ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.
வணக்கம் குருஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!
(1)
நாகவனம் பள்ளி கொண்ட ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தெய்வீக சமர்ப்பணம் :-
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
குரு ஈஸ்வராலயம் நாகவனம் பள்ளி கொண்ட ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம் மீண்டும் தோன்றிடக் காரணமானவரும், பரிகார ஸ்தலத்தை தவத்திரு ஸ்ரீ நாகராஜன் சுவாமி அவர்களுக்கு காண்பித்தவரும், நாகவனத்தில் ஆஞ்சநேயர் குடிகொண்டுள்ள வரலாறு பற்றித் தமது அருள் வாங்கினால் தந்தருளியவரும்,
ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் அவதார மூர்த்தியுமான பகவான் ஸ்ரீ ஈஸ்வர பட் சற்குரு நாதருக்கும்;
குரு ஈஸ்வராலயம் நாகவனம் பள்ளி கொண்ட ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாற்றைப் தமது திவ்ய ஓலைச் சுவடிகள் மூலம் பதிவு செய்து உலகினுக்குத் தந்தருளிய மகா சித்தர் ஸ்ரீ அகத்தியர் பெருமானுக்கும், குரு ஈஸ்வராலய மெய்யன்பர்களாய் விளங்கும் பக்தர்கள் தங்களது ஆயிரமாயிரம் கோடி நன்றிகளை, அவர்களுடைய தெய்வீகத் திருப்பாதங்களைப் பணிந்தே, இப் புனித, புண்ணிய நூலைச் சமர்ப்பணம் செய்கிறோம். நன்றி!
சற்குரு நாதரின் ஆசியுரை :-
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இறைவன் ஒருவனே என்று வேத நூல்கள் கூறுவது உண்மையாகும். எங்கும் நிறைந்தவரும், எதிலும் இருப்பவருமாகிய ஆண்டவரின் உள்ளேயே அண்ட சராசரங்கள் அடங்கியிருக்கின்றன. இதனை அறிஞர் பெருமக்கள், அறிந்து, உணர்ந்து எடுத்துரைத்தனர். விருப்பு, வெறுப்பு அற்றவரும், பிறப்பு, இறப்பு இல்லாதவரும் ஆகிய ஆண்டவர் மட்டுமே ஜோதிப் பிரகாச வடிவினர் என்று போற்றப்படுகிறார்.
ஆண்டவரின் அடியார்களாகிய பக்தர்கள், வினைப்பயனாய் தீமை சக்திகளின் பிடியில் அகப்பட்டு அல்லலுற நேர்கிறது.
பக்தர்களைக் காக்கும் பொருட்டே ஆண்டவர், அவதார மூர்த்தி யாக வெளிப்படுகின்றார். அவர் பற்பல தெய்வீக வடிவங்களை ஏற்கின்றார். தீமை சக்திகளை நீக்கி நல்லடியார்களுக்குப் பாதுகாப்பையும், நிம்மதியான வாழ்வையும் தருபவர் அவரே!
உலக மாந்தர் இறைவன் மீது நம்பிக்கை கொண்டு, ஏழை பங்காளனாகிய அவரின் தெய்வீக நாமத்தைச் ஜெபிக்கின்றார்கள். ஆலயங்களில் கூடி ஆண்டவரின் தெய்வீகப் புகழ் பாடியும், மகிழ்வுடன் அவரையே வழிபடுகின்றார்கள். மேற்கூறிய செயல்களினால், வழிபாடுகளினால் பக்தர்கள் தங்களை மேலும் புனிதம் மிக்கவர்களாக ஆக்கிக் கொள்கின்றார்கள்.
ஆண்டவரின் அவதார மூர்த்தி களாகிய தெய்வங்கள், உள்ளன்போடு மனமுருகி
பக்தர்கள், வழிபாடுகளினால் வேண்டிவரும் போது, துன்பங்களையும், துயரங்களையும் போக்குகின்
றார்கள். அவ ரவர்களின் விருப்பங்களையும் நிறைவேற்றி அருள்புரிகின்றார்கள்.
இறைவன் நன்மை, தீமைகள் இரண்டையுமே படைத்திருக்கின்றார். நல்லதையே எண்ணி தெய்வங்களை வழிபடும் போது, வாழ்வில் நன்மைகள் அனைத்தும் நடைபெறுகின்றன. தெய்வீக சிந்தனைகளுக்கும், உயர்ந்த எண்ணங்களுக்கும் எப்போதும் ஆற்றல் சக்திகள் மிக அதிகமாக ஈர்ப்பில் அனுகிரகிக்கும். இதனையே உன்னத வழி என்று கூறுவர்.
அறியாமையால் தீமை சக்திகளை எண்ணி வழிபடுபவர்களுக்கு வாழ்வில், நன்மைகள் ஏற்படுவதில் தடைகள் உண்டாகி விடுகின்றன. காரணம் அவர்கள் உபாசிக்கும் சக்திகளை, ஆவேசம் உண்டாக்கச் செய்திடும் வழிபாட்டு முறைகளும், முறையற்ற யாகங்களும் தான்! இது உலகினுக்கு நன்மைகளை ஏற்படுத்தாது.
நல்லதையே நாம் எண்ணி, உயர்வான எண்ணத்தினால், கருணாமூர்த்தியான ஆண்டவரை, சாந்த குணத்துடன்,
தெய்வீகத் தன்மையுடன் வழிபடுவோம். வாழ்வில் நன்மைகள் அனைத்தையும் அடைந்திடுவோம். குரு ஈஸ்வராலயம் நாடிவரும் பக்தர்களுக்கும் தெய்வீக சக்திகள் எப்போதும் அருளாசியை வழங்கிக் கொண்டே இருக்கின்றன. வாரீர் பக்தர்களே! மகிழ்ச்சியுடன் அருள் பெறுவோம்!
அருளாசிகள்,
தவத்திரு ஸ்ரீ நாகராஜன் சுவாமி,
நாகவனம் பள்ளி கொண்ட ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,
குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை,
பொள்ளாச்சி.
Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.