம்பாளையம் என்ற ஊரில் சித்த வைத்தியராக இருந்தார். கல்உப்பை மணியாகக் கட்டுவார். அவர் மூலிகை பறிக்க வனத்திற்குள் செல்லும் போதெல்லாம், துணையாகச் செல்லும் வழக்கத்தைத் திரு.காளியப்பன் கொண்டிருந்தார். அதனால் வெள்ளிங்கிரி மலைப் பயணத்தின் போது அதிகமாக மூலிகைகள் பற்றியே திரு.காளியப்பன் பேசிக்கொண்டு வந்தார். இது பிறகு நமது சுவாமியை சித்த மருத்துவம் கற்றுக் கொள்ளத் தூண்டுதலாக இருந்திருக்குமோ என்று நான் எண்ணுகிறேன்.

சுவாமியை முதல்நாளே மலைக்கு வரச்சொல்லி இருந்தார் சற்குருநாதர். ஆனால் சுவாமி குடும்பத்தினர் கெடுபிடியால் பெளர்ணமி அன்று அதிகாலையில் தான் புறப்பட்டுச் சென்றார். பேருந்து வசதி இருந்தது. மலையின் அடிவாரத்தில் உள்ள ஈஸ்வரர் ஆலயத்தில் உள்ள, தண்ணீர் தொட்டியில் குளித்து விட்டுச் சுவாமி தரிசனம் செய்தவுடன், உடனேயே மலை ஏறத்துவங்கி விட்டார்கள்.

சுவாமி அவர்கள் தனது சற்குருவைத் தேடியபடியே சென்றார். அப்போதெல்லாம் நமது சுவாமி மலைகளுக்கு அடிக்கடி பிரயாணம் செய்து இருப்பதால், மிகச்சுலபமாக, வெகு வேகமாக நடைப் பயணம் இருக்கும். வெள்ளை விநாயகரைத் தரிசனம் செய்து விட்டுத் துரித நடையில் சென்று கொண்டிருந்தனர். இரவு நேரத்தில் நடந்து செல்வதையே திரு.காளியப்பன் விரும்பினார். மாலைப் பொழுதில் உயரத்தில் ஒரு சமமான இடத்தில் நமது பிரயாணிகள் அற்புதமான ஓர் அரிய காட்சியைக் கண்டனர். வானம் சிவந்து சூரியன் அஸ்தமனமாகும் நேரம். கிழக்கு திசையில் பூரணச்சந்திரன் உதயமாகிக் கொண்டிருந்தது. இயற்கை வளம் நிறைந்த அழகிய வனத்தில், மிக உயரத்தில், சூரியன் மறைந்து கொண்டிருக்க, பெளர்ணமி சந்திரன் உதயமாகிக் கொண்டிருக்க, ஜெபத்துடன் சுவாமி நின்று கொண்டிருந்தார். அறிவு, உணர்வுடன் ஒன்று கலந்து கொண்டிருந்தது! மேற் பகுதி வட்டமாக வளைந்திருக்க அந்த உயரமான கம்பைக் கையில் பிடித்தபடி சற்று தூரத்தில் சற்குருநாதர் தூய வெள்ளைநிற உடையில் நின்று கொண்டு இருந்தார்.

 

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button