ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
01•12•2016,
வியாழக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(154) மனிதனே புனிதன் —
நிலவொளியில் தியானம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பெளர்ணமி நாள் வீட்டிற்கு வெளியே வீதியில் மாலை ஏழுமணி அளவில், நிலவொளியில் தியானம் செய்ய முடிவு செய்து, சந்தனக் கரைசலை வாசலில் தெளித்தனர். அங்கு ஆசனப்பலகைகள் மீது வெள்ளை விரிப்பை விரித்தனர். தலையில் வெள்ளை நிறத்துணியைக் கட்டிக் கொண்டு தியானத்தில் அமர்ந்து விட்டனர். எதிர்ப்பாளர்கள் கூடி, “இப்படி இவர்கள் தியானத்தில் அமர்ந்து இருந்தால் ஊருக்குக் கேடு விளையும். இவர்கள் சக்தி பெறமுடியாதபடி தடுத்து நிறுத்துங்கள் எனக் கூச்சல் போட்டனர். சுவாமியின் வீட்டினருக்கும் பயம் வந்து விட்டது. “ஏதாவது நல்லது நடப்பதை நாம் தடுத்து விட்டோமா? கடவுளே காப்பாற்று” என வேண்டிக் கொண்டனர். நடு இரவு பன்னிரெண்டு மணிக்கு தியானம் நிறைவடைந்து உறங்கச் சென்றனர். உறக்கம் வரும்வரை ஜெபம்தானே, அதனைக் கடைப் பிடித்து இறைசக்தி பக்கத்துணை இருந்து பாதுகாத்து வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.
காலையில் சூரிய தியானம் செய்தபிறகு, பச்சைக் கற்பூரம் 108 கொண்டு, விபூதியின் மீது சிறிய அளவில் ஹோமம் செய்து வந்தனர். அதைத் தினசரி வழக்கமாக்கிக் கொண்டனர்.ஒரு நாள் காலையில் கானப்பன் என்பவர் தனது குழந்தையை எடுத்து வந்தார்.சுவாமியைக் கூப்பிட்டுத் தனது குழந்தையைத் தொட்டு ஆசீர்வதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். குழந்தையோடு பேச்சு மூச்சற்றுக் கிடந்தது.
தனது குழந்தையை வைத்தியரிடம் காட்டினாராம். பிழைப்பது அரிது என்று கூறிவிட்டாராம். எப்படியோ தனது குழந்தை இறந்தாலோ அல்லது பிழைதாதாலோ நாகு சுவாமி கையால் விபூதி மந்திரித்துப் பூசவேண்டும் என்று சொல்லி விட்டுக் குழந்தையைப் போல் தேம்பி அழுதார். சுவாமி தியானத்தில் அமர்ந்திருந்தார் சப்தம் கேட்டு எழுந்து வந்தவர் விபூதியுடன் வந்தார். இறைசக்தியையும், தனது குருநாதரையும் எண்ணிக் குழந்தையின் உடலில் விபூதிபூசினார்.”குணம் பெறுவாய்” எனக்கூறி அனுப்பி வைத்தார். இறையருளால் குழந்தை குணமடைந்தது.
ஒருசில தினங்களில் தனது குருநாதரைச் சந்திக்கும்படி நேர்ந்தது. தவத்திரு. வேணுகோபால சுவாமியை மாதேஸ்வரன் மலையில் சந்தித்த விபரத்தை நாகராஜன் சுவாமி கூறினார். அவரது அபிலாஷைபற்றிக் கூறும்போது, கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகு அவரது அபிலாஷை பூர்த்தி பெறும் என்றார். விபூதியின் பாடங்களைப் பற்றி இனிமேல் சொல்லித்தருவேன் என்றவர், “மகனே நாகராஜா, நான் யாருக்குமே தராத சோதனைகளையெல்லாம், உனக்குத் தருவதாக எண்ணுகின்றாயா? வாய்மையைக் கூறு” என்றார். அதற்கு நாகராஜன் சுவாமி, “எல்லாம் உமது செயல். துன்பங்களையும் நல்ல அனுபவமாக நீங்கள் தான் எந்தையே தந்தருளவேண்டும். எது நடந்தாலும் நன்மைக்கே என்ற மகானின் வார்த்தையை நம்புகிறேன்” என்றார்.
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.