தவத்திரு.வேணுகோபால சுவாமி.

172

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

07•11•2016,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(131) மனிதனே புனிதன் —
தவத்திரு.வேணுகோபால சுவாமி.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“நாகராஜ் சுவாமி, எங்க குருநாதர் வேணுகோபால சுவாமியைச் சந்திக்க விருப்பம் உள்ளதா?” என்று தவயோகினி திருமதி. சுந்தரமம்மாள் கேட்டார்கள். “விருப்பம் தான் அம்மா, எப்போது என்று கூறுங்கள்” இது சுவாமி. நமது சுவாமியின் குருநாதர் ஏற்கனவே பழனி நடராஜா சுவாமி மற்றும் வேணுகோபால சுவாமி பற்றியும் சொல்லி, அவர்களைச் சந்திக்கச் சந்தர்ப்பம் ஏற்படும் என்றும் கூறி வைத்திருந்தார்கள். அதில் ஒன்று ஆரம்பமாகி விட்டது.

“பவானியில் எங்க சம்மந்தி ஒரு தியானசங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அதற்கு குருவாகத் தான் வேணுகோபால சுவாமி இருக்கின்றார்கள். தற்சமயம் மாதேஸ்வரன் மலையில் அவர்கள் தியானக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர்.”
“நீங்கள் வந்தால் உங்கள் ஆன்மிக சந்தேகங்களுக்கு, எங்களுடைய குருதேவரைக் கேட்டு எல்லா விளக்கமும் சொல்வார்கள். மூன்று நாள் பயணத்திற்குத் தேவையான, பணம், உடுப்புகள், போர்வை சகிதம் வந்து விடவேண்டும். வீட்டில் பெற்றோர் அனுமதியைப் பெற்றுத்தான் வர வேண்டும்.”

“எங்கள் சங்கத்தில் எல்லா மகரிஷிகளும் வந்து தங்கள் கருத்தைச் சொல்கிறார்கள். முன் எச்சரிக்கையாக இந்தக் கலியுகத்தில் மனிதர்களிடம் விதை நெல்லைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்களாம்! விதை நெல்லாக மாறும் மனிதன், கலியுகம் முடிந்து வரப்போகும் கல்கியுகத்தில் அவர்களெல்லாம் மீண்டும் மனிதர்களாகப் பிறப்பார்களாம்! நாமும் ஒரு விதை நெல்லாக வேண்டுமல்லவா? அதற்குத்தான் மாதேஸ்வரன் மலையில் கூடுகிறார்கள்.”

நீண்டதொரு கொள்கை விளக்கத்தை மிகச்சுருக்கமாகத் தனது பாணியில் அழகாக எடுத்துரைத்தார்கள். நமது சுவாமியும் கேட்டுக் கொண்டார்கள். தவத்திரு வேணுகோபால சுவாமி அவர்களைப் பார்க்கச் செல்வதில் இத்தனை விஷயங்கள் இருக்கின்றது என்பதில் முதலில் நமது சுவாமிக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது! மனிதனாக மீண்டும் பிறக்கச் செய்யும், விதை நெல்லைத் தேர்ந்தெடுக்கும் அந்த ஆன்மிக ஞான விவசாயி யார்? அவர் எப்படி இருப்பார்? நமது சற்குரு நாதரிடம் தெரிந்து கொள்ளாத அநேக விஷயங்களை, நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம், அதுவும் நமது குருநாதரின் ஆசியுடன் என்கிற எண்ணத்தில்
கடவுளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் சுவாமி!

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button