எங்கிருந்தாலும் வருவேன்!

154

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

05•12•2016,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(158) மனிதனே புனிதன் —
எங்கிருந்தாலும் வருவேன்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அம்மனை வழிபட்ட விவசாயி மெல்ல அவளை வெளியே எடுத்துத் தான் கொண்டு வந்திருந்த சிவப்புத் துண்டினுள் பொதிந்து, ஏற்கெனவே வைக்கோல் பாரம் ஏற்றியிருந்த தனது மாட்டு வண்டியினுள் ஓரிடத்தில் பாதுகாப்பாக வைத்தார். அவரால் அங்கிருக்க இயலவில்லை! ஏதோ அமானுஷ்ய சக்தியால் உந்தப்படுவது போல் உணர்ந்தார்.

தன்னுடன் வந்திருந்த தனது சகாக்களிடம் சென்று, ” எனக்கு உடல்நிலை சுமாராக உள்ளது. எனது வண்டியை ஓட்டிக் கொண்டு முன்னால் புறப்பட்டுப் போகிறேன். நீங்களும் உங்கள் பணிகளை முடித்துக்கொண்டு பாதுகாப்பாக வந்து சேருங்கள். வருகின்றேன், வணக்கம்” என்று கூறி விடைபெற்றுக் கொண்டார். அங்கே மேய்ந்து கொண்டிருந்த பசுக்களெல்லாம் வண்டியைச் சூழ்ந்து குரல் கொடுத்து, வண்டியை நாவினால் தடவி ஏக்கக்குரலால் கத்தின. இதென்ன அதிசயம் என்று எண்ணினார். வண்டியை வேகமாக விட்டுக் கொண்டு, ஊர் போய்ச் சேர்ந்தார்.

ஊருக்குப் போனதும் முதல் வேலையாக அம்மனின் உத்தரவுப்படி, தனது விவசாய பூமியில் இருக்கும் பெரிய கிணற்றினுள நீருக்குள் தேவியை ஆழ்த்தி விட்டார். இது இப்படி இருக்க, வெளியூர் சென்றிருந்த தீயமந்திரவாதி தனது ஏவல் வேலையின் நிமித்தம் அம்மனை ஏவலுக்கு அழைத்திருக்கின்றான். அம்மன் அவன் அழைப்புக்கு வரவில்லை. ஏககடுப்பாகிப் போன மந்திரவாதி மரத்தினுக்குப் போய் பூஜையிட்டு அழைத்தும் மயான அமைதி அவனைத் தாக்கியது. “அடியே நீலி போய் விட்டாயா? எங்கு தான் போய்விடுவாய்? எங்கிருந்தாலும் வருவேன்; உன்னைப் பிடிக்காமல் ஓயமாட்டேன். உன்னை விடமாட்டேன்” என்று கத்தி அலறினான்.அங்குள்ள மக்கள் பயத்தில் நடுங்கினர்.

மாந்திரீகனின் பிரசன்னத்தில் அவனது அம்மன் தமிழகத்திற்குள் ஒரு குறிப்பிட்ட தூரம் சென்று தங்கிவிட்டதாகத் தெரியவந்தது. பிறகென்ன? அவன் காரியம் நடைபெற அம்மன் துணை வேண்டுமல்லவா? ஆனால் அம்மனுக்கு அவன் செயல் அறவே பிடிக்காததால், கிளம்பிச் சென்று விட்ட உண்மை புரிய வேண்டுமே! தமிழக எல்லை ஓரங்களில் எல்லாம் தேடித்தேடி அலைந்து கொண்டிருந்தவன் கண்களுக்குக் கூடுதுறைக் காளியம்மன் பட்டுவிட்டாள். அங்கு ஜனங்கள் கூட்டம் கூட்டமாக வருவதைக் கண்டு, நல்ல சக்தி வாய்ந்த காளி கிடைத்து விட்டால் தனது அதிர்ஷ்டம் உச்சத்திற்குப் போய்விடும் என்று மகிழ்ந்தான். உடனே கூடுதுறைக் காளியைக் கடத்திக் கொண்டு போய் தனது தீயமாந்திரிக சக்திக்கு பயன்படுத்தும் செயலிலும் இறங்கி விட்டான்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button