மனதின் அசரீரிக் குரல்!

241

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

02•11•2016,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(116) மனிதனே புனிதன் —
மனதின் அசரீரிக் குரல்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தியானததில் ஈடுபாடு கொண்ட அன்பர்களுக்குத் தன்மீது செயல் கொள்கின்ற அதீத சக்திகளைப் பற்றிய அறிவு மிகவும் முக்கியம் வாய்ந்தது! அது கிடைத்து விட்டால் நமது தியானன வாழ்வினுக்கு அனுகூலமாகச் செய்து கொள்ளலாம். நன்மைகளைப் பெற்று ஆன்மிகத்தில் முன்னேற்றம் அடையலாம். அதனை அறிந்து கொள்ளத்தான் குருநாதன் வழியில் செல்வது. இல்லாவிட்டால் தனது சொந்த முயற்சியால் முன்னேற இறையருள் சகாயம் வேண்டும்.

அடுத்து அவருக்குக் கூறிய பாடபோதனைகள், தியானம் பற்றியதாக மட்டுமல்லாமல் அதனுடன் விமோச்சன பாடங்களும் அடங்கும். அநேக வனங்களுக்கும் சென்று தவம் செய்து வந்த அவரை, இருந்த இடத்திலேயே தவமிருந்துவர சற்குரு நாதர் அனுகிரகித்தார். அவர் பெற்றது அபூர்வ தவ வாழ்வு. அனைவரும் நலம் வாழத் தியானம் செய்து வருபவர். நன்றி கூறுவோம்.

இவர்களது பிரயாணம் ஆந்திர தேசம் ஐதராபாத்தில் இருந்து சோதனையாகவே மாறிவிட்டது. காரணம் வங்கக்கடலில் தோன்றிய புயல், தமிழகம் முழுவதும் பெரும் மழைப்பொழிவை ஏற்படுத்தி விட்டது. ஆந்திராவில் நெல்லூர் பகுதியில் கரை கடந்த புயல் வெள்ளக்காடாக மாற்றி விட்டிருந்தது. பேருந்தும் பயணம் கேள்விக் குறியானது?

வண்டி ஓட்டுநர் மெதுவாக சென்று விடலாம் என்று ஊக்கம் அளித்தார். சில இடங்களில் பேருந்துக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பாதையில் இருந்து விலகி விடாமல் இருக்க, தேங்காய் வியாபாரிகள் பேருதவிகள் புரிந்தனர். அவர்கள் கொண்டு வந்திருந்த சிலம்பாட்டக் கம்புகளை, பாதையின் விளிம்புகளில் இருபுறமும் தரையில் ஊன்றியபடி வரிசை கிராமமாக நின்றனர். மிகப்பெரிய கண்மாய் போல் அது இருக்க அது நிறைந்து அருகே இருந்த வழித்தடங்களையும் முடிய படி வெள்ளம் சென்று கொண்டிருந்தது. நீச்சல் தெரிந்த வியாபாரிகளின் சாகசத்தால் அன்று பேருந்தும் பயணிகள் அனைவரும் தப்பிப்பிழைத்தனர். இருபுறமும் அவர்கள் நின்று கொண்டிருக்கும் எல்லைக்குள் பேருந்து ஓட்டுனர் நன்றி கூறியபடி ஓட்டிச் சென்றது மறக்கவே முடியாத நிகழ்ச்சியாக அமைந்து விட்டது.பாதுகாப்பான இடம் வந்து சேரும் வரை போர் வீரர்களைப் போல் அணிவகுத்து பேருந்தைக் கொண்டு சென்றனர்.

வெள்ளத்தைக் கண்டு மனம் துடித்தபடி இருந்த ஜனங்கள், வெள்ளத்தில் பவணி வரும் வாகனத்தைக் கண்டவுடன் ஆரவாரம் செய்து வரவேற்றனர். இவ்வளவு பெரிய வெள்ளத்தில் இப்படியோரு சம்பவம் நடந்தது, இறைவனது கருணைதான என எண்ணுகிறேன்.நன்றி!

நமது சுவாமி குகைத் துறவியுடன் சேர்ந்து தியானம் இருந்தபோது தியானத்தின் இரண்டு நிலைகள் கூறப்பட்டது. இருவரும் கேட்டுக் கொண்டனர். முதல் நிலையை குகைத் துறவி கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இமாலயம் சென்று கொஞ்சகாலங்கள் திபெத் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஏழுபேர் ஜீவ சமாதியான இடத்தில் தங்கி தவம் புரிந்து வர வேண்டுகோள் விடப்பட்டது. பிறகு அவரிஷ்டப்படி எங்கும் தவம் புரிந்து வரலாம்.

நமது சுவாமிக்கு தியானத்தின் இரண்டாவது நிலை அருளப்பட்டு, சற்குருநாதர் காட்டும் வழி வகைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும் எனவும் அருளப்பட்டது. வால்மீகி மகரிஷியும், சதுரகிரி சித்தர்களும் ஆஞ்சநேயரும் சேர்ந்து, அவர்களால் மறைக்கப்பட்ட பரிகார ஸ்தலத்தைக் கலியுகத்தில் 2000 – ம் ஆண்டில் சற்குருநாதர் ஓம் ஸ்ரீ ஈஸ்வரர் வெளிப்படுத்துவார் என்றும் அங்கு வரும் பக்தர்களுக்கு நேர்மறைப் பிரார்த்தனைகளைச் சொல்லித்தர வேண்டும் என்றும், பஞ்சபூதங்களால் வரும் கலியுக ஆபத்துக்களில் இருந்து மீட்சிக்கு உண்டான உதவிகளையும், பரிகாரங்களையும் கற்றுக் கொடுத்து வரவேண்டும் எனவும் கூறப்பட்டது.

சமாதிக்குத் தேவையான பிரார்த்தனை செய்து வர உத்தரவும் கிடைக்கப் பெற்றது. யார் அந்த உத்தரவுகளை இடுகின்றார்கள்? உலக நன்மையைக் கருத்தில் கொண்டுள்ள தெய்வீக சக்திகளும், அவர்களால் இயக்கப்படும் தெய்வீக சித்தர்களும் இதன் பின்னணியில் இருந்து செயல்பட்டு வருகின்றார்கள். உலக மக்களைப் பேரழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்கின்ற கருணையுள்ளம் கொண்டு வழிநடத்த வரும் அமானுஷ்ய சக்திகளுக்கு நன்றியைக் கூறக் கடமைப் பட்டுள்ளோம்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button