காளி அம்மன் போய் விட்டாள்!

192

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

03•12•2016,
சனிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(156) மனிதனே புனிதன் —
காளி அம்மன் போய் விட்டாள்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°கிராமத்தில் நடை பெற்ற நிகழ்ச்சி அமானுஷ்யத்தின் அடிப்படையில் நடை பெற்ற ஓர் புதிர் நிகழ்வு. இன்றுவரை அதற்கு முழுமையான விடை கிடைக்கவில்லை என்றாலும், நடை பெற்றது உண்மை நிகழ்வுதான். பூஜாரியின் அழைப்பு மற்றும் பூஜை எதற்கும் காளியம்மனிடம் இருந்து சிறிய அளவு கூட அறிகுறிகள் எதுவும் அவரால் அறிந்து கொள்ள இயலவில்லை. அவர் எப்பொழுது அழைத்தாலும் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொள்ளும் தெய்வசக்தி, தொடர்பு கொள்ளாததால் மனம் மிகவும் நொந்து போனார். அவரது நண்பர் பூஜாரி, “எதற்கும் பேச்சியம்மனுடன் தொடர்பு கொள்ள பூஜைகள் செய்து கேட்கலாம்” என்றதற்கு அவரும் அரைமனதாகச் சம்மதித்தார்.

பேச்சியம்மனின் அருள் வாக்குக் கேட்க ஹோமங்களும், பூஜைகளும் நைவேத்தியங்களும் செய்தவுடன், சிறு குழந்தையின் உடலில் சன்னத்தமாக பேச்சியம்மன் ஆவேசமாக இறங்கியது. குழந்தையும் ஆவேசமாக அழுதபடியே, “சகோதரி காளியை கேரள மந்திரவாதி வசப்படுத்தி விட்டான். அவன், தான் கைப்பற்றிய தேவியுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றான்” என்று அழுதது. பூஜாரியும், “இது எப்படி நடைபெற்றது அம்மா? காளிதேவி இப்போது எங்கே இருக்கின்றாள்? நம் தேவி காளியைத் திருப்பிக் கொண்டு வரமுடியுமா?” என்று பேச்சியிடம் கேட்டார். அதற்குப் பேச்சியம்மன், “திருப்பிக் கொண்டு வரும் செயல் எனது சக்திக்கு அப்பாற்பட்டது. கேரள எல்லையில் அதனைக் கடந்து செல்லும் முன்பு நாகம் தீண்டி அவன் மாண்டு போவான். அங்குள்ள ஊரார் அனைவரும் வந்து காணும்வரை, நாகம் அவன் இறந்துபட்ட உடல் மீது ஆடியபடியே இருக்கும்” என்று கூறியது.

பூஜாரியின் வேதனைக்கு ஓர் அளவே இல்லாமல் போய்விட்டது. கூடுதுறைக் காளியம்மனை மந்திரவாதி தனது வசத்தில் கொண்டு சென்ற நிகழ்வுக்குப் பின்னணியில் என்ன நடந்தது? என்ற கேள்விக்கும் குருநாதர் பதில் கூறினார். எதிர்பாராது நடந்து விட்ட ஒரு செயல் தான் காளிதேவியைக் கொண்டு செல்லக் காரணமானது! அது என்ன?
தமிழகத்தில் சரியான மழை இன்றித் தவித்த காலத்தில், மாட்டிற்குத் தீவனம் வேண்டிக் சில விவசாயிகள் மாட்டு வண்டியில் கேரளாவிற்குச் சென்றிருக்கின்றனர். அங்கு தான் தமிழக விவசாயிகளுக்கு வித்தியாசமான சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்தது.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button