ஆஞ்சநேயரின் தாளியோலை ராமகாவியம்!

482

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(25) நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

ஆஞ்சநேயரின் தாளியோலை ராமகாவியம்!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

 ஶ்ரீ ராமரின் ஆணையின்படி தீர்த்த மகிமை பொருந்திய ராமேஸ்வரத்தில், சமாதி யோகத்தில் அமர்ந்து நித்திய வாசம் புரியும் ஶ்ரீ பதஞ்சலி மகரிஷியின் பாதுகாப்பில் தாளியோலைச் சுவடிகள் உள்ளன. அதன் பெயர் ராமகாவியம். மிக முக்கியத்துவம் வாய்ந்த அதனை யாத்தவர் குரு ஈஸ்வராலயம் நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேய மூர்த்தி ஆவார். இந்த வரலாற்றைத் தொடர்ந்து வாசித்து வரும் மெய்யன்பர்கள் அதன் உண்மைகளை, அருமை, பெருமைகளை நன்கு அறிந்து  கொள்ளலாம். இதற்கெல்லாம் காரணம் ஆஞ்சநேயர் தாம் செய்த யோகத்துடன் கூடிய தவமே காரணமாம்! பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் செய்திட்ட யோகதவத்தின் கனலினால் சகலவிதமான சஞ்சித கர்மாக்களை, அதாவது புண்ணிய பாவங்கள் அனைத்தையும் சுட்டெரித்தவர் ஆவார். அதனால் அவரது குடும்பத்தின் இருபத்தியொரு தலைமுறை முன்னோர்களின், பாவபுண்ணியங்கள் அழிந்துபட்டு அவர்கள் பிறவிப் பெருங்கடலைக் கடந்து முக்திநிலையை அடைகின்றார்கள். இப்படிப்பட்ட யோகிகள் மேன்மேலும் தாங்கள் கடைப்பிடிக்கும் கடும் தவத்தினால், பிராணாயாமம் கொண்ட சமாதி யோக பாக்கியத்தை அடைகின்றார்கள்.  இறைவனால் படைக்கப்பட்ட பிரபஞ்சம் முழுவதையும், அண்டசராசரங்கள் அனைத்தையும் ஒருங்கே காணும் பாக்கியத்தையும் பெறுகிறார்கள். அன்றைய ஞானியர்கள் வானவியல் சாஸ்த்திரங்களை அறிந்து கொண்டு உலகிற்குத் வெளிப்படுத்தியதும்

அவ்வாறுதான்

 

புனிதம் மிகுந்த இவர்களை நாடும் பிறறையும் அனுகிரஹிக்கும் ஆற்றல் இவர்களிடம் இருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். இவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் காலங்களில்  மற்றவர்களிடம் விருந்துண்ணச் செல்ல மாட்டார்கள். அப்படி அவர்கள் உண்டு விட்டால் அங்கு இருப்பவர்கள் அனைவரும் புண்ணியம் பெற்று விடுவார்கள். ஜீவசமாதி அடைந்த இவர்கள் இருக்கும் இடங்களில் அமையப்பெற்ற ஆலயங்கள், மிகவும் ஆற்றல் சக்தி பெற்றதாகவும், அங்கு சென்று வழிபடும் பக்தர்களின் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும், நிறைவேறிக் கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காணலாம். காரணம் அங்கு பூஜையில் தெய்வங்களுக்குப் படைக்கப்படும் நெய்வேத்தியங்களை, சமாதி யோகத்தில் இருக்கும் புனிதயோகிகளும் பெறுவதால் ஆசியருள்கின்றார்கள். இறையருளைப் பூரணமாகப் பெற்றிருக்கும் இவர்கள் ஆலயத்திற்கு வந்து நம்பிக்கையுடன் வழிபடும் அன்பர்களின் மனோபீஷ்டம் நிறைவேற உதவி  புரிகின்கின்றார்கள்! ஆஞ்சநேயர் வாழும் குரு ஈஸ்வராலயம் நாகவனத்தில் அவ்வாறே அருள் புரிந்து வருவதும் கண்கூடு. ஆஞ்சநேயர் யோகியர்களுக்குத் தேவையான அநேக  ரகசிய வித்தைகளையும், தெய்வீக உண்மைகளையும் தமது ராம காவியத்தைத் தாளியோலையில் பதிவு செய்து உள்ளார்.

 

இனி, ராவணேஸ்வரன், நரகலோகத்திற்கு வெற்றிகரமான திக்விஜயம் செய்த பின்பு லங்காபுரிக்கு மகிழ்வுடன் திரும்பினான். தான் கண்ணுற்ற நரகலோகத்திற்கு இணையான, பிறறைத் துன்புறுத்திக் கொடுமைகள் செய்யவும், கடுமையான தண்டனைகள் நிறைவேற்றவும், இயந்திர சாதனங்கள் உடைய பாதாள நகர் ஒன்றை சிருஷ்டித்தான். கொடுமைகள் நிறைந்த பாதாள நகரதத்தை சர்வஜாக்ரதையாகக் ஆட்சிசெய்துவர, அயில்ராவணன், மயில் ராவணன் என்ற இரு சகோதர்களை நியமித்தான். அவர்களின் உயிர்நிலைகள் கொடும் விஷம் வாய்ந்த வண்டுகளுக்குள் பிரம்மதேவரை ஆணைக்கு உட்படுத்தி பத்திரமாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தீண்டினால் மரணம் சம்பவிக்கும் ஆற்றலுடைய வண்டுகள் பாதாள நகரம் முழுவதும் பல்கிப்பெருகின. 

வண்டுகளின் பெருங்கூட்டத்தில் அயில்மயில் ராவண சகோதரர்களின் உயிரைச் சுமந்த வண்டுகளும் சுற்றிப் பறந்து திரிந்தன. இத்தகைய கொடூர விந்தைகளை அசுரகுணக் குன்று தசகண்ட ராவணேஸ்வரன் அதீத விருப்பம் கெண்டு சந்தோஷமாகச் செய்து வந்தான். ராவணனின் பாதாளக் கோட்டையில் உலவும் வண்டுகள் அமிர்த சக்தியைக் கொணர்ந்து, அயில் ராவணன், மயில் ராவணன் இருவருடைய உடலிலும் அனுதினமும் சேர்த்து வந்தன! அதனால் அவர்கள் இறவாமை பெற்று, சகல சுகங்களையும் அனுபவித்து இன்புற்று வாழ்ந்தும், ஆணவத்தால்  அநேக அதர்மங்களைச் செய்து வந்தனர். பாதாள நகரத்தை மகரத்துவஜன் என்பவன் காவல் புரிந்து வந்தான். இவன் ஆஞ்சநேயரின் புதல்வன் என்பது ஞானியர்களின் கருத்தாகும்!? நைஷ்டியப் பிரம்மச்சாியான அனுமானுக்குப் புதல்வன் உண்டா? என்ற கேள்விக்கு “ஆம்” என்பதே பதிலாகும். ஆச்சரியம் மிக்க இது ஆஞ்சநேயரே தனது மகனிடம் நேரில் அறிந்த உண்மையாகும்! 

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

ஓம் ஶ்ரீ ஈஸ்வர குருநாதா சரணம்! ஓம் குருவே துணை!

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button