துறவியிடம் ரகசியம்!

190

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

01•11•2016,
செவ்வாய்க்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(115) மனிதனே புனிதன் —
துறவியிடம் ரகசியம்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பயணம் வந்த வியாபாரிகள் அனைவரும் வியாபார ரீதியில் கைக்கடிகாரங்கள், புடவைகள் என்று வாங்கிக் குவித்து விட்டனர். நல்ல குடும்பத்தினர். நிம்மதியாகப் பயணமும் செய்து வந்தனர். அவர்களுக்கும் சில தொல்லைகள் உடன் வந்த மற்றவர்களால் ஏற்பட்டு விட்டது. பம்பாயில் சில இடங்களுக்குச் சென்று தங்களின் உடலைக் கெடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களை தினமும் மருத்துவ விடுதிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டதால் தேங்காய் வியாபாரிகள் சிறிது சங்கடமும் கொண்டனர். எப்படியோ உடன் வந்தவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற மனிதாபிமானமும் மேலோங்க அவர்களுக்குப் புத்தி சொல்லியும், ஆறுதல் தேறுதலும் சொல்லி வைத்தனர். வீடு திரும்பியபின் சிலர் பால்வினை நோயின் கொடுமையால் அவதியுற்று, விரைவில் அவர்கள் மரணத்தில் நிம்மதி பெற்றார்கள்?

ஆன்மிகம் என்பதே மனித வாழ்வை தெய்வீக வாழ்வாக மாற்றி அமைத்துக்கொள்ள ஏற்பட்டதே! உன்னத ஓர் வாழ்வினுக்குத் தேவையான அடிப்படை ரகசியங்கள் நமது சுவாமி அவர்களுக்குப் போதிக்கப்பட்டன. குகைத் துறவியும் சுவாமியும்
பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

“நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள தெய்வீக வாழ்க்கைக்கு முதலில் உங்களைப் பற்றிய அறிவினை விருத்தி செய்யவேண்டும்.”

” பிறகு உங்களிடம் செயல்படுகின்ற சக்தி பற்றிய அறிவை, அவசியம் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குண்டான அறிவை விருத்தி செய்து கொள்ளவும்.”

“உங்களைப் பற்றியும், உங்களிடம் செயல்பட வருகின்ற சக்தி பற்றிய அறிவையும் விருத்தி செய்து கொள்ளவும். அறிந்து கொண்டு, அவைகளையெல்லாம் உங்களுக்குச் சாதகமாக(உங்கள் தலை எழுத்து)
மாற்றி அமைத்துக் கொள்வீர்!
நீங்கள் அறிவுள்ள விவேகிகள்! உங்களது ஆன்மிக வளர்ச்சி சிறப்படையும்.”

உங்களது தியானம், இறைவன் மீது நம்பிக்கையுடன், இறைவன் தருகின்ற ஆற்றல் சக்திகளை உங்களது ஆன்மாவில் பதிவு செய்து கொள்ளவும் வேண்டும். மனம் உங்களது ஆத்ம சிந்தனையில் லயமானால் மட்டுமே, அது ஆற்றல் பெற்றதாக மாறிவிடும். பிறகு மனம் இந்தப் பிரபஞ்ச சக்தியில் இருந்து உங்களுக்குத் தேவையான அனைத்தையும் அறிந்து சொல்லும் உயர் சாதனமாக மாறிவிடும்.”

“உங்களைப்பற்றியும், உங்களது உலகினைப் பற்றியும் உள்ள உங்களின் கேள்விகளுக்கு விடைகளை, மனம் ஆன்மாவில் இருந்து பெறுவதை நீங்கள் ஆன்மானுபவமாக அறிந்து கொள்வீர்கள். இனி தியானத்தின் இருவித நிலைகளில் இருந்து அனுபவம் பெறும் வழிகள் கூறுகிறோம். கவனம்!”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button