ஏகாந்த சம்பாஷனை!

222

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

25•11•2016,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(148) மனிதனே புனிதன் —
ஏகாந்த சம்பாஷனை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தவத்திரு.வேணுகோபால சுவாமி நமது சுவாமியை அழைத்துக்கொண்டு வெளியே புறப்பட்ட போது, தவயோகினி , “மன்னிக்க வேண்டும் ஞான குருவே! இவர் முக்கியமான நபராகத் தோன்றுகிறது. எங்கள் சம்பந்தி ஐயா அவர்களிடமும் அறிமுகம் செய்து வைக்க விரும்புகிறேன். தயை கூர்ந்து அழைத்து வந்து விடுங்கள் சுவாமி” என்றதும் அவர் சிரித்தார். பிறகு அவர் நமது சுவாமியை அழைத்துக்கொண்டு கொண்டு புறப்பட்டுப் போனார். “நாகராஜா நாம் விரைவில் திரும்ப வேண்டும் ” என்று கூறிவிட்டு, அவருக்கே உரிய வேகமான நடையில் செல்ல, சுவாமி பின் தொடர்ந்தார். இருவருக்கும் ஆச்சரியம் காத்திருந்தது.

பெரிய மரத்தின் வேன்மீது காடா கதர்பனியன் அணிந்து கொண்டு, தூய வெண்மை நிற வேட்டியும், தோளில் துண்டுடன், கையில் மேல்புறமாக வட்டமாக வளைந்த கம்புடனும், அமர்ந்து கொண்டிருந்தார் சற்குரு ஸ்ரீ ஈஸ்வரர். கொஞ்சம் நேரம் ஏதோ மந்திரம்போல் மரங்களைப் பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார். திடீரென பலமாக காற்று வீச மரங்களின் அசையும் ஓசை பயங்கரமானது. அதனைக் கையை உயர்த்தி ஏதோ சொல்ல அடங்கி நிசப்தமானது!

மாலை மயங்கும் நேரமாக இருந்ததால் அவரின் முகம் சரியாக அடையாளம் தெரியவில்லையே தவிர, நமது சுவாமிக்குக் கண்டவுடனேயே அடையாளம் புரிந்து விட்டது. கன்றுக்குட்டிக்கு தனது தாய் பசுவை அடையாளம் கண்டு கொள்வதைப் போலும், எல்லா நேரமும் அவரையே நினைத்துக் கொண்டிருக்கும் நமது சுவாமி அவரது நிலைக் கண்டாலும் கூடத் தெரிந்து கொள்ளும் நிலையில் இருந்தார். தவத்திரு. வேணுகோபால சுவாமி, “அவரைப் பார்த்தவுடன் அன்பு ஊற்றெடுக்கின்றதே! சீக்கிரமே வாருங்கள் அவரிடம் போவோம்” என்று எட்டநடை போட்டார்.

அருகே சென்றபோது அவரைக் காணவில்லை. வெள்ளைநிற வேட்டி ஒன்று மரத்தில் சுற்றப்பட்டு, அருகில் உள்ள கொடியில் வட்டமாகச் சுற்றியபடியே லேசாகக் காற்றில் அசைந்தபடியே இருந்தது. தூரத்தில் இருந்து பார்த்தால் ஆள் ஒருவர் தமது கையில் வட்டமாகச் சுற்றிச் சுழன்று செல்லும் கம்பை பிடித்து, நின்று கொண்ணிருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. காண்பது கனவா?, நனவா?

பகவத் காரியம் நடந்து கொண்டிருக்கிறது. தேவை என்றால் தோற்றமும், அனுக்கிரகமும் கிடைக்கும். இல்லை என்றாலும் பகவானின் ஆசீர்வாதம் நமது எண்ணத்திற்கு ஒப்ப என்றுமே வந்து கொண்டும், கிடைத்துக் கொண்டும் இருக்கும். அங்கேயே அம்மரத்தின் கீழே அமர்ந்து ஞானகுரு தியானம் செய்யத் துவங்கினார். சற்குரு நாதரின் ஆசீர்வாதத்தால் அவரின் முகம் மிகுந்த தேஜஸ் உடையதாகத் தோன்றியது. தியானம் முடிந்த பிறகு அவர் நமது சுவாமியிடம் ஒரு வாக்குக் கேட்டார். நாகராஜன் சுவாமி ஆச்சரியமுடன் அவரிடம் தனக்காகப் பிரார்த்தனை செய்து வரும்படி கேட்டுக் கொண்டார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button